ஆத்திரத்தில் கோபியை வெளுத்து வாங்கிய ராதிகா, அதிரடியாக பாக்யா எடுத்த முடிவு - பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் கோபி செய்த சூழ்ச்சியால் எழில், தன் படத்தின் பூஜைக்கு பாக்கியாவை வர கூடாது என்றார். இதனால் பாக்கியாவும் மனம் உடைந்து அழுது கொண்டு வெளியே போனார். பின் எழில் தன் படத்திற்கான டைட்டிலில் பாக்கியலட்சுமி என்று வைத்து இருந்தார். அதை பார்த்த உடனே எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். ஆனால், கோபி ஷாக்காகி கோபப்பட்டார். இதையெல்லாம் வெளியில் நின்று கேட்ட பாக்யா ஆனந்தத்தில் அழுதார். இன்னொரு பக்கம் வீட்டில் பாக்கியா, ஈஸ்வரியிடம் புதிய ஆர்டரை பற்றி பேசி வலுக்கட்டாயமாக ரெஸ்டாரண்ட்க்கு அழைத்து வந்தார்.
அங்கு விறுவிறுப்பாக வேலைகள் எல்லாமே நடந்து கொண்டிருந்தது. பின் செழியன், இனியா இருவருமே எழிலின் பூஜைக்கு பாக்கியா வராததை குறித்து திட்டி கொண்டு இருக்க, பாக்யாவிற்கு சப்போர்ட் செய்து ஜெனி பேசி இருந்தார். இந்த வாரம் ஆர்டரை நல்லபடியாக பாக்யா செய்து முடித்து இருந்தார். அப்போது ஆனந்திற்கு கோபி போன் செய்ய, உண்மையை எல்லாம் பாக்கியா தெரிந்து கொண்டார். இதையெல்லாம் கேட்டு எல்லோரும் ஷாக்காகி இருந்தார்கள். அப்போது பாக்கியா, எனக்கு இந்த விஷயம் ஏற்கனவே தெரியும்.
பாக்கியலட்சுமி சீரியல்:
இந்த பிரச்சனை நடந்தபோதே ஆனந்தை விசாரித்து தெரிந்து கொண்டேன். அப்போது அவர், தான் செய்த தவறை உணர்ந்தார். நான் தான் கோபியிடம் நடிக்க சொல்லி இருந்தேன். இந்த விஷயம் என் மாமியாருக்கும் தெரியும் என்றார். உடனே ஈஸ்வரி, ஆனந்த் சொன்ன விஷயத்தை பற்றி சொன்னார். நேற்று எபிசோட்டில், இனியா- செழியன் இருவரும் மீண்டும் பாக்யா பூஜைக்கு வராததை பற்றி பேச, எழில் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார்.
நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் ராதிகா வீட்டிற்கு வந்த பாக்கியா, கோபியிடம் பயங்கரமாக சண்டை போட்டார். அப்போது அவர், என்னுடைய ரெஸ்டாரண்டில் நீங்கள் செய்த வேலை எல்லாம் தெரியும். கெட்டுப் போன சிக்கனை வைத்து என்னை அழிக்க மக்களுடைய உயிரில் விளையாடுவதா? கேவலமா இல்லையா? என்று பேசி இருந்தார். உண்மை அறிந்த ராதிகா, எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருக்கிறார். கோபி எவ்வளவு சமாளித்தும் முடியவில்லை.
இன்றைய எபிசோட்:
பின் பாக்கியா, இனிமேல் என்ன செய்யப் போகிறேன் பார் கோபிநாத் என்று சவால் விட்டு வருகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் ராதிகா, கோபி செய்த வேலையை பற்றி திட்டி இருந்தார். அதற்கு கோபி சமாளித்தார். ஆனால் ராதிகா, நீங்கள் இவ்வளவு கேவலமான ஆளாக இருப்பீர்கள் என்று நினைத்து பார்க்கவில்லை என்று பாக்யாவிற்கு சப்போர்ட் செய்து பேசி இருந்தார். இன்னொரு பக்கம் ஆர்டர் வேலை முடித்ததால் ஈஸ்வரி சோர்வாக இருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
அப்போது வந்த எழிலிடம் கோபி செய்த வேலையை பற்றி ஈஸ்வரி சொன்னார். உடனே எழில் கோபப்பட்டு கோபியை சந்தித்து பேசுகிறார். அப்போது கோபி, உன் அம்மா எனக்கு செய்த துரோகத்திற்கு நான் பழிவாங்குவேன் என்று சொல்ல, எழிலும் ஆத்திரத்தில் கோபியை திட்டுகிறார். பின் உங்கள் மூலமாக எனக்கு எந்த வேலையும் வேணாம் என்று எழில் சொல்லிவிட்டு கிளம்புகிறார். இன்னொரு பக்கம் பாக்கியா, போலீஸ் ஸ்டேஷனில் கோபி மீது கம்பளைண்ட் கொடுக்கிறார். அதில் ரெஸ்டாரண்டில் நடந்த வேலைகள் குறித்து ஆனந்த் சொல்ல, புகார் எடுத்து கொள்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.