கோபியால் தவறான வழிக்கு செல்லும் செழியன், கோபத்தில் கொந்தளித்த பாக்கியா- பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இனியாவை கல்லூரியில் விட ஈஸ்வரி போக, அப்போது ராதிகாவின் அம்மா ரொம்ப மோசமாக ஈஸ்வரியை பேசி இருந்தார். இதையெல்லாம் கேட்டு மனமுடைந்தார் ஈஸ்வரி. இன்னொரு பக்கம் ரெஸ்டாரண்டில் பாக்கியா ஆர்டரை கெடுக்க கோபி வைத்த நபர் திட்டம் போட்டார். ஆனால், அவர் எண்ணம் பழிக்கவில்லை. ஈஸ்வரி, இனியாவை கல்லூரியில் கொண்டு போய் விட சொல்லி செழியன் இடம் கேட்க, அவர் கோபப்பட்டு பேசி இருந்தார். இதை ஜெனி, பாக்கியாவிடம் சொல்ல அவர், செழியனை திட்டி அறிவுரை சொல்லி இருந்தார்.
இன்னொரு பக்கம் கோபி, பாக்கியா ரெஸ்டாரண்டை ஒழிக்க திட்டம் போட்டார். இந்த வாரம் ஈஸ்வரியை தன்னுடைய ரெஸ்டாரண்டுக்கு பாக்கியா அழைத்து சென்றார். அப்போது அங்கிருந்தவர்கள் ஈஸ்வரியை பார்த்து நக்கலாகவும்,ஏளனமாகவும் பேசி இருந்தார்கள். இதையெல்லாம் கேட்டு ஈஸ்வரி மனமடைந்து வீட்டுக்கு வந்து விட்டார். உடனே பாக்கியா அவரை சமாதானம் செய்தார். ஆனால், ஈஸ்வரி ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் கோபப்பட்ட பாக்கியா, ஈஸ்வரியை மோசமாக பேசியவர்களை கடுமையாக திட்டி இருந்தார்.
பாக்கியலட்சுமி:
அதற்குப்பின் பாக்கியா, ராதிகாவிடம் உங்கள் அம்மாவிற்கு எதற்கு இந்த தேவையில்லாத வேலை. இனியும் என் மாமியார் விஷயத்தில் அவர்கள் தலையிட்டால் தொலைத்து விடுவேன் என்று கோபமாக திட்டி இருந்தார். மேலும், ராதிகா இதை பற்றி தன்னுடைய அம்மாவிடம் கேட்டதற்கு, அவர் ஏதோ சொல்லி சமாளித்தார். இதனால் ராதிகா தன் அம்மாவை திட்டி விட்டு ஈஸ்வரியை பார்க்க போனார். நேற்று எபிசோட்டில் ராதிகா, ஈஸ்வரியை பார்த்து தன் அம்மா பேசியதற்கு மன்னிப்பு கேட்டார். பின் ஈஸ்வரி செய்த தவறை சுட்டி காட்டி பேசி இருந்தார்.
நேற்று எபிசோட்:
இதை எல்லாம் கேட்டு ஈஸ்வரி- பாக்கியா கோபப்பட்டார்கள். பின் பாகியா, எதற்கு நீங்கள் இப்படி எல்லாம் பேசுகிறீர்கள் என்று கேட்டதற்கு ஊருக்காக தானே அவர்கள் வாழ்ந்தார்கள். மற்றவர்களை பற்றி அவர்கள் யோசிக்கவில்லை. வயதானால் பக்குவம் வேணும் அதைத்தான் அவர்களுக்கு சொல்லி புரிய வைத்தேன் என்று ராதிகா சொன்னார். பின் ஈஸ்வரி, இப்போ ஊரே என்னை தவறாக பேசுகிறது என்று புலம்ப, பாக்கியா ஆறுதல் சொன்னார்.
இன்று எபிசோட்:
இன்னொரு பக்கம் கோபி ரெஸ்டாரண்டில் செழியன் பேசி கொண்டு இருந்தார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில், செழியன் தன் மன கஷ்டங்களை கோபியிடம் சொல்லி புலம்புகிறார். அப்போது செழியன் குடிக்கிறார். ஆனால், கோபி அதை தடுக்காமல் அவரை என்கரேஜ் செய்கிறார். நிலை தடுமாறும் அளவிற்கு செழியன் குடித்து விடுவதால் வீட்டில் கொண்டு வந்து கோபி விடுகிறார். இதை பார்த்து ஜெனி, ஈஸ்வரி, பாக்யா மூவருமே ஷாக் ஆகி கோபப்படுகிறார்கள். பின் செழியனை தூங்க வைத்துவிட்டு கோபி வருகிறார்.
சீரியல் ட்ராக்:
அப்போது பாக்கியா, நீங்கள் தான் இதையெல்லாம் அவனுக்கு சொல்லித் தருகிறீர்களா? என்று கேட்க, வீட்டில் நிம்மதி இல்லை என்றால் அப்படித்தான் குடிப்பார்கள். அவன் குடிப்பதற்கு நீங்கள் தான் காரணம் என்று கோபி சொல்கிறார். உடனே பாக்கியா, எங்களுக்கும் தான் ஆயிரம் கவலை இருக்கிறது. அதற்காக குடிக்கிறமா? என்று இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமானது. பின் ஈஸ்வரி, ஒரு பிள்ளையின் வாழ்க்கையை கெடுக்கிற என்று திட்டுகிறார். ஆனால், கோபி யார் சொல்வதையும் பற்றி கவலை இல்லாமல் அவர்களுக்கு பதிலடி கொடுத்துவிட்டு அங்கிருந்து செல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.