அடி மேல் அடி வாங்கும் பாக்கியா, கோபி துணையாக நிற்பாரா? விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் வேதனையில் பாக்கியா-செல்வி இருவருமே ரொம்ப எமோஷனலாக பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது பாக்கியா, எவ்ளோ பிரச்சனையை சமாளித்து விட்டோம். பார்த்து கொள்ளலாம் என்று நம்பிக்கையோடு இருந்தார். வேதனையில் வீட்டிற்கு வந்த பாக்கியாவிடம் ஈஸ்வரி, இனியாற்றிப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார். ஆனால், அவர் அதைப் பற்றி கண்டுகொள்ளாமல் சமையல் செய்து சாப்பிட்டார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே பாக்கியாவிடம் பேச முயற்சித்தார்கள். மன வேதனையில் இருப்பதால் பாக்கியா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.
வீட்டில் எல்லோருமே இனியா அனுப்பிய போட்டோக்களை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், பாக்கியா கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். உடனே எல்லோருமே பாக்யாவிடம் பேச, அவர் கோபத்தில் உங்கள் சம்மந்தி செய்த வேலை தெரியுமா? என்னை ரெஸ்டாரன்ட் விட்டு வெளியே அனுப்பி விட்டார் என்று நடந்ததை சொல்லி ரொம்ப வருத்தப்பட்டார். இதனால் எல்லோரும் ஷாக் ஆகிறார்கள். பின் கோபி- செழியன் இருவருமே சுதாகரிடம் விசாரித்தார்கள். ஆனால், சுதாகர் அப்படியே அந்த பல்டி அடித்து மாத்தி மாத்தி பேசி இருந்தார். கோபிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
பாக்கியலட்சுமி:
பாக்கியா, நீங்கள் என்னிடம் ஒரு மாதிரி, என் வீட்டில் உள்ளவர்களிடம் வேறு மாதிரியும் நடிக்கிறீர்கள். உங்களை போல கேவலமான ஆளை நான் பார்க்கவே இல்லை என்று
கோபப்பட்டு பேசி இருந்தார். இதனால் சுதாகருக்கு கோபம் இன்னும் அதிகமாகி பாக்யாவிடம் சண்டை போட்டார். அப்போது பாக்கியா, ரெஸ்டாரண்ட் விஷயத்தில் அமைதியாக இருக்கிறேன். ஆனால், என் மகள் விஷயத்தில் விளையாடனும் என்று நினைக்காதீர்கள். நான் சும்மா விட மாட்டேன் என்று எச்சரித்துவிட்டு வந்தார்.
கடந்த வாரம் எபிசோட்:
இன்னொரு பக்கம் வீட்டில் எல்லோருமே பாக்கியா ரெஸ்டாரண்ட் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது வந்த எழில், ரெஸ்டாரண்டில் தாத்தா போட்டோவை தூக்கிப் போட்ட விஷயத்தை சொல்லி ரொம்ப வருத்தப்பட்டார். இருந்துமே ஈஸ்வரி, பாக்கியா மீது தான் கோபப்பட்டு திட்டி இருந்தார். இதனால் எழிலுக்கு கோபம் வந்து அந்த இடத்தை விட்டு கிளம்பி விட்டார். இன்னொரு பக்கம் பாக்கியா, தன்னுடைய இன்னொரு ரெஸ்டாரண்டுக்கு சென்று ரொம்ப எமோஷனலாக ஃபீல் பண்ணிக் கொண்டிருந்தார். பின் சுதாகர், பாக்கியாவின் இன்னொரு ரெஸ்டாரன்ட் பற்றிய விவரத்தை அறிந்து அதை பறிக்க திட்டம் போட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாக்கியாவிற்கு ஃபோன் செய்த இனியா, ரெஸ்டாரன்ட் பற்றி கேட்கிறார். ஆனால், பாக்கியா உண்மை சொல்லாமல் ஏதோ சொல்லி சமாளிக்கிறார். அதற்குப்பின் வீட்டில் ரெஸ்டாரண்டை பற்றி பாக்கியா பேசிக் கொண்டிருக்கிறார். கோபி, நாங்கள் எல்லோரும் உனக்கு சப்போர்ட் செய்வோம். நீ தேவை இல்லாமல் குழப்பிக்கொள்ளாதே என்று உண்மை தெரியாமல் பேசுகிறார். ஆனால். ஈஸ்வரி வழக்கம்போல் பாக்கியாவை தான் திட்டிக் கொண்டிருக்கிறார். இதனால் பாக்கியா கடுப்பாகி எழுந்து சென்று விடுகிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்கு பின் எழில், தன்னுடைய புது படத்திற்கு தயாரிப்பாளர் கிடைத்த விஷயத்தை சொன்னவுடன் பாக்யா சந்தோஷப்படுகிறார். மறுநாள் ரெஸ்டாரண்டின் பழைய ஓனர் வருகிறார். அவர், ரெஸ்டாரண்டை காலி செய்ய வேண்டும் என்று சொன்னவுடன் பாக்கியா ரொம்பவே வேதனைப்படுகிறார். உடனே அவர், எனக்கு கடன் தொல்லை அதிகமாக இருக்கிறது. அதனால் ரெஸ்டாரண்டை விற்கிறேன் என்கிறார். பின் இதை வீட்டில் பாக்கியா சொல்கிறார். வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பாக்கியாவுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது.