நிதிஷின் சுயரூபத்தை அறிந்த பாக்கியா, இனியா நிலைமை என்ன? விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

By subhashini · 1/7/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் இனியா, நிதிஷின் அப்பா எல்லோருமே என்னிடம் நன்றாக தான் நடந்து கொண்டார்கள். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன். இதே மாதிரி அம்மாவுடைய அம்மா ஒரு பிரச்சனை என்றால் நீங்கள் முகம் கொடுத்து கூட கேட்க மாட்டீர்கள். உங்கள் மகளுக்கு என்று பிரச்சினை வரும் போது தான் அந்த வலி புரிகிறதா? என்று கேட்டார். இனியா கேட்ட கேள்விக்கு கோபியால் பதில் சொல்லமுடியாது ரொம்ப வருத்தப்பட்டார். அதற்குப்பின் இனியா, பாக்கியாவின் ஹோட்டலுக்கு வந்தார். அப்போது பாக்கியா, கடையை டெவலப் செய்வதற்கு ஏதாவது ஐடியா இருந்தால் சொல் என்று இனியாவிடம் கேட்டார்.

அதற்கு இனியா, பைவ் ஸ்டார் ஓட்டலில் மொத்தம் ஆறு ரெஸ்டாரண்ட் இருக்கிறது. அதில் ஓரு ரெஸ்டாரண்ட் கான்ட்ராக்டில் விடுகிறார்கள். அந்த போட்டியில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று சொன்னார். அதைக் கேட்டவுடன் பாக்கியா முடியாது என்றார். ஆனால், இனியா தன்னுடைய அம்மாவை வலுக்கட்டாயமாக அந்த போட்டி நடத்தும் இடத்திற்கு அழைத்து சென்று பாக்கியாவின் பெயரைக் கொடுத்தார். அங்கு போட்டியை ஏற்பாடு செய்த மேனேஜர், இது ஒன்னும் வீட்டு சமையல் செய்யும் வேலை இல்லை. பெரிய பெரிய செப்புகள் கலந்து கொள்ளும் போட்டி என்று ஏளனமாக பேசி இருந்தார். இதை கேட்டு பாக்கியா, என்னால் முடியும் என்று தன்னம்பிக்கையுடன் பேசி விட்டு வந்தார்.

பாக்கியலட்சுமி:

நேற்று எபிசோட்டில் பாக்கியா, ஈஸ்வரியை கவனித்துக் கொண்டிருந்தார். அந்த சமயம் வந்த கோபி, பாக்கியாவிடம் தன் மாமியாரை பற்றி நலம் விசாரித்தார். இதைக் கேட்டவுடன் பாக்யாவிற்கு ஷாக். அதற்கு பின் வீட்டில் சண்டை போடும் சத்தம் கேட்பதால் இனியா உடனே கீழே வந்து பார்த்தார். அங்கு நிதிஷ் போதை பொருளை பயன்படுத்தி இருந்ததால் தடுமாறி இருந்தார். இதனால் சுதாகர், நிதிஷையும் அவருடைய அம்மாவையும் பயங்கரமாக திட்டிக் கொண்டிருந்தார். அப்போது நிதிஷ் அம்மா, உங்களுக்கு பிறக்கவில்லை என்பதால் தானே இப்படி எல்லாம் பேசுகிறீர்கள். பணத்துக்காக நீங்கள் தான் எங்கள் இருவரையும் தேடி வந்தீர்கள் என்று சொன்னார். இதையெல்லாம் கேட்டு இனியாவிற்கு அதிர்ச்சியானது.

நேற்று எபிசோட்:

பின் இனியா வந்திருப்பதை பார்த்தவுடன் சுதாகர் சமாளித்தார். பின் இனியா, நிதிஷை பார்க்க போனார். அப்போது கோபத்தில் நிதிஷ், இனியாவை கீழே தள்ளி விடுவதால் மண்டையில் அடிபட்டது. அந்த சமயம் பார்த்து சுதாகர் வந்து விட்டார். அவர்கள் இனியாவை வெளியே அனுப்பிவிட்டு நிதிஷை சமாதானம் செய்தார்கள். கோபத்தில் நிதிஷின் அம்மா, பாக்கியாவின் ரெஸ்டாரன்ட் மேல் இருந்த ஆசையால்தான் நீங்கள் இந்த திருமணத்தை செய்து வைத்தீர்கள். அதனால் தான் என் மகனுக்கு இந்த நிலைமை என்றெல்லாம் பல உண்மைகள் வெளியே வந்தது .இதைக் கேட்டு இனியா அதிர்ச்சி மேல் அதிர்ச்சியானார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் இனியா, ஆபீஸில் வேலை செய்து கொண்டிருக்கிறார். பின் தன் அப்பாவிடம் போன் செய்து ஆபீசுக்கு வரவைக்கிறார். இன்னொரு பக்கம் போட்டியில் கலந்து கொள்வதற்காக பாக்கியா கிளம்புகிறார். அப்போது இனியாவிற்கு ஃபோன் செய்து பாக்கியா பேசுகிறார். அதற்குப்பின் இனியாவை சந்திக்க வந்த கோபி, என்ன பிரச்சனை? நீ நன்றாக இருக்கிறாயா? என்று கேட்கிறார். அதற்கு இனியா, பிரச்சனை தான். நீங்கள் நினைப்பது போல் சுதாகர் குடும்பம் நல்லவர்கள் கிடையாது. அவர்கள் நிறைய பொய் சொல்லி இருக்கிறார்கள். அம்மாவின் ரெஸ்டாரண்டை வாங்குவதற்காக தான் இந்த திருமணத்தை நடத்தி இருக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

நிதிஷ் இன்னும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி தான் இருக்கிறார் என்று சொல்கிறார். இதைக் கேட்டவுடன் கோபிக்கு இடி மேல் இடி விழுகிறது. இன்னொரு பக்கம் போட்டிக்கு பாக்கியா சென்ற இடத்தில் சில இளைஞர்கள் போதைப் பொருளை பயன்படுத்தியதால் போலீஸ் அவர்களை கைது செய்து இருக்கிறார்கள். அந்த கும்பலில் நிதிஷ் இருப்பதை பார்த்து பாக்கியா அதிர்ச்சாகிறார். பின் சுதாகரிடம் போன் செய்து நடந்ததை பாக்கியா சொல்கிறார். சுதாகருக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. பாக்கியா, கோபி- இனியாவிடம் உண்மையை சொல்ல முடியாமல் தவிக்கிறார். அதற்குப்பின் சுதாகர் வீட்டிற்க்கே பாக்கியா செல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full