சுதாகர் சூழ்ச்சியை அறிந்த பாக்கியா குடும்பம், கொந்தளித்த இனியா - விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் இனியா அனுப்பிய விவாகரத்து நோட்டீசை பார்த்தவுடன் சுதாகர் குடும்பத்தில் உள்ள எல்லாருமே ஷாக் ஆனார்கள். நிதிஷும் அவருடைய அம்மாவும் இனியாவை திட்டிக் கொண்டிருந்தார்கள். உடனே சுதாகர், இதை நாம் பொறுமையாக தான் கையாள வேண்டும். சொத்தில் பங்கு கேட்பாள் என்றெல்லாம் குருட்டுத்தனமாக யோசித்தார். இன்னொரு பக்கம் இனியா தன்னுடைய அண்ணன்களுடன் சேர்ந்து சமைத்துக் கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்த்து பாக்கியா, கோபி, ஈஸ்வரி மூவருமே சந்தோஷப்பட்டார்கள்.
பாக்கியா, தனக்கு ஆர்டர் கொடுத்த நபருக்கு போன் செய்து பணம் கேட்க, அந்த நபருமே ஏதேதோ சொல்லி சமாளித்து விட்டார். பின் இனியாவை பார்க்க சுதாகர் அவருடைய மனைவியுமே வந்திருந்தார்கள். அப்போது சுதாகர், எதற்காக இந்த அவசர முடிவு. நாம் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்றார். அதற்கு இனியா, இனிமேல் பேசுவதற்கு ஒன்றும் இல்லை. எங்களுடைய குடும்பத்தையும் நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள். என் அம்மாவின் ரெண்டு ரெஸ்டாரன்ட், என் கல்யாணத்திற்கு ஆன செலவு என எல்லாத்தையும் வட்டி முதலுமாக வாங்காமல் விடமாட்டேன். எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் சந்திக்கலாம் என்று கிளம்பி விட்டார். இதனால் சுதாகருக்கு இன்னும் கோபம் அதிகமானது.
பாக்கியலட்சுமி:
நேற்று எபிசோட்டில் பாக்கியா, அட்வான்ஸ் பணம் தேவைப்படுகிறது என்றார். ஆனால், அந்த நபர் வெளி ஊரில் இருப்பதால் பணம் அப்புறமாக தருகிறேன் என்று சமாளித்தார். மறுநாள் காலையில் பாக்கியா, அந்த நபர் அட்வான்ஸ் தொகை கொடுத்தால் மட்டும் ஆர்டர் செய்யலாம். இல்லையென்றால் பணத்தை திருப்பி கொடுத்து விடலாம் என்று பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து அந்த நபர் ஹோட்டலுக்கு வந்தார். அப்போது பாக்கியா அட்வான்ஸ் தொகை கேட்டார். உடனே அந்த நபர், நான் ஏற்கனவே 5 லட்சம் கொடுத்து விட்டேனே. எவ்வளவுதான் பணம் அட்வான்ஸ் தொகை கொடுப்பது என்று கேட்டவுடன் பாக்கியா, செல்வி இருவருமே ஷாக்கானார்கள்.
நேற்று எபிசோட்:
அப்போது பாக்கியா, நீங்கள் ஐம்பதாயிரம் தான் கொடுத்தீர்கள். எதற்காக இப்படி மாத்தி பேசுகிறீர்கள் என்று கேட்டார். உடனே அந்த நபர் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து போலீசை வர வைத்து விட்டார். போலீசுமே எல்லோரையும் வெளியே அனுப்பி கடையை மூடி விட்டார்கள். பின் பாக்கியா, 50,000 தான் அந்த நபர் தந்தார். அவர் சொல்வதெல்லாம் பொய் என்றார். உடனே அந்த நபர், குடும்பமாக சேர்ந்து என்னை ஏமாற்றுகிறார்கள் என்று சொன்னார். பின் செல்வி, கவுன்சிலருக்கு போன் செய்தார். ஆனால், கவுன்சிலர் மீட்டிங்கில் இருப்பதால் வர முடியவில்லை. இதனால் என்ன செய்வது என்று புரியாமல் பாக்கியா இருந்தார். அந்த இடத்திற்கு வந்த இனியா கம்ப்ளைன்ட் கொடுத்தவரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்க, அந்த நபர் பதில் கொடுக்காமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோரும் மாத்தி மாத்தி கேள்வி கேட்பதால் அந்த நபரால் எதுவும் பேச முடியவில்லை. அப்போது இனியா, நீங்கள் எந்த மண்டபத்தை புக் செய்தீர்கள் என்று கேட்கிறார். அந்த நபருமே ஏதேதோ ஒரு மண்டபத்தின் பெயரை சொல்கிறார். உடனே செழியன் அந்த மண்டபத்தை சோசியல் மீடியாவில் தேடி பார்க்கிறார். ஆனால், அந்த நபர் சொன்ன பெயரில் மண்டபமே இல்லை. உடனே போலீஸ், உண்மையாலுமே உன் மகளுக்கு கல்யாணமா? என்று கேட்டு மிரட்டுகிறார்கள். அந்த நபரால் எதுவுமே சொல்ல முடியாமல் அங்கிருந்து தப்பித்து ஓடி விடுகிறார். அதற்குப்பின் போலீசுமே அந்த நபரை துரத்தி செல்கிறார்கள். பின் அந்த நபரை துரத்திக் கொண்டே கோபி- எழில் போகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
அந்த நபர் கடைசியில் சுதாகரை சந்தித்து தான் நடந்ததை எல்லாம் சொல்லி பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதை பார்த்த கோபி, எழிலுக்கு பயங்கர கோபம் வருகிறது. பின் வீட்டிற்கு வந்த கோபி, இவ்வளவு வேலை செய்தது சுதாகர் தான். சுதாகர் தான் இப்படி எல்லாம் நம் குடும்பத்தை பழிவாங்க செய்கிறான் என்று சொன்னவுடன் இனியாவிற்கு கோபம் தாங்க முடியவில்லை. பின் இனியா, சுதாகரின் வீட்டிற்கு செல்ல கிளம்புகிறார். உடனே பாக்கியா, தடுத்து நிறுத்தி விவாகரத்து கேஸ் நடக்கப்போகிறது. இப்போது எந்த பிரச்சினையும் வேண்டாம் என்கிறார். அதற்குப்பின் இனியா, பாக்கியா இருவருமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.