குற்றவாளியை கண்டுபிடிக்க போராடும் பாக்கியா குடும்பம், தீவிர விசாரணையில் போலீஸ்-பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் கோபி, எந்த பிரச்சினையாக இருந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன். தயவு செய்து நீங்கள் ட்ரிப்புக்கு கிளம்புங்கள். போலீசை நான் சமாளிக்கிறேன் என்று சொன்னார். ஆனால், இனியா வீட்டில் உள்ள யாருமே கேட்கவில்லை. இருந்தாலுமே கோபி வலுக்கட்டாயமாக அவர்களை காரில் ஏற்றி அனுப்பி விட்டார். ஆனால், ஈஸ்வரி மட்டும் தன் மகனை விட்டு பிரியாமல் அங்கே இருந்தார். அதற்குப்பின் போலீஸ் வீட்டிற்கு வந்தார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த போலீஸ், இனியாவை விசாரித்தார்கள். அதற்கு கோபி, இனியா டூர் போய் இருக்கிறார். இங்கு இல்லை என்று சொன்னார். விடாமல் போலீஸ் கோபியை கைது செய்து சென்றார்கள்.
பின் போலீஸ் ஸ்டேஷனில் கோபியை துருவி துருவி கேள்வி கேட்டு கொண்டிருந்தார்கள். கோபி, இதற்கும் என் மகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீங்கள் எதுவாக இருந்தாலும் என்னிடம் பேசுங்கள் என்று சமாளிக்க, போலீஸ் விடவில்லை கோபியை அடித்து துன்புறுத்துகிறார்கள். இன்னொரு பக்கம் இனியா, பாக்கியா இருவருமே நடந்ததை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் செல்வி, ஈஸ்வரியை பார்க்க வீட்டுக்கு வந்தார். அப்போது ஈஸ்வரியை செல்வியை பார்த்து ரொம்ப எமோஷனலாக பேசி அழுதார்.
பாக்கியலட்சுமி:
நேற்று எபிசோட்டில் போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ் ஸ்டேஷனில் கோபியை அடி வெளுத்து வாங்கினார்கள். இருந்தாலுமே கோபி உண்மையை சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். ஒரு கட்டத்தில்
கோபி, நான் தான் நிதிசை கொலை செய்தேன். இதற்கும் இனியாவிற்கும் சம்பந்தமில்லை என்று சொல்லிவிடுகிறார். உடனே அந்த நியூஸ் பேப்பரிலும் வெளியாகி விடுகிறது. அதைப் பார்த்த பாக்கியா குடும்பத்தில் உள்ள எல்லோருமே பதறுகிறார்கள். கோபி நிலைமையை நினைத்து எல்லோருமே வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
நேற்று எபிசோட்:
அப்போது இனியா, நான் உண்மையை சொல்கிறேன் என்று கிளம்பி இருந்தார். பாக்கியா தடுத்து நிறுத்தி விட்டார். இன்னொரு பக்கம் சுதாகர் என் மகனை கொண்டவர்கள் யாரையும் சும்மா விடக்கூடாது. அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்று ஆவேசமாக போலீசிடம் பேசிக் கொண்டிருந்தார். அதற்குப்பின் பாக்கியா, அன்று நடந்ததை பற்றி இனியாவிடம் விசாரித்தார்கள். அப்போது இனியா, சுதாகர் வர சொன்னதால் தான் நான் போனேன். ஆனால், அங்கு நிதீஷ் தான் இருந்தார். அவர் நிறைய போதையில் இருந்தார். அவருடைய அப்பாவை பற்றி ரொம்ப மோசமாக பேசி இருந்தார். இதற்கு முன்பு ஒரு முறை வீட்டில் நடந்த சண்டையில் கூட இருவரும் வினோதமாக நடந்து கொண்டார்கள் என்றார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா, சென்னைக்கு சென்று பிரச்சனையை எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று தன்னுடைய குடும்பத்தை அழைத்துக் கொண்டு வருகிறார். பின் வீட்டிற்கு வந்த பாக்கியா தன்னுடைய மாமியாருக்கு ஆறுதல் சொல்கிறார். அதற்குப்பின் பாக்கியா, செழியன், எழில் மூவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு போகிறார்கள். அங்கு கோபி, நிலைமையை பார்த்து எல்லோருமே கதறுகிறார்கள். அப்போது கோபி, தயவு செய்து நான் தான் கொலையை செய்தேன் என்று சொல்லுங்கள். நீங்கள் எல்லோரும் ட்ரிப் போனதாக சொல்லுங்கள். இனியா இந்த பிரச்சனையில் மாட்டிக் கொள்ளக் கூடாது. நான் சொல்வதைப் போல் செய்யுங்கள் என்றார்கள்.
சீரியல் ட்ராக்:
ஆரம்பத்தில் பாக்கியா குடும்பத்தில் எல்லோரும் தயங்கினாலும் பின் இனியாவின் வாழ்க்கையை நினைத்து பொய் சொல்கிறார்கள். பின் பாக்யாவின் வீட்டிற்கு போலீஸ் விசாரணைக்கு வருகிறார்கள். அப்போது மாற்றி மாற்றி கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாக்கியா எங்களுக்கும் இந்த கொலைக்கும் சம்மந்தம் இல்லை என்றார். ஆனால், போலீஸ் மிரட்டி விட்டு செல்கிறார்கள். அதற்குப்பின் சம்பவம் நடந்த அன்று என்ன நடந்தது என்பதை சிசிடிவி ஃபுட்டேஜை வைத்து விசாரிக்கிறார்கள். இனியா வருவதற்கு முன்பே சுதாகர், நிதிசை சந்தித்து பேசி இருக்கிறார். இதனால் இவர்களுக்கு சுதாகர் மீது சந்தேகம் வருகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது