கவுன்சிலரின் முகத்திரையை கிழத்த பாக்கியா, அமைச்சர் முடிவு என்ன? பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் ஈஸ்வரி, ஜெனியின் அப்பா எல்லோரும் பாக்கியாவை திட்டினார்கள். உடனே கோபத்தில் ஜெனியின் அப்பா, ஜெனியையும் அவருடைய குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார். பாக்கியா எப்படியாவது செழியனை வெளியே கொண்டு வர வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்தார். தனக்கு தெரிந்தவர்கள் மூலமெல்லாம் உதவி கேட்டார். கடைசியில் பாக்கியா கவுன்சிலர் வீட்டுக்கு சென்றார். அங்கு கவுன்சிலர் நக்கலாக பாக்யாவிடம் பேசி இருந்தார். கவுன்சிலர், நீ உன் பையனை வெளியில் அழைத்து வருவது ரொம்ப கஷ்டம் என்று சொன்னார். இதனால் பாக்கியா ரொம்பவே பதறி போனார்.
கவுன்சிலர், ரொம்ப ஏளனமாக பாக்கியாவை பேசினார். கடைசி வரை பாக்கியா எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவர் கேட்கவே இல்லை. பின் கவுன்சிலர், உன் மகனை உன்னால் முடிந்தால் வெளியில் எடு என்று சவால் விட்டார்.` அதற்குப்பின் வேதனையில் வெளியே வந்த பாக்கியா, செழியன் நிலையை நினைத்து வருத்தப்பட்டார். அதற்கு பின் பாக்கியா, அமிர்தாவின் வீட்டிற்கு சென்றார். அங்கு அமிர்தா, நான் எப்போதும் உங்களுக்கு சப்போர்ட் செய்தேன். நீங்கள் செய்யும் வேலை எனக்கு பிடிக்கவில்லை என்று பாக்கியாவிடம் ரொம்ப கோபமாக பேசி இருந்தார்.
பாக்கியலட்சுமி:
அப்போது பாக்கியா, நான் எப்படியாவது செழியனை வெளியே கொண்டு வருகிறேன். என்னை மன்னித்துவிடு என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார். பின் கவுன்சிலருக்கு ஆகாத ஒரு குரூப் அவனை திட்டிக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் கவனித்த பாக்கியா, கவுன்சிலரின் எதிரி குரூப் அமைச்சரை சந்திக்க அவர்கள் வீட்டிற்கு சென்றார்கள். அங்கு வந்த கவுன்சிலர் பாக்கியாவை பார்த்தவுடன் ரோட்டிலேயே பயங்கரமாக சண்டை போட்டார். இதையெல்லாம் பார்த்த கவுன்சிலரின் எதிரி குரூப் பாக்கியாவிடம் தனியாக சந்தித்து பேச, பாக்கியா நடந்த உண்மை எல்லாம் அவர்களிடம் சொல்லி அமைச்சரை பார்க்க கேட்டார்.
நேற்று எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் அமைச்சரின் வீட்டிற்கு வெளியே பாக்யா காத்துக் கொண்டிருந்தார். கவுன்சிலரின் எதிரி குரூப், பாக்கியாவை உள்ளே அழைத்தார்கள். அப்போது அமைச்சருக்கு செய்த சமையல் சரியில்லை என்பதால் எதிரி குரூப் ரொம்பவே வேதனைப்பட்டார்கள் . உடனே பாக்கியா, நான் சமைத்து தருகிறேன் என்று சொன்னார். தேவையான பொருள்களை எல்லாம் அவர்களிடம் கேட்டு வாங்கி சமையலை பாக்கியா செய்து விட்டார். அதை பார்த்த கவுன்சிலர், பாக்கியாவிடம் சண்டை வாங்கி மிரட்டி விட்டு சொன்னார். அதற்குப்பின் ஈஸ்வரி, பாக்யாவிற்கு போன் செய்தார். பாக்கியா, நான் ஒரு ஆர்டருக்கு வந்திருக்கிறேன் என்று போனை வைத்து விட்டார். இதனால் ஈஸ்வரி பயங்கரமாக கோபப்பட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி, செழியனை வெளியில் கொண்டு வருவது பற்றி பேசுகிறார். கோபி, அதற்கான முயற்சிகள் தான் செய்து கொண்டிருக்கிறேன் என்று சொன்னார். உடனேஈஸ்வரி, நீ செழியனை வெளியே எடுக்க போராடுகிறார். ஆனால், பாக்கியா கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் சமையல் ஆர்டர் எடுத்து இருக்கிறார். இவளை எல்லாம் என்ன சொல்வது என்று திட்டிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் பாக்கியா, சமையல் எல்லாம் செய்து முடித்து விட்டார். சாப்பாடு பரிமாறுவதற்கு ரெடியாக இருக்கிறார். உடனே கவுன்சிலர், பாக்கியா அமைச்சரை சந்திக்க விடாமல் தடுக்கிறார். பின் சாப்பாட்டை சாப்பிட்ட அமைச்சர் ரொம்பவே புகழ்ந்து பாராட்டுகிறார்.
சீரியல் ட்ராக்:
கவுன்சிலர் ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். பின் கவுன்சிலரின் எதிரி குரூப் பாக்கியாவை உள்ளே அழைத்து வருகிறார்கள். அப்போது பாக்கியா, அமைச்சரிடம் தன்னை பற்றிய விவரத்தை சொல்லிவிட்டு கவுன்சிலர் தன் மகனை ஜெயிலுக்கு அனுப்பி விஷயத்தையெல்லாம் சொல்கிறார். இதைக் கேட்டவுடன் அமைச்சருக்கு பயங்கர ஷாக். கவுன்சிலர், பாக்கியாவின் மீது பழி போடுகிறார். ஆனால், பாக்கியா ஆதாரத்துடன் கவுன்சிலரின் முகத்திரையை கிழிக்கிறார். அமைச்சர் கவுன்சிலரை திட்டி விட்டு செழியினை விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய சொல்கிறார். இதனால் பாக்கியாவிற்கு சந்தோசம். இத்துடன் சீரியல் முடிகிறது.