எழில் சொன்ன வார்த்தையால் மனம் உடைந்த பாக்கியா, கோபி போட்ட கண்டிஷன் - பாக்கியலட்சுமி

By subhashini · 6/11/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் இனியா பைனல் ஆடிஷன் போட்டியில் வெற்றி பெற்றார் என்றவுடன் எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். அப்போது இனியா காரணம் தன் அப்பா என்று புகழ்ந்து பேசி இருந்தார். இதையெல்லாம் கேட்டு பாக்கியா மனம் உடைந்து அங்கிருந்து கிளம்ப, இதை பார்த்த கோபி சந்தோஷப்பட்டு இருந்தார். பின் பாக்கியா, டான்ஸ் கிளாஸ் பற்றி இனியாவிடம் கேட்டதற்கு செழியன் கோபமாக பேசி அவரை அங்கிருந்து அழைத்து சென்றார். பாக்கியாவால் எதுவும் பேச முடியவில்லை.

மறுநாள் ஜெனி- அமிர்தா இருவருமே பாக்யா, ஈஸ்வரியை தயாராக சொல்லி அவர்களை வெளியில் அழைத்து போனார்கள். சில வாரங்களாகவே நிறைய பிரச்சினையால் ஈஸ்வரி- பாக்யா இருவருமே மனம் உடைந்து இருப்பதால் அவர்களை வெளியே கூட்டிட்டு போனார்கள் ஜெனி-அமிர்தா. பின் எல்லோருமே ஜாலியாக பீச்சில் விளையாடி சந்தோஷமாக சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். அப்போது பாக்கியாவின் சமையலை கிண்டல் அடிக்கும் வகையில் ஈஸ்வரி பேசியிருந்தார்.

பாக்கியலட்சுமி சீரியல்:

நேற்று எபிசோட்டில் எல்லோருமே சந்தோஷமாக ஆட்டம் பாட்டம் என்று கவலையை மறந்து இருந்தார்கள். இன்னொரு பக்கம் கோபி, தன் பிள்ளைகளை நினைத்து சந்தோஷத்தில் ராதிகாவிடம் பேசி இருந்தார். அப்போது செழியன், இனியா என் பக்கம் வந்து விட்டார்கள். எழிலையும் எப்படியாவது என் பக்கம் இழுத்து பாக்யாவை தனிமரம் ஆக்குவேன். அவளை அழிக்காமல் விடமாட்டேன் என்று வன்மத்தோடு பேச, ராதிகா அறிவுரை சொன்னார். ஆனால், அதை கோபி ஏற்றுக்கொள்ளவில்லை.

இன்றைய எபிசோட்:

மேலும், பாக்யா, ஈஸ்வரி, ஜெனி எல்லோருமே வீட்டிற்கு சந்தோசமாக பேசி கொண்டு வந்தார்கள். தன்னையும் அழைத்து சொல்லவில்லை என்று இனியா கோபப்பட்டு பேசாமல் இருந்தார். மேலும், இன்றைய எபிசோடில் எழில், பாக்கியா வீட்டிற்கு வருகிறார். பின் எல்லோரையும் வரவைத்து தன்னுடைய படத்திற்கு பூஜை போடுவதைப் பற்றி சொல்ல, சந்தோஷப்படுகிறார்கள். ஆனால், ஈஸ்வரி, நான் வரவில்லை என்று சொன்னதால் எழில் ரொம்ப வருத்தப்படுகிறார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் கோபி தயாரிப்பாளரிடம் பூஜைக்கு வருபவர்களின் பட்டியல் கேட்கிறார். அதில் தன்னுடைய அம்மா பெயர் இல்லை என்பதை பார்த்து வருத்தப்பட்டு அவரை வர வைக்க சொல்கிறார். பின் பாக்கியா பூஜைக்கு வரக்கூடாது என்று கோபி சொல்ல, தயாரிப்பாளரும் ஒத்துக்கொள்கிறார். இன்னொரு பக்கம் பாக்கியா, ஆயுத பூஜை ஸ்பெஷல் ஆஃபர் அறிமுகம் செய்கிறார். ஆனால், ரொம்ப கம்மி விலைக்கு சாப்பாடு கொடுப்பதால் எல்லோருமே வேண்டாம் என்று சொல்கிறார்கள். இதை எப்படியாவது சுதப்ப வேண்டும் என்று அந்த செப்பும் திட்டம் போடுகிறார்.

https://www.youtube.com/watch?v=WiJo8brWyKQ

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கோபி, உன்னுடைய படம் வெளியாக வேண்டும் என்றால் இந்த நிகழ்ச்சிக்கு உன் அம்மா இங்கே வரக்கூடாது என்று எழிலுக்கு கண்டிஷன் போடுகிறார். இதனால் மனமடைந்த எழில், தன்னுடைய அம்மாவிடம் இந்த பங்க்ஷன்க்கு வர வேண்டாம். நீங்கள் வெளியே போங்க என்று சொல்லி அனுப்புகிறார். பாக்யாவும் வேதனையில் வெளியே வந்தார். பின் படத்தின் டைட்டில் ஓபன் பண்ணும் போது 'பாக்கியலட்சுமி' என்று இருக்கிறது. இதை பார்த்து கோபி ஷாக்கானார். தன் பெயர் கொண்ட போஸ்டரை எல்லாம் பார்த்த பாக்கியலட்சுமி சந்தோஷத்தில் அழுகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full