இனியாவின் வாழ்க்கைக்காக சண்டை போடும் பாக்கியா, சுதாகர் சொன்ன வார்த்தை - பாக்கியலட்சுமி

By subhashini · 9/6/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் நிதீஷ், அவன் உன்னுடைய எக்ஸ் தான் என்று எனக்கு ஏற்கனவே தெரியும். உனக்கு என்ன அவனோட பேச்சு? நீங்கள் வெளியே எல்லாம் சுத்தி இருக்கீங்களா? என்று ரொம்ப மோசமாக கேள்வி கேட்டார். இனியா, அப்படி எல்லாம் எதுவும் இல்லை. நான் இனி அவனுடன் பேசவும் இல்லை என்று சொன்னார். இருந்தாலுமே விடாமல் நிதிஷ், இனியாவை நோண்டி நோண்டி கேள்விப்பட்டு கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் இனியா தூங்கி விட்டார். ஆனால், நிதிஷ் ஒரு சைக்கோ மாதிரி இரவு முழுவதும் விழித்துக் கொண்டு இனியா காதல் விஷயத்தைப் பற்றியே புலம்பிக் கொண்டு இருந்தார்.

மறுநாள் காலையில் இந்த விஷயத்தை வீட்டில் உள்ள எல்லோரிடமும் நிதிஷ் சொல்லி விட்டார். வீட்டில் யாருமே இனியாவிடம் முகம் கொடுத்து கூட பேசவில்லை. இனியாவும் அவர்களுடன் சகஜமாக பேசப்போனார். ஆனால், யாருமே பேசவில்லை. அவளுக்கு சாப்பாடும் போடவில்லை. ஒரு கட்டத்தில் நிதிஷின் அம்மா, நீ நல்ல பொண்ணு என்று நினைத்து தான் உன்னை திருமணம் செய்து வைத்தோம். ஆனால். நீ இப்படி செய்வாய் என்று நான் நினைக்கவில்லை. உங்கள் குடும்பம் எங்களை மொத்தமாக ஏமாற்றி விட்டது என்று கோபப்பட்டார். உடனே சுதாகர், தன் மனைவியை அமைதியாக இருக்க சொன்னார். பின் இனியா அங்கிருந்து கிளம்பி விட்டார்.

பாக்கியலட்சுமி:

இனியா, தன்னுடைய அம்மாவை பார்க்க ஹோட்டலுக்கு வந்தார். இனியாவின் முகம் வாடி போய் இருந்தது. இதை பார்த்து பாக்கியா, இனியாவிடம் விசாரித்தார். ஆனால், இனியாவால் எதுவுமே சொல்ல முடியவில்லை. கண்கலங்கி அழுதார். பின் இனியா, உண்மையை சொல்லாமல் ரெஸ்டாரன்ட் விஷயத்தால் தான் கஷ்டமாக இருக்கிறேன் என்று பொய் சொன்னார். பின் பாக்கியா, இனியாவிற்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார். வீட்டிற்கு வந்த இனியாவிடம் நிதிஷ், ஆகாஷை பார்க்க போனாயா? எதற்காக உங்க அம்மா ஓட்டலுக்கு போகிறாய்? என்று ரொம்ப மோசமாக அவரிடம் சந்தேகப்பட்டு சண்டை வாங்கினார்.

கடந்த வாரம் எபிசோட்:

இதனால் இனியா ரொம்பவே மனமடைந்து விட்டார். பின் தன்னுடைய அப்பாவிற்கு ஃபோன் செய்து பேச வேண்டும் என்று கூப்பிட்டார். மறுநாள் காலையில் சுதாகர் வீட்டில் யாருமே இனியாவிடம் முகம் கொடுத்து கூட பேசவில்லை. அந்த சமயம் பார்த்து வந்த கோபி, இனியாவை அழைத்து போனார். அப்போது இனியா,
எதற்கு இந்த திருமணம் எனக்கு செய்து வைத்தீர்கள். ஆகாஷை காதலிக்கும் விஷயம் தெரிந்த உடனே நிதிஷ் என்னிடம் நடந்து கொள்ளும் விதமே சரியில்லை. வீட்டில் எல்லோரிடமே சொல்லிவிட்டார். யாரும் என்னிடம் சரியாக பேசுவதில்லை. என்னை நடத்தும் விதமும் வேறு மாதிரி இருக்கிறது என்று நடந்ததை எல்லாம் சொன்னார். இதை கேட்டு கோபி ஷாக் ஆனார். பின் கோபி, எப்படியாவது உன்னுடைய வாழ்க்கையை சரி செய்கிறேன் என்று இனியாவிற்கு ஆறுதல் சொன்னார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோபி, இனியா ஆகாஷை லவ் பண்ண விஷயம் நிதிஷிக்கு தெரிந்து விட்டது. இதனால் நிதிஷ் அவருடைய அப்பா, அம்மாவிடம் சொல்லிவிடுங்கள். இதனால் மொத்த குடும்பமே இனியாவை நடத்தும் விதம் வேறு மாதிரி இருக்கிறது என்று சொல்கிறார். இதைக் கேட்டவுடன் பாக்கியா ரொம்பவே வருத்தப்படுகிறார். இன்னொரு பக்கம் இனியாவை பார்த்து நிதிஷும் அவருடைய அம்மாவும் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். கோபத்தில் இனியாவும் அவர்கள் செல்வதற்கெல்லாம் பதில் கொடுக்கிறார். ஒரு கட்டத்தில் கோவப்பட்ட நிதிஷ், என்னுடைய அப்பா அம்மாவிடம் இப்படி பேசக்கூடாது. வாயை மூடிக்கொண்டு இருக்கணும் என்று இனியாவை ரொம்ப மோசமாக திட்டுகிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப் பின் சுதாகரின் வீட்டிற்கு கோபி, பாக்கியா இருவரும் வருகிறார்கள். அப்போது கோபி, இனியா- ஆகாஷ் காதலித்த விஷயத்தை பற்றி பேசுகிறார். இதனால் நிதிஷ் பயங்கரமாக கோபப்படுகிறார்.
உடனே பாக்கியா, என் ரெஸ்டாரன்ட் விஷயத்தில் அமைதியாக இருந்தேன். அதனால் என் மகளின் வாழ்க்கையில் அமைதியாக இருக்க மாட்டேன் என்று சொல்கிறார். நிதிஷ், உங்கள் மகள் இன்னமும் ஆகாஷ் உடன் தொடர்பில் தான் இருக்கிறார் என்று இனியாவை பற்றி தவறாக பேசுகிறார். இதனால் கோபப்பட்ட பாக்கியா, சுதாகரிடம் கடுமையாக பேசுகிறார். உடனே கோபி, பாக்கியாவை அமைதியாகி விட்டு எதுவாக இருந்தாலும் நாம் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full