கோபியிடம் உதவி கேட்கும் பாக்கியா, கோபத்தில் ராதிகா - அடுத்து என்ன? பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் பாக்கியா தொடர்ந்த வழக்குக்கு கோர்ட்டில் ஆஜராக சொல்லி சம்மன் வந்திருந்தது. இதை கேட்டவுடன் வீட்டில் எல்லோருமே அதிர்ச்சி ஆனார்கள். கோபத்தில் ஈஸ்வரி, பாக்கியாவிடம் சண்டைக்கு போனார். பின் கோபி, நான் எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் பார்த்துக்கொள்கிறேன் என்றார். அதன் பின் கோர்ட்டுக்கு கிளம்ப பாக்கியா தயாராக இருந்தார். ஈஸ்வரி, கடவுளிடம் தன் மகனுக்காக வேண்டிக்கொண்டு, கோபியை பார்த்து ரொம்ப எமோஷனலாக அழுது புலம்பி இருந்தார். பாக்கியா எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார்.
பின் கோர்ட்டில் பாக்கியாவின் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பாக்கியாவின் லாயர், நாங்கள் கேஸ் வாபஸ் வாங்கிக் கொள்கிறோம் என்று சொன்னார். உடனே நீதிபதி, பாக்யாவை திட்டி விட்டு கேசை தள்ளுபடி செய்தார். இதையெல்லாம் கேட்டு ராதிகா- கோபி இருவருமே ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். பின் கோபி ரொம்ப எமோஷனலாக பாக்கியாவிடம் பேசி இருந்தார். ஆனால், அதைப்பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் பாக்கியா கிளம்பி வந்து விட்டார். பின் வீட்டிற்கு வந்த கோபி, கோர்ட்டில் நடந்ததை சொல்ல ஈஸ்வரி ரொம்ப சந்தோஷப்பட்டார். ஆனால், ஈஸ்வரி, பாக்கியாவை திட்டி இருந்தார்.
பாக்கியலட்சுமி:
அதற்கு கோபி, பாக்கியா என்னுடைய உயிரையும் மானத்தையும் காப்பாற்றி இருந்தார். அவளை பற்றி எதுவும் பேசாதீர்கள் என்றெல்லாம் புகழ்ந்து பேசி இருந்தார். அதற்குப்பின் ராதிகா, ஈஸ்வரி பேசியதை பற்றி கேட்க, பாக்கியா பெருமையாக தான் பேசி இருந்தார். இது எல்லாம் கேட்ட ஈஸ்வரி, ராதிகாவிடம் சண்டைக்கு போனார். அதற்கு ராதிகா, ஈஸ்வரியை எதிர்த்து பேசி மிரட்டி இருந்தார். நேற்று எபிசோட்டில் ராதிகா மிரட்டலால் ஈஸ்வரி பயந்தே போனார். அதற்குப்பின் கோபி- ராதிகா இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
நேற்று எபிசோட்:
இதை பார்த்து ஈஸ்வரிக்கு பயங்கரமாக கோபம் தான் வந்தது. அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு கோபியின் நண்பர் செந்தில் வந்தார். அப்போது ஈஸ்வரி, நக்கலாக ராதிகா பற்றி பேசி இருந்தார். பின் கோபி-செந்தில் இருவரும் தனியாக பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது கோபி, பாக்யாவை பற்றி ரொம்ப புகழ்ந்து பேசி, பாக்கியா-ராதிகா ரெண்டு பேருமே வீட்டில் இருப்பது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது என்றெல்லாம் சொன்னார். இதை எல்லாம் கேட்டு ராதிகா கோபப்பட்டு கோபியிடம் சண்டை வாங்கினார்.
இன்றைய எபிசோட்:
கோபியால் எதுவும் பேசா முடியாமல் திணறினார். இன்னொரு பக்கம் வீட்டிற்கு வந்த எழில், ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விஷயத்தை சொல்லி சந்தோஷப்பட்டார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாக்யா, தன்னுடைய புதிய ஆர்டருக்கு ஆட்கள் நிறைய தேவை. என்ன செய்வது? என்று புரியவில்லை என்று பேசிக் கொண்டிருக்கிறார். உடனே ஈஸ்வரி, இந்த ஆர்டர் வேண்டாம் என்று சொல்கிறார். அதற்கு ராதிகா, பண பிரச்சினை என்றால் நான் கடனாக கொடுக்கிறேன் என்கிறார். உடனே கோபி, என்னுடைய ரெஸ்டாரண்டில் இருந்து செஃப்களை அனுப்பி வைக்கிறேன்.
சீரியல் ட்ராக்:
அவர்களை வைத்து சமைத்து கொள் என்று சொல்கிறார். இருந்துமே பாக்யா ஏற்றுக்கொள்ளவில்லை.
அதற்குப்பின் ஜெனி- செழியன் இருவருமே அவரால் தான் உங்களுக்கு இந்த பிரச்சனை. இந்த உதவியை எடுத்துக் கொள்வது ஒன்றும் தவறு இல்லை என்று சொன்னவுடன் பாக்யாவும் முழு மனது இல்லாமல் கோபி இடம் உதவி கேட்கிறார். கோபியும் சரி என்கிறார். உடனே ஈஸ்வரி, கோபி உனக்காக எல்லாம் செய்வேன். நீ தான் புரிந்து கொள்ளவில்லை என்று அவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பது போலவே பேசுகிறார். இதையெல்லாம் கேட்ட ராதிகா கோபப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.