எழிலுக்கு ஆறுதல் கூறும் பாக்கியா, மீண்டும் கர்ப்பமான ஜெனி, சந்தோஷத்தில் ஈஸ்வரி - விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

By Rajkumar · 9/8/2024

விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இனியா, தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து படிக்க செல்கிறேன் என்று பொய் சொல்லி பார்ட்டிக்கு சென்று இருந்தது மிக பெரிய பிரச்சனை ஆகி இருந்தது. ராதிகா தான் இனியாவை காப்பாற்றி இருந்தார். பின் இதை அறிந்த வீட்டில் உள்ள எல்லோருமே இனியாவை திட்டி இருந்தார்கள். கடந்த வாரம், கல்லூரியில் பார்ட்டிக்கு சென்ற மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து வர வேண்டும் என்று நிர்வாகம் சொல்லி இருந்தது.

பின் பாக்யா மற்றும் ஈஸ்வரி கல்லூரி முதல்வரிடம் பேசி இனியாவின் பிரச்சனையை எப்படியோ முடித்து வைத்தார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் இனியா நடந்ததை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு புலம்பி அழுது இருந்தார். கடைசியில் அவர், இறந்து போக முடிவு எடுத்து கடிதம் எழுதி யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியே போக பார்த்தார். அதை பார்த்த பாக்கியா, கடிதத்தை படித்து பார்த்து அதிர்ச்சி ஆகி இனியாவை திட்டி அழுதார். இனிமேல் இந்த தவறு செய்ய மாட்டேன் என்று இனியாவும் சொல்கிறார். இந்த வாரம் எபிசோடில் கோபி, ராதிகா இடையே சண்டை நடந்தது.

பாக்கியலட்சுமி சீரியல்:

கோபத்தில் ராதிகா, எதற்கு தான் உங்களை திருமணம் செய்து கொண்டேனோ? என புலம்ப, உடனே கோபி, உன்னால் தான் என் வாழ்க்கை இப்படி என சொன்னார். அதற்கு, விவாகரத்து கொடுத்து விட்டு நிம்மதியாக உன் குடும்பத்துடனே போய் சேருங்கள் என்று ராதிகா சொன்னார். பின், எழிலுக்கு சரியான வேலை இல்லை என்று ஈஸ்வரி திட்டி இருந்தார். கோபி வழக்கம் போல் தன்னுடைய நண்பருடன் பாரில் குடித்துக்கொண்டு வீட்டில் நடந்ததை எல்லாம் பேச அப்போது புது நபர் ஒருவர் என்ட்ரி கொடுத்தார்.

சீரியல் கதை:

அவரிடம் கோபி, பாக்கியா ரெஸ்டாரன்ட்டை கெடுக்க திட்டம் போடுகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் எழில், சினிமா வாய்ப்பு தேடி ஒரு கம்பெனிக்கு சென்றிருக்கிறார். அங்கு அவரைப் பற்றி தெரிந்து கொண்டு வாய்ப்பு தர முடியாது என்று மறுத்து விடுகிறார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் செழியன், தனக்கு புதிய ஆர்டர் கிடைத்திருக்கிறது என்று சொல்லி சந்தோஷப்படுகிறார். பின் தன்னுடைய சம்பளத்தையும் அம்மாவிடம் கொடுக்கிறார். அதை பாக்கியா வாங்க மறுத்தாலும் செழியன் கொடுத்து விடுகிறார். அந்த சமயம் பார்த்து எழில் வீட்டுக்கு வருகிறார்.

நேற்று எபிசோட்:

அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காததை தெரிந்த ஈஸ்வரி எழிலை பயங்கர மோசமாக திட்டி விடுகிறார். எழில் எதுவும் பேசாமல் அழுது கொண்டே சென்று விடுகிறார். இன்றைய எபிசோடில், எழில் பாட்டி சொன்னது நினைத்து மாடியில் கண்கலங்கி அழுது கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த அமிர்தா மற்றும் பாக்கியா அவருக்கு ஆறுதலாக பேசுகிறார்கள். இன்னொரு பக்கம் கோபி, ராதிகாவின் வீட்டு கதவைத் தட்ட ராதிகா கதவை திறக்கவில்லை. பிறகு தன்னிடம் இருக்கும் சாவியை வைத்து கோபி உள்ளே சென்று கண்ணதாசன் பாடலை கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இன்றைய எபிசோட்:

அப்போது ரூமில் இருந்து வெளியே வந்த ராதிகா, தனது மகள் தூங்குவதால் ஹெட் போன் போட்டு கேளுங்கள் என்று கோவப்படுகிறார். அடுத்த கட்டத்தில், ஜெனி செழியனிடம், எழில் சம்பாதித்து பணம் கொடுக்கிற வரைக்கும் நாம அவன் முன்னாடி பணம் வீட்டில் கொடுக்க வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் திடீரென வாந்தி எடுத்த ஜெனி, தான் கர்ப்பமாக இருக்கின்றேனு நினைக்கிறேன் என்று சொல்ல, வீட்டில் அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைந்தது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full