இனியா காதலிக்கும் விஷயம் அறிந்து கோபி செய்த வேலை, அதிர்ச்சியில் உடைந்த பாக்யா - பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' கோபி, உனக்கு இப்போது சந்தோஷமா, நான் கிளம்புவதற்குள் எல்லோரையும் ஒன்று சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைத்தேன் என்று சொன்னார். இது எல்லாம் கேட்டவுடன் பாக்கியாவுக்கு பயங்கர கோபம் வந்தது. பின் அவர், என் மகன்கள் என்னுடன் தான் இருக்க வேண்டும் என்று உங்களிடம் சொன்னேனா? உங்கள் அம்மா என்னென்ன பிரச்சனை எல்லாம் செய்யப் போகிறார்கள் பாருங்கள் என்று ரொம்ப ஆவேசமாக பேசி இருந்தார். கோபிக்கு ஒன்றுமே புரியவில்லை. அதற்கு பின் ஈஸ்வரி, பாக்கியா ரொம்ப திமிர் பிடித்தவளாக இருக்கிறார்.
சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் அவளுடைய குணமே மாறிவிட்டது. பிள்ளைகள் வீட்டிற்கு வந்ததை நினைத்து வேதனைப்படுகிறார் என்று வழக்கம் போல் திட்டி பேசிக் கொண்டிருந்தார். அதற்கு பின் எல்லோருமே சந்தோசமாக சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது எழில்-அமிர்தாவை பார்த்து ஈஸ்வரி, எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள்? நிலாவிற்கு துணை வேண்டாமா? என்று ஆரம்பித்தார். இதை பார்த்தவுடன் பாக்கியாவிற்கு கோபம் வந்து கோபியை முறைத்தார். கோபிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. எழில்-அமிர்தா இருவருமே எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்கள்.
பாக்கியலட்சுமி:
நேற்று எபிசோட்டில் கோபி, எழில் சினிமாத்துறையில் இருக்கிறான். அவன் விருப்பப்படி குழந்தை பெற்றுக்கொள்ளட்டும் என்று தன்னுடைய அம்மாவிடம் எடுத்துச் சொல்ல புரிய வைக்க பார்த்தார். ஆனால், ஈஸ்வரி ஏற்றுக்கொள்ளவே இல்லை. இன்னொரு பக்கம் இனியா, ஆகாசிடம் போன் பேசி கொண்டிருந்தார். அந்த சமயம் பாக்கியா வந்தவுடன் போனை இனியா ஆஃப் பண்ணி விட்டார். பின் பாக்கியா தூங்கிய பிறகு ரகசியமாக இனியா போன் பேசி இருந்தார். மறுநாள் காலையில் பாக்கியா ரெஸ்டாரண்ட் செல்வதற்காக மும்முரமாக சமைத்துக் கொண்டிருந்தார்.
நேற்று எபிசோட்:
இதையெல்லாம் பார்த்து கோபிக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதற்குப்பின் இனியா கல்லூரிக்கு நேரமாகவே கிளம்புகிறார். பின் ஒவ்வொருவரிடமும் காசு வாங்கிப் போனார். இதையெல்லாம் பார்த்து கோபிக்கு சந்தேகம் வந்தது. உடனே அவர், இனியாவை தன்னுடைய காரிலேயே அழைத்து சென்றார். ஆனால், இனியா புக் வாங்கனும் என்று இறங்கிக் கொண்டார். இனியாவிற்கு தெரியாமல் கோபி பாலோ செய்தார். அப்போது ரெஸ்டாரண்டில் இனியா, ஆகாசுடன் பேசி இருப்பதை கோபி பார்த்தார். பின் கோபியை பார்த்தவுடன் இனியா-ஆகாஷ் இருவரும் ஷாக் ஆனார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோபி, இதற்கு தான் இங்கு வந்தாயா? கிளம்பு என்று இனியாவின் கையைப் பிடித்து அழைக்கிறார். ஆகாஷ் பேச வந்ததற்கும் அவனை திட்டி விட்டு அங்கிருந்து இனியாவை அழைத்துக் கொண்டு வருகிறார். அதற்குப்பின் கோபி, உன்னுடைய போனை கொடு என்று வாங்கி செக் பண்ணுகிறார். அதில் ஆகாசுடன் அவர் பேசி இருப்பதை பார்த்து ரொம்பவே கோபி கோபப்படுகிறார். இனியா மன்னிப்பு கேட்டும் கெஞ்சி அழுதும் கோபி கேட்கவில்லை.
சீரியல் ட்ராக்:
பின் வீட்டிற்கு இனியாவை கோபி அழைத்து வந்ததை பார்த்து எல்லோருமே என்ன ஆனது? ஏன் இனியா வந்துவிட்டாள்? என்று கேட்க, பாக்கியா வரட்டும் என்கிறார் கோபி. அப்போது பாக்கியா வீட்டிற்கு வருகிறார். உடனே கோபி, இனியா ஒரு பையனை காதலிக்கிறார் என்று அவருடைய மொபைலை காண்பித்தவுடன் பாக்கியா ஷாக் ஆகிறார். வீட்டில் உள்ள எல்லோருக்குமே அதிர்ச்சியாக இருக்கிறது. கோபி, யாரை காதலிக்கிறார் தெரியுமா? நம் வீட்டில் வேலை செய்யும் செல்வியின் மகன் ஆகாஷை தான் காதலிக்கிறார் என்று சொன்னவுடன் இன்னும் எல்லோருக்குமே அதிர்ச்சி ஆகிறது. என்ன சொல்வது என்று புரியாமல் உறைந்து போய்கிறார் பாக்கியா. இத்துடன் சீரியல் முடிகிறது