ரெஸ்டாரண்ட் விவகாரம்: சுதாகருக்கு பாடம் புகட்ட நினைக்கும் பாக்கியா - விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

By subhashini · 2/5/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் சுதாகர், தண்டனை தான் உங்களுக்கு இது என்று பாக்கியாவை ரொம்ப ஏளனமாக பேசி இருந்தார். இதனால் பாக்கியாவிற்கு இன்னும் கோபம் அதிகமானது. பின் வீட்டில் பாக்கியா, சுதாகர் தன்னுடைய ரெஸ்டாரண்டை அபகரித்த விஷயத்தை சொன்னார். ஆனால், ஈஸ்வரி வழக்கம் போல பாக்கியா பேச்சை கேட்கவே இல்லை. இன்னொரு பக்கம் எழில், பழைய ரெஸ்டாரண்டின் ஓனரிடம் சுதாகர் வாங்கியதைப் பற்றி கேட்டார். அதற்கு அவர், என் கடன் தொல்லைக்காக தான் கொடுத்து விட்டேன் என்றார்.

பின் கோபி, சுதாகரிடம் பாக்கியா ரெஸ்டாரண்ட் வாங்கியதைப் பற்றி பேசி இருந்தார். கோபி, சுதாகரிடம் ரெஸ்டாரன்ட் வாங்கிய விஷயத்தை பற்றி பேசி இருந்தார். அதற்கு சுதாகர், எனக்கு பாக்கியாவோட ரெஸ்டாரண்ட் எங்கு இருக்கு? என்று தெரியவில்லை. எனக்கும் அதுக்கும் சம்மந்தமில்லை. சம்மந்தி தேவையில்லாமல் என் மீது பின் பழி போடுகிறார் என்று அப்படியே மாற்றி பேசி இருந்தார். பின் இதைப் பற்றி கோபி, பாக்கியாவிடம் சொன்னார். ஆனால், பாக்கியா, நீங்கள் எல்லோரும் அவரை நம்புங்கள். நான் நம்ப மாட்டேன். இது அவருடைய வேலை தான் என்று சொன்னார்.

பாக்கியலட்சுமி:

பின் கோபி, பாக்கியாவின் ரெஸ்டாரண்டுக்கு போனார். அங்கு சுதாகரும் பழைய ஒனரும் பேசி இருப்பதை பார்த்து அவருக்கு கோபம் வந்தது. உடனே சுதாகர், நான் இப்போது தான் இவரை பார்த்தேன். இவர் தான் இந்த ஓட்டலை வாங்கி இருக்கிறார் என்று வேறொருவரை கை காண்பித்து திருப்பவும் கோபியை ஏமாற்றி விட்டார். கோபியும் அதை நம்பி பாக்கியாவிடம் பேசி இருந்தார். ஆனால், பாக்கியா எதையுமே சொல்லாமல் அமைதியாக இருந்தார். பின் ரெஸ்டாரண்டை காலி செய்து மொத்த பெண்களுமே வேலை போனதை நினைத்து பாக்கியாவிடம் வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருந்தார்கள்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் ரெஸ்டாரண்டுக்கு வந்த பழைய ஓனர் பாக்யாவிடம் செட்டில்மெண்ட் பணத்தை கொடுத்து விட்டு ரெஸ்டாரண்டை காலி செய்ய சொன்னார். அதற்கு பாக்கியா, இதை நீங்களாவே சொல்லி இருந்தால் எனக்கு கவலை இல்லை. சுதாகர் சொல்லி ரெஸ்டாரண்டை காலி செய்ய சொன்னது தான் கஷ்டமாக இருந்தது. இப்படி ஒரு நம்பிக்கை துரோகம் எனக்கு செய்ய வேண்டியது இல்லை என்று ரொம்ப பேச அவரால் எதுவுமே பேச முடியவில்லை. அதற்குப்பின் வங்கிக்கு சென்ற பாக்கியா ரெஸ்டாரன்ட் மீது இருக்கும் லோனை பற்றி விசாரித்தார். இன்னொரு பக்கம் வீட்டில் சுதாகர் எல்லோரிடமும் எதுவுமே நடக்காதது போல பேசிக் கொண்டிருந்தார். இதை பார்த்தவுடன் பாக்கியாவுக்கு கோபம் அதிகமானது.

சீரியல் ட்ராக்:

அப்போது சுதாகர், ரெஸ்டாரண்டை பற்றி பேசுகிறார். உடனே பாக்கியா, உங்கள் மனதிற்கு கஷ்டம் இல்லை என்றால் ரெஸ்டாரன்ட்டுக்கு தேவையான பணத்தை நீங்கள் கொடுத்துவிடுங்கள். உங்களுக்கு குற்ற உணர்ச்சி வேணாம் என்று சொன்னவுடன் சுதாகரால் எதுவும் பேசவில்லை. வீட்டில் உள்ள எல்லோருமே பணமெல்லாம் வேண்டாம் என்று சொன்னார்கள். அதற்கு பாக்கியா, அவருடைய வழியிலேயே போய் பதிலடி கொடுத்தார். சுதாகரால் எதுவும் பேச முடியாமல் நாளை வந்து பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று அங்கிருந்து கிளம்பி விட்டார். பின் கோபி, எதற்காக பணத்தை கேட்டாய் என்று கேட்டவுடன் பாக்கியா, ரெஸ்டாரண்டுக்கு வாங்கிய லோன் அப்படியே இருக்கு. எப்படி கட்டுவது என்றவுடன் வீட்டில் யாராலும் பேச முடியவில்லை.

https://www.youtube.com/watch?v=wchwJwUpGb0

சீரியல் ப்ரோமோ:

இப்படி இருக்கும் நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் ரெஸ்டாரண்டுக்காக வாங்கிய லோன் மட்டுமே 45 லட்சம் இருக்கிறது. இதை எப்படி அடைப்பது என்று புரியாமல் பாக்கியா, செல்வியிடம் புலம்புகிறார். அதற்குப்பின் சுதாகரிடம் ரெஸ்டாரண்டிற்காக பாக்கியா விலை பேசுகிறார். எவ்வளவு வேண்டும் என்று சுதாகர் கேட்கிறார். 60 லட்சம் கொடுங்கள் என்று பாக்கியா கேட்கிறார். சுதாகரால் எதுவுமே பேச முடியவில்லை.

behindtalkies AMP · Quick view
View full