இனியாவின் காதல் விஷயத்தால் இடிந்து போன குடும்பம், பாக்கியா என்ன முடிவு எடுக்கப் போகிறார்? பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' கோபியை பார்த்தவுடன் இனியா-ஆகாஷ் இருவரும் ஷாக் ஆனார்கள். கோபி, இதற்கு தான் இங்கு வந்தாயா? கிளம்பு என்று இனியாவின் கையைப் பிடித்து அழைத்தார். ஆகாஷ் பேச வந்ததற்கும் அவனை திட்டி விட்டு அங்கிருந்து இனியாவை அழைத்துக் கொண்டு வந்தார். அதற்குப்பின் கோபி, உன்னுடைய போனை கொடு என்று வாங்கி செக் பண்ணி இருந்தார். அதில் ஆகாசுடன் அவர் பேசி இருப்பதை பார்த்து ரொம்பவே கோபி கோபப்பட்டார். இனியா மன்னிப்பு கேட்டும் கெஞ்சி அழுதும் கோபி கேட்கவில்லை.
பின் வீட்டிற்கு இனியாவை கோபி அழைத்து வந்ததை பார்த்து எல்லோருமே என்ன ஆனது? ஏன் இனியா வந்துவிட்டாள்? என்று கேட்க, பாக்கியா வரட்டும் என்றார் கோபி. அப்போது பாக்கியா வீட்டிற்கு வந்தார். உடனே கோபி, இனியா ஒரு பையனை காதலிக்கிறார் என்று அவருடைய மொபைலை காண்பித்தவுடன் பாக்கியா ஷாக் ஆனார். வீட்டில் உள்ள எல்லோருக்குமே அதிர்ச்சியாக இருந்தார். கோபி, யாரை காதலிக்கிறார் தெரியுமா? நம் வீட்டில் வேலை செய்யும் செல்வியின் மகன் ஆகாஷை தான் காதலிக்கிறார் என்று சொன்னவுடன் இன்னும் எல்லோருக்குமே அதிர்ச்சி ஆனது. என்ன சொல்வது என்று புரியாமல் உறைந்து போனார் பாக்கியா.
பாக்கியலட்சுமி:
இனியா காதலிக்கிறார் என்ற உண்மை தெரிந்ததும் மொத்த வீடுமே ஷாக் ஆகி கோபப்பட்டார்கள். பாக்கியா என்ன சொல்வது என்றே புரியாமல் உறைந்து விட்டார். ஈஸ்வரி, இனியாவை பயங்கரமாக திட்டி அடித்தார். செழியன்- கோபி இருவருமே, ஸ்டேட்டஸ் தேவையில்லை. வேலைக்காரி பையன் ஒரு ஆளா என்றெல்லாம் ரொம்ப மோசமாக செல்வியையும், ஆகாஷை திட்டி இருந்தார்கள். உடேன ஈஸ்வரி, இதற்கெல்லாம் காரணம் பாக்கியா தான். பிள்ளையை ஒழுங்காக கவனிக்க வேண்டும். எழிலுக்கு காதல் திருமணம் செய்து வைத்ததால் தான் இந்த விளைவு.
கடந்த வாரம் எபிசோட்:
எல்லாத்திற்குமே காரணம் பாக்கியா தான் என்று வழக்கம்போல அவள் மீது பழியை போட்டார். அந்த சமயம் பார்த்து செல்வி வீட்டுக்கு வந்தார். உடனே ஈஸ்வரி- செழியன் இருவருமே உங்கள் மகன் செய்த வேலைக்கு என் கண்ணில் பட்டால் அடித்தே கொன்று விடுவேன் என்றெல்லாம் சொன்னார்கள். பின் இனியா காதலிக்கும் விஷயத்தை சொல்லி செல்வியை பயங்கரமாக திட்டி அவமானப்படுத்தி வீட்டை விட்டு அனுப்பி இருந்தார்கள் பாக்கியாவால் எதுவுமே பேச முடியவில்லை. பின் வீட்டிற்கு வந்த செல்வி, தன் மகனிடம் உண்மையை கேட்டு அவனை அடித்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் செல்வி, பாக்கியா பற்றியும் அவருடைய குடும்பத்தை பற்றியும் ஆகாஷிடம் சொல்லி அவனை அடிக்கிறார். ஆகாஷ், தான் செய்த தவறை நினைத்து ரொம்பவே மனமடைந்து மன்னிப்பு கேட்கிறார். இன்னொரு பக்கம் பாக்கியா வீட்டில் எல்லோருமே இனியா செய்த தவறை பற்றி திட்டிக் கொண்டிருக்கிறார்கள். இனியா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். அப்போது எழில், நீ நன்றாக படி. நல்ல வேலைக்கு போ. அப்புறம் எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
உடனே ஈஸ்வரி- செழியன் இருவரும் எழிலை திட்டுகிறார்கள். கோபி, இனிமேல் உனக்கு போன் கிடையாது. எதுவாக இருந்தாலும் என்னுடைய நம்பரை கொடு என்று ரொம்ப கண்டிசனாக நடந்து கொள்கிறார். அதற்குப் பின் இனியா, தன்னுடைய அம்மாவிடம் மன்னிப்பு கேட்டு ஆகாஷ் பற்றி பேசுகிறார். ஆனால், பாக்கியா எதுவும் பேசாமல் அமைதியாகவே இருக்கிறார். அதற்கு பின் செல்வி, பாக்கியாவிற்கு ஃபோன் செய்கிறார். ஆனால், பாக்கியா போன் எடுக்காமல் அமைதியாகவே இருக்கிறார். இதனால் செல்வி ரொம்ப வருத்தப்படுகிறார். அதற்குப்பின் எழிலிடம் என்ன செய்வது என்று புரியவில்லை என்று ரொம்ப எமோஷனலாக பாக்கியா பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.