ஹோட்டல் திறப்பு விழா: செல்ல விடாமல் தடுக்கும் சுதாகர், இனியா என்ன செய்யப் போகிறார்? பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் பாக்கியா, என்னை என் போக்கில் போக விடுங்கள் என்று சொன்னார். அதற்குப்பின் பாக்கியா, தன்னுடைய ஓட்டல் சரி செய்யும் வேலையில் மும்முறமாக செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கோபி, பாக்கியாவின் நிலைமையை நினைத்து வருத்தப்பட்டார். அதற்குப்பின் வீட்டில் பாக்கியா சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது கோபி, நீ புதிதாக திறக்க போகும் ஓட்டலை பார்த்தேன். ரொம்ப சின்னதாக இருக்கிறது. எந்த உதவி என்றாலும் என்னிடம் கேள். நான் உனக்கு செய்கிறேன் என கேட்டார். ஆனால், பாக்கியா எதுவும் தேவையில்லை என்றார்.
பாக்கியலட்சுமி தன்னுடைய மெஸ் திறப்பதற்கான வேலையெல்லாம் செய்து கொண்டிருந்தார். அங்கு வந்த எழில்- அமிர்தா இருவரும் பாக்கியாவிற்கு வாழ்த்து சொன்னார்கள். பின் வீட்டிற்கு வந்த பாக்கியாவிடம் ஈஸ்வரி, புது மெஸ் ஆரம்பிப்பதை பற்றி கேட்டு சண்டை போட்டார். ஆனால், பாக்கியா தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார். அதற்குப்பின் இனியா வந்திருப்பதை அறிந்த பாக்கியா அவரை பார்க்க சுதாகர் வீட்டிற்கு சென்றார். அங்கு இனியாவிடம் பாக்கியா பேசி இருந்தார். அப்போது பாக்கியா, புது மெஸ் ஆரம்பிக்கும் விஷயத்தை எல்லோரிடமும் சொன்னார். இதை கேட்டவுடன் சுதாகர் பயங்கரமாக கோபப்பட்டு செழியனிடம் விசாரித்தார்.
பாக்கியலட்சுமி:
சுதாகர், இனியாவின் அம்மா, என்னுடைய சம்மந்தி கையேந்திபவன் நடத்துகிறார் என்று சொன்னால் எனக்கு நன்றாக இருக்குமா? என்று கேட்டார். உடனே பாக்கியா, இந்த நிலைமைக்கு நான் தான் காரணம் என்று சொல்லுங்கள் என அவருக்கு பதிலடி கொடுத்து விட்டு வந்தார். அதற்குப்பின் சுதாகர் வீட்டில் நடந்ததைச் செழியன் ஈஸ்வரிடம் சொன்னார். பின் அவர் பாக்யாவிடம் கோபப்பட்டு சண்டை போட்டார். ஆனால், பாக்கியா அதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் அங்கிருந்து சென்றார்.
கடந்த வாரம் எபிசோட்:
இன்னொரு பக்கம் இனியா, தன்னுடைய அம்மாவின் புதிய ரெஸ்டாரண்டை திறப்பது பற்றி தன்னுடைய குடும்பத்திடம் பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தார். இதனால் சுதாகருக்கு கோபம் அதிகமானது. ஆனால், அவரால் வெளியே ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். இன்னொரு பக்கம் பாக்கியா மெஸ் திறக்கும் இடத்திற்கு அந்த ஏரியாவின் கவுன்சிலர் வந்தார். அப்போது அந்த ஓட்டலின் உரிமையாளர், இவர்கள் பணமே தரமாட்டார்கள், ஏமாற்றுவார்கள் கொஞ்சம் கவனமாக இருங்கள் என்று அறிவுரை சொன்னார். அடுத்த நாள் ரெஸ்டாரன்ட் புதிய மெஸ் திறப்பதற்கு பாக்கியா கிளம்ப, ஈஸ்வரி வழக்கம் போல பாக்கியாவை திட்டி இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா தன்னுடைய புது ஹோட்டலை திற்பதற்கான வேலைகள் செய்து கொண்டிருக்கிறார். அங்கு பாக்கியாவின் குடும்பத்திலிருந்து ஒவ்வொருவராக வருகிறார்கள். ஆனால், ஈஸ்வரி மட்டும் வரவில்லை. இதனால் பாக்கியா கொஞ்சம் வருத்தப்படுகிறார். அதற்குப்பின் பூஜை துவங்கும் போது ஈஸ்வரி வந்து விடுகிறார். இதனால் பாக்கியாவுக்கு ஒரே சந்தோஷம். இருந்தாலும் ஈஸ்வரி ரொம்ப நக்கல், கிண்டலாக ஓட்டலையும் பாக்யாவையும் பேசுகிறார். அதற்குப்பின் பூஜையெல்லாம் முடிந்து எல்லோருமே ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
அப்போது ஈஸ்வரி, இந்த இடத்தில் என்னால் இருக்க முடியவில்லை என்று கோபியை அழைத்துக்கொண்டு சென்று விடுகிறார். பின் பாக்கியா புது ஹோட்டலை பற்றி கோபி இடம் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார். ஆனால், கோபி அதை பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை. இன்னொரு பக்கம் இனியா, தன்னுடைய அம்மாவின் புது ஹோட்டல் திறப்பு விழாவிற்கு கிளம்ப தயாராகிறார். அதற்கு சுதாகர், விஐபி வீட்டிற்கு போக வேண்டும். நாளைக்கு அவர்கள் யுஎஸ்ஏ செல்கிறார்கள் என்று ஏதேதோ காரணங்களை சொல்லி இனியாவை போகவிடாமல் தடுத்து விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.