உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்த பாக்கியா, அதிர்ச்சியில் நிதிஷ் அம்மா - பாக்கியலட்சுமி

By subhashini · 1/8/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் போலீஸ் ஸ்டேஷனில் கோபியை அடி வெளுத்து வாங்கினார்கள். இருந்தாலுமே கோபி உண்மையை சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். ஒரு கட்டத்தில்
கோபி, நான் தான் நிதிசை கொலை செய்தேன். இதற்கும் இனியாவிற்கும் சம்பந்தமில்லை என்று சொல்லிவிடுகிறார். உடனே அந்த நியூஸ் பேப்பரிலும் வெளியாகி விடுகிறது. அதைப் பார்த்த பாக்கியா குடும்பத்தில் உள்ள எல்லோருமே பதறுகிறார்கள். கோபி நிலைமையை நினைத்து எல்லோருமே வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

அப்போது இனியா, நான் உண்மையை சொல்கிறேன் என்று கிளம்பி இருந்தார். பாக்கியா தடுத்து நிறுத்தி விட்டார். இன்னொரு பக்கம் சுதாகர் என் மகனை கொண்டவர்கள் யாரையும் சும்மா விடக்கூடாது. அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்று ஆவேசமாக போலீசிடம் பேசிக் கொண்டிருந்தார். அதற்குப்பின் பாக்கியா, அன்று நடந்ததை பற்றி இனியாவிடம் விசாரித்தார்கள். அப்போது இனியா, சுதாகர் வர சொன்னதால் தான் நான் போனேன். ஆனால், அங்கு நிதீஷ் தான் இருந்தார். அவர் நிறைய போதையில் இருந்தார். அவருடைய அப்பாவை பற்றி ரொம்ப மோசமாக பேசி இருந்தார். இதற்கு முன்பு ஒரு முறை வீட்டில் நடந்த சண்டையில் கூட இருவரும் வினோதமாக நடந்து கொண்டார்கள் என்றார்.

பாக்கியலட்சுமி:

நேற்று எபிசோட்டில் பாக்கியா, சென்னைக்கு சென்று பிரச்சனையை எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று தன்னுடைய குடும்பத்தை அழைத்துக் கொண்டு வந்தார். பின் வீட்டிற்கு வந்த பாக்கியா தன்னுடைய மாமியாருக்கு ஆறுதல் சொன்னார். அதற்குப்பின் பாக்கியா, செழியன், எழில் மூவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு போனார்கள். அங்கு கோபி, நிலைமையை பார்த்து எல்லோருமே கதறினார்கள். அப்போது கோபி, தயவு செய்து நான் தான் கொலையை செய்தேன் என்று சொல்லுங்கள். நீங்கள் எல்லோரும் ட்ரிப் போனதாக சொல்லுங்கள். இனியா இந்த பிரச்சனையில் மாட்டிக் கொள்ளக் கூடாது. நான் சொல்வதைப் போல் செய்யுங்கள் என்றார்கள்.

நேற்று எபிசோட்:

ஆரம்பத்தில் பாக்கியா குடும்பத்தில் எல்லோரும் தயங்கினாலும் பின் இனியாவின் வாழ்க்கையை நினைத்து பொய் சொன்னார்கள். பின் பாக்யாவின் வீட்டிற்கு போலீஸ் விசாரணைக்கு வந்தார்கள். அப்போது மாற்றி மாற்றி கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள். பாக்கியா எங்களுக்கும் இந்த கொலைக்கும் சம்மந்தம் இல்லை என்றார். ஆனால், போலீஸ் மிரட்டி விட்டு சென்றார்கள். அதற்குப்பின் சம்பவம் நடந்த அன்று என்ன நடந்தது என்பதை சிசிடிவி ஃபுட்டேஜை வைத்து விசாரித்தார்கள். இனியா வருவதற்கு முன்பே சுதாகர், நிதிசை சந்தித்து பேசி இருந்தார். இதனால் இவர்களுக்கு சுதாகர் மீது சந்தேகம் வந்தது.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சிசிடி வீடியோவில் சுதாகர் தான் நிதிஷை கொலை செய்கிறார் என்று தெரிய வருகிறது. அந்தப் பழியை இனியாவின் மீது போட தான் அந்த இடத்திற்கு இனியாவை போன் செய்து சுதாகர் வர வைத்து இருக்கிறார். பின் சுதாகரை பற்றி விவரமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று இனியா
தெரிந்து கொள்கிறார். அதில், நிதிஷ் அவருடைய அம்மாவும் வசதியான கோடீஸ்வரர். நிதிஷின் அப்பா இறந்து விடுகிறார். சொத்திற்கு ஆசைப்பட்டு தான் நல்லவன் போல நடித்து சுதாகர் நிதிஷ் அம்மாவை இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார். ஆரம்பத்திலிருந்து நிதிஷ்-சுதாகருக்குமே செட்டே ஆகாது.
இதை அறிந்தவுடன் நிதீஷின் அம்மாவிடம் விசாரிக்க வேண்டும் என்று பாக்கியா சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

சுதாகருக்கு போன் செய்த ஆகாஷ் மிரட்டி வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார். பின் சுதாகர் இல்லாத நேரம் பார்த்து வீட்டிற்குள் சென்ற பாக்கியாவை பார்த்தவுடன் நிதிஷின் அம்மா பயங்கரமாக கத்தி சண்டை போடுகிறார். பின் பாக்கியா வீடியோ ஆதாரத்தை காண்பித்து கொலை செய்தது சுதாகர் தான் என்பதை நிரூபிக்கிறார். இதையெல்லாம் பார்த்து நிதிஷின் அம்மா பயங்கரமாக கதறி அழுகிறார். ஏற்கனவே சுதாகர் நிதிசை கொலை செய்து விடுவதாக மிரட்டியதை எல்லாம் யோசித்துப் பார்த்து ரொம்பவே கதறி அழுகிறார். மறுநாள் காலையில் டிவியில் நிதிஷின் கொலை வழக்கில் சுதாகர் சம்மந்தப்பட்டது தெரிய வருகிறது. அப்போது பாக்கியா நடந்ததை நினைத்து பார்க்கிறார். அதில் போலீஸிடம் பாக்கியா, தங்களுக்கு கிடைத்த ஆதாரத்தை காண்பிக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full