கோபியின் சுயரூபத்தை அறிந்த பிள்ளைகள், ராதிகா வீட்டிற்கு வந்த போலீஸ் - விறுவிறுப்பில் பாக்கியலக்ஷ்மி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் கோபி செய்த சூழ்ச்சியால் எழில் படத்தின் பூஜைக்கு பாக்கியாவை வரவிடாமல் தடுத்து விட்டார். இதனால் பாக்கியாவும் மனம் உடைந்து அழுது கொண்டு வெளியே போனார். ஆனால், எழில் தன் படத்திற்கான டைட்டிலில் பாக்கியலட்சுமி என்று வைத்து இருந்தார். அதை பார்த்த உடனே எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். ஆனால், கோபி ஷாக்காகி கோபப்பட்டார். இதையெல்லாம் வெளியில் நின்று கேட்ட பாக்யா ஆனந்தத்தில் அழுதார்.
பின் பாக்கியா ரெஸ்டாரண்டில் புதிய ஆர்டருக்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்தது. அப்போது ஆனந்திற்கு கோபி போன் செய்ய, உண்மையை எல்லாம் பாக்கியா தெரிந்து கொண்டார். இதையெல்லாம் கேட்டு எல்லோரும் ஷாக்காகி இருந்தார்கள். அப்போது பாக்கியா, எனக்கு இந்த விஷயம் ஏற்கனவே தெரியும் என்றார். அப்போது ஆனந்த், தான் செய்த தவறை உணர்ந்தார். நான் தான் கோபியிடம் நடிக்க சொல்லி இருந்தேன். இந்த விஷயம் என் மாமியாருக்கும் தெரியும் என்றார் பாக்கியா. உடனே ஈஸ்வரி, ஆனந்த் சொன்ன விஷயத்தை பற்றி சொன்னார்.
பாக்கியலட்சுமி:
மேலும், இனியா- செழியன் இருவரும் பாக்யா பூஜைக்கு வராததை பற்றி பேச, எழில் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார். இன்னொரு பக்கம் ராதிகா வீட்டிற்கு வந்த பாக்கியா, கோபியிடம் பயங்கரமாக சண்டை போட்டார். அப்போது அவர், என்னுடைய ரெஸ்டாரண்டில் நீங்கள் செய்த வேலை எல்லாம் தெரியும். கெட்டுப் போன சிக்கனை வைத்து என்னை அழிக்க மக்களுடைய உயிரில் விளையாடுவதா? கேவலமா இல்லையா? என்று பேசி இருந்தார். உண்மை அறிந்த ராதிகா, எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார். பின் பாக்கியா சவால் விட்டு வந்தார்.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோடில் ராதிகா, கோபி செய்த வேலையை பற்றி திட்ட, கோபி சமாளித்தார். ஆனால் ராதிகா, பயங்கரமாக கொந்தளித்து கோபப்பட்டார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி, கோபி செய்த வேலையை பற்றி எழில் இடம் சொன்னார். உடனே எழில் கோபப்பட்டு கோபியை சந்தித்து பேசி இருந்தார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது உங்கள் மூலமாக எனக்கு எந்த வேலையும் வேணாம் என்று எழில் சொல்லிவிட்டு வந்தார். இன்னொரு பக்கம் பாக்கியா, போலீஸ் ஸ்டேஷனில் கோபி மீது கம்பளைண்ட் கொடுத்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா வீட்டிற்கு வருகிறார். அப்போது கோபியை பற்றி வீட்டில் ஈஸ்வரி பேசிக் கொண்டிருக்கிறார். பாக்கியாவும் நடந்ததை சொல்ல செழியன் ஷாக்கானார். உடனே இனியா, படப்பிடிப்பிற்கு வராததை குறித்து பாக்யாவை குறை சொல்லியும் திட்டியும் பேசிக் கொண்டிருக்கிறார். உடனே ஆத்திரத்தில் செல்வி, எழில் தான் வரக்கூடாது என்று சொல்லிவிட்டார். மனம் உடைந்து இருக்கிறார் பாக்யக்கா என்று சொன்னவுடன் எல்லோருமே வருத்தப்படுகிறார்கள். பின் பாக்கியா நடந்த உண்மையை சொல்ல இனியா, செழியன், ஈஸ்வரியால் எதுவுமே பேச முடியவில்லை.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் ராதிகா, கோபியின் மீது பயங்கர கோபத்தில் இருக்கிறார். அவர் செய்த தவறை சுட்டிக்காட்டி பேசிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் எழில் தன்னுடைய அப்பா செய்த வேலையை பற்றி அமிர்தாவிடம் சொல்லி ரொம்ப வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருக்கிறார். மறுநாள் காலையில் போலீஸ் கோபி வீட்டிற்கு வரவில்லை என்று செல்வி வெளியே உள்ளே சென்று கொண்டிருக்கிறார். அப்போது வந்த போலீஸ் கோபியை விசாரிக்கிறார்கள். இதனால் ராதிகா, அவர் அம்மா ரொம்ப ஷாக் ஆகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.