மீண்டும் பாக்கியா குடும்பத்துடன் சேர்ந்தாரா கோபி? வேதனையில் புலம்பும் ராதிகா - பாக்கியலட்சுமி

By subhashini · 21/12/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் பாக்கியா, கோபியை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். கோபிக்காக ஈஸ்வரி சப்போர்ட் செய்து பேசி இருந்தார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் அதிகமானது. இதனால் கோபிக்கு நெஞ்சுவலி வந்தது. பின் ஈஸ்வரி, தயவுசெய்து என் மகன் உயிரை காப்பாற்று. அவனை வீட்டை விட்டு மட்டும் வெளியே அனுப்பாதே. என் மகன் மீது போட்ட கேஸை வாபஸ் வாங்கி விடு. நான் உன்னிடம் மடிப்பிச்சை கேட்கிறேன் என்று கதறி அழுதார். பாக்கியாவால் எதுவுமே பேச முடியவில்லை. அதன் பின் எழிலை வீட்டிற்கு வர வைக்க முயற்சி செய்தார் ஈஸ்வரி.

அதற்கு பாக்கியா ஒத்து கொள்ளவில்லை. எழிலும் தன் அம்மா சொன்னதை கேட்டு நடந்தார். பின் கோபி, இது நம்முடைய குடும்பம், எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்ல, பாக்யாவிற்கு இன்னும் கோபம் அதிகமாகி கோபியை திட்டி இருந்தார். அதற்குப்பின் ராதிகா, கோபியை பார்க்க வீட்டிற்கு வந்தார். அப்போது மயூவின் பிறந்தநாளை பற்றி ராதிகா சொல்ல, இனியாவின் டான்ஸ் போட்டி பற்றி பேசி இருந்தார். அந்த சமயம் பார்த்து ஈஸ்வரி வந்தவுடன் ராதிகா அங்கிருந்து கிளம்பி விட்டார். அப்போது இனியா, தயவுசெய்து என் அப்பாவுக்கு விவாகரத்து கொடுங்கள் என்று ரொம்ப மோசமாக ராதிகாவிடம் பேசி இருந்தார்.

பாக்கியலட்சுமி:

இதனால் ராதிகா ரொம்பவே மனமடைந்து வீட்டை காலி செய்ய முடிவு எடுத்தார். இதை அறிந்த கோபி ராதிகாவை வீட்டிற்கு வரவைத்து பேசி இருந்தார். அப்போது ராதிகா, நீங்கள் வர மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும். எல்லோரும் உங்களை வரவிட மாட்டார்கள். அதனால் தான் நாங்கள் கிளம்பி போகிறோம் என்றார். நேற்று எபிசோட்டில் கோபி, அதெல்லாம் வேண்டாம். ஏன் புரிந்து கொள்ள மாட்டுகிறாய்? என்று ராதிகாவிடம் வாக்குவாதம் செய்ய, அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி வந்தது. இதனால் எல்லோருமே பதறி போனார்கள். எதுவும் பேச முடியாமல் ராதிகா அமைதியாக இருந்தார்.

நேற்று எபிசோட்:

இனியா, உங்களால் தான் எங்க அப்பாவிற்கு இந்த நிலைமை. தயவு செய்து எங்க அப்பா வாழ்க்கையை விட்டு சென்று விடுங்கள். என் அப்பாவை பார்க்க வராதீர்கள் என்று பேச, ராதிகா ரொம்பவே மனமடைந்து விட்டார். இதையெல்லாம் கேட்ட பாக்கியா, இனியாவை அடித்து விட்டார். பின் வீட்டிற்கு வந்த கோபி, ராதிகாவிடம் எதுவும் பேசாமல் அமைதியாக ஓய்வெடுக்க போனார். ஈஸ்வரி, ராதிகாவை ரொம்ப மோசமாக திட்டி அனுப்பி இருந்தார்.

இன்றைய எபிசோட்:

இன்னொரு பக்கம் கோபி, தன்னுடைய நண்பர் செந்தில் இடம் தன்னுடைய குடும்பத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர், ஒரு பக்கமாக நில்லு. இரண்டு பக்கமும் கால் வைத்து தவிக்காதே. எதுவாக இருந்தாலும் சரியான முடிவெடு என்று அறிவுரை செய்கிறார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராதிகா, வேகவேகமாக எல்லா துணிகளையும் பேக் செய்து இங்கிருந்து கிளம்பலாம் என்று சொல்ல, அவருடைய அம்மா தடுக்கிறார். ஆனால், ராதிகா கேட்கவில்லை. கோபி வீட்டில் நடந்ததை சொல்லி வருத்தப்பட்டு பேசுகிறார் ராதிகா.

சீரியல் ட்ராக்:

அவர் அம்மாவுமே, தன் மகளின் வாழ்க்கை நினைத்து வேதனைப்படுகிறார். மறுநாள் காலையில் இனியா காம்பெடிஷன் நடக்கிறது. எல்லோருமே சந்தோஷமாக காம்பெடிஷன்க்கு செல்கிறார்கள். இனியாவுக்கு கோபி என்கரேஜ் செய்து அனுப்பி விடுகிறார். பின் இனியா சூப்பராக நடனமாடுகிறார். அதை பார்த்து மொத்த குடும்பமே சந்தோஷமாக கைதட்டி ரசிக்கிறது. இதையெல்லாம் டிவியில் ராதிகா பார்த்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full