கோபியை சித்திரவதை செய்யும் போலீஸ், நிதீஷ் மறைவில் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிப்பாரா பாக்கியா? பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் நிதிஷ் மூச்சுப் பேச்சு இல்லாமல் இறந்த நிலையில் இருந்தார். இதை பார்த்து இனியா ரொம்பவே பதறிப் போனார். உடனே அந்த இடத்தை விட்டு வெளியே வந்த இனியா பாக்கியாவிற்கு ஃபோன் செய்து நடந்ததை எல்லாம் சொன்னார். பின் பாக்கியா, இனியா இருக்கும் இடத்திற்கு வந்திருந்தார். இதை பார்த்தவுடன் பாக்யாவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இனியாவை அங்கிருந்து அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து விட்டார். பின் வீட்டில் நடந்ததை எல்லாவற்றையும் இனியா சொன்னார். இதைக் கேட்டு மொத்த குடும்பமே அதிர்ச்சி அடைந்தது.
கோபிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை, அமைதியாக இருந்தார். இனியா, நான் உண்மையை சொல்லி போலீசில் சரணடைகிறேன் என்றெல்லாம் சொன்னார். ஆனால், வீட்டில் உள்ள யாருமே அதை ஒத்துக் கொள்ளவில்லை. இன்னொரு பக்கம் நிதிஷ் இறந்த விஷயம் அறிந்து போலீஸ், சுதாகர் எல்லோருமே அந்த இடத்திற்கு வந்து விட்டார்கள். போலீஸ் தீவிரமாக விசாரணை நடத்துகிறது. அப்போது சுதாகர், இந்த பிரச்சனைக்கெல்லாம் காரணம் இனியாவும் அவருடைய குடும்பம் தான். அவர்கள் தான் இதை செய்திருக்கணும் என்று கம்ப்ளைன்ட் கொடுத்தார். இதை பார்த்தவுடன் இனியா, போலீஸ் ஸ்டேஷனுக்கு நானே போகிறேன் என்று சொன்னார்.
பாக்கியலட்சுமி:
நேற்று எபிசோட்டில் கோபி, எந்த பிரச்சினையாக இருந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன். தயவு செய்து நீங்கள் ட்ரிப்புக்கு கிளம்புங்கள். போலீசை நான் சமாளிக்கிறேன் என்று சொன்னார். ஆனால், இனியா வீட்டில் உள்ள யாருமே கேட்கவில்லை. இருந்தாலுமே கோபி வலுக்கட்டாயமாக அவர்களை காரில் ஏற்றி அனுப்பி விட்டார். ஆனால், ஈஸ்வரி மட்டும் தன் மகனை விட்டு பிரியாமல் அங்கே இருந்தார். அதற்குப்பின் போலீஸ் வீட்டிற்கு வந்தார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த போலீஸ், இனியாவை விசாரித்தார்கள். அதற்கு கோபி, இனியா டூர் போய் இருக்கிறார். இங்கு இல்லை என்று சொன்னார். விடாமல் போலீஸ் கோபியை கைது செய்து சென்றார்கள்.
நேற்று எபிசோட்:
பின் போலீஸ் ஸ்டேஷனில் கோபியை துருவி துருவி கேள்வி கேட்டு கொண்டிருந்தார்கள். கோபி, இதற்கும் என் மகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீங்கள் எதுவாக இருந்தாலும் என்னிடம் பேசுங்கள் என்று சமாளிக்க, போலீஸ் விடவில்லை கோபியை அடித்து துன்புறுத்துகிறார்கள். இன்னொரு பக்கம் இனியா, பாக்கியா இருவருமே நடந்ததை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் செல்வி, ஈஸ்வரியை பார்க்க வீட்டுக்கு வந்தார். அப்போது ஈஸ்வரியை செல்வியை பார்த்து ரொம்ப எமோஷனலாக பேசி அழுதார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ் ஸ்டேஷனில் கோபியை அடி வெளுத்து வாங்கினார்கள். இருந்தாலுமே கோபி உண்மையை சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். ஒரு கட்டத்தில்
கோபி, நான் தான் நிதிசை கொலை செய்தேன். இதற்கும் இனியாவிற்கும் சம்பந்தமில்லை என்று சொல்லிவிடுகிறார். உடனே அந்த நியூஸ் பேப்பரிலும் வெளியாகி விடுகிறது. அதைப் பார்த்த பாக்கியா குடும்பத்தில் உள்ள எல்லோருமே பதறுகிறார்கள். கோபி நிலைமையை நினைத்து எல்லோருமே வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
அப்போது இனியா, நான் உண்மையை சொல்கிறேன் என்று கிளம்புகிறார். பாக்கியா தடுத்து நிறுத்தி விடுகிறார். இன்னொரு பக்கம் சுதாகர் என் மகனை கொண்டவர்கள் யாரையும் சும்மா விடக்கூடாது. அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்று ஆவேசமாக போலீசிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அதற்குப்பின் பாக்கியா, அன்று நடந்ததை பற்றி இனியாவிடம் விசாரிக்கிறார்கள். அப்போது இனியா, சுதாகர் வர சொன்னதால் தான் நான் போனேன். ஆனால், அங்கு நிதீஷ் தான் இருந்தார். அவர் நிறைய போதையில் இருந்தார். அவருடைய அப்பாவை பற்றி ரொம்ப மோசமாக பேசி இருந்தார். இதற்கு முன்பு ஒரு முறை வீட்டில் நடந்த சண்டையில் கூட இருவரும் வினோதமாக நடந்து கொண்டார்கள் என்கிறார். இதையெல்லாம் கேட்டு பாக்கியாவிற்கு சந்தேகம் வருகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது