பாக்யாவை பழிவாங்க துடிக்கும் கோபி, நம்பிக்கையோடு இருக்கும் பாக்யா- விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் கடந்த வாரம் கெட்டுப்போன சாப்பாட்டை ஈஸ்வரி ரெஸ்டாரண்டில் கொடுத்ததாக சொல்லி கலவரம் வெடித்தது. அதனால், உணவுத்துறை அதிகாரிகள் ரெஸ்டாரண்டுக்கு சீல் வைத்து, 50 ஆயிரம் பைன் போட்டு இருந்தார்கள். இதனால்எல்லாருமே அதிர்ச்சியாகி இருந்தார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் கோபி, பாக்கியாவின் ரெஸ்டாரண்டை குறித்து வரும் செய்தியை பார்த்து சந்தோஷப்பட்டு நடந்ததை ராதிகாவிடம் சொன்னார். ஆனால், ராதிகா அதை நம்பவில்லை.
இன்னொரு பக்கம் பாக்கியா, கடை கணக்கு பார்க்கும் போது லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார். பின், பாக்கியாவை பார்த்து கோபி, சந்தோஷத்தில் கிண்டலும் கேலியும் செய்திருந்தார். அதற்கு பாக்யாவும் பதிலுக்கு கோபியிடம் சவால் விட்டிருந்தார். பின் வீட்டில் ஜெனியின் அம்மா, ஜெனியை அழைத்துச் செல்ல பாக்கியவிடம் கேட்டார். ஆனால், ஜெனி பிடிவாதமாக முடியாது என்று மறுத்து விட்டார். ரெஸ்டாரண்டை பார்த்து பாக்கியா ரொம்ப வருத்தப்பட, பழனிசாமி மற்றும் எழில் அவருக்கு ஆறுதல் கூறியிருந்தார்கள்.
பாக்கியலட்சுமி சீரியல்:
இன்னொரு பக்கம் ஜெனி, சரி எனக்கு போன் செய்து பணத்தை ரெடி பண்ணுவதை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரின் உயர் அதிகாரி அவரை கூப்பிட்டு, உங்களுக்கு வேலை இல்லை. இத்தனை பேருக்கு எங்களால் வேலை கொடுக்க முடியாது என்று சொல்ல செழியன் அதிர்ச்சி ஆகிறார்.பின் நேற்று எபிசோட்டில் செழியன் ரொம்பவே வருத்தப்பட்டு புலம்புகிறார். ஆனால், அவர் அதிகாரி ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்குப்பின் செழியன் வேதனையில் கோபியை பார்க்க வருகிறார். கோபி இடம் சொல்லி நடந்ததை சொல்லி ஒரு குழந்தையைப் போல அழுது புலம்புகிறார் செழியன்.
நேற்று எபிசோட்:
பின் கோபியும் செழியனுக்கு ஆறுதல் சொல்லி சமாதானப்படுத்துகிறார். இன்னொரு பக்கம் செழியன் வீட்டுக்கு வராததை நினைத்து ஜெனி வருத்தப்பட்டு கொண்டிருக்க, செழியன் வந்தார். அவர் முகம் வாடி இருந்ததை பார்த்து பாக்கியா-ஜெனி இருவரும் காரணம் கேட்க, அவர் எதுவும் சொல்லவில்லை. இன்னொரு பக்கம் சினிமா வாய்ப்பை தேடி தயாரிப்பாளரை எழில் சந்திக்கிறார். ஆனால், அவர் வாய்ப்பு தர மறுக்கிறார். எழிலும் மன்னிப்பு கேட்டு கெஞ்சுகிறார். ஆனால், அவர் எதையுமே காதில் வாங்கவில்லை.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில், எழில் எவ்வளவோ கெஞ்சியும் ப்ரொடியூசர் வாய்ப்பு கொடுக்காமல் சென்றுவிட்டார். பின் வீட்டில் கோபி-ராதிகா சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, பாக்யா நாளைக்குள் கஸ்டமர்களுக்கு பணம் செட்டில் பண்ணவில்லை என்றால் அவள் கதி அரோகதி என்று கோபி சொல்கிறார். அப்போது பாக்கியம் மீது எதற்கு உங்களுக்கு இவ்வளவு வன்மம் என்று ராதிகா திட்டுகிறார். பின் ராதிகாவின் அம்மாவும் கோபிக்கு சப்போர்ட் செய்வது போல் பேசுகிறார்.
சீரியல் ட்ராக்
அதனைத் தொடர்ந்து, எழில் தனது அம்மாவை போலீஸ் கைது செய்வது போல் கெட்ட கனவு காண அமிர்தா வரை சமாதான செய்து தூங்க வைக்கிறார். மறுநாள் பாக்கியா, வீட்டில் இருக்கும் நகைகளை எல்லாம் அடகு வைத்து எப்படியாவது என்று பணத்தை கொடுத்து விட வேண்டும் என்று ஏற்பாடு செய்கிறார். பின் ஹோட்டலில் வேலை செய்த பெண்கள் பாக்கியாவிடம் வந்து தங்கள் வேலையை நினைத்து கஷ்டப்பட்டு பேசுகிறார்கள். அதற்கு பாக்யா அவர்களுக்கு ஆறுதல் கூறி மீண்டும் நாம் ஹோட்டலை திறப்போம் என்று நம்பிக்கை கொடுத்து அனுப்புகிறார். இத்துடன் இன்றைய சீரியல் முடிகிறது