ஈஸ்வரியை வெளுத்து வாங்கிய பாக்கியா, ஆகாஷ் செய்த சத்தியம் - விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் செல்வி, பாக்கியா பற்றியும் அவருடைய குடும்பத்தை பற்றியும் ஆகாஷிடம் சொல்லி அவனை அடித்தார். ஆகாஷ், தான் செய்த தவறை நினைத்து ரொம்பவே மனமடைந்து மன்னிப்பு கேட்டார். இன்னொரு பக்கம் பாக்கியா வீட்டில் எல்லோருமே இனியா செய்த தவறை பற்றி திட்டிக் கொண்டிருந்தார்கள். இனியா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். அப்போது எழில், நீ நன்றாக படி. நல்ல வேலைக்கு போ. அப்புறம் எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னார்.
உடனே ஈஸ்வரி- செழியன் இருவரும் எழிலை திட்டி இருந்தார்கள். கோபி, இனிமேல் உனக்கு போன் கிடையாது. எதுவாக இருந்தாலும் என்னுடைய நம்பரை கொடு என்று ரொம்ப கண்டிசனாக நடந்து கொண்டார். அதற்குப் பின் இனியா, தன்னுடைய அம்மாவிடம் மன்னிப்பு கேட்டு ஆகாஷ் பற்றி பேசி இருந்தார். ஆனால், பாக்கியா எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தார். அதற்கு பின் செல்வி, பாக்கியாவிற்கு ஃபோன் செய்தார். ஆனால், பாக்கியா போன் எடுக்காமல் அமைதியாகவே இருக்க, செல்வி வருத்தப்பட்டார். அதற்குப்பின் எழிலிடம் பாக்கியா பேசினார்.
பாக்கியலட்சுமி:
நேற்று எபிசோட்டில் பாக்கியா, ஆகாஷ்- இனியா இதை செய்வார்கள் என்று நான் நினைக்கவே இல்லை. ஆகாஷ் அவன் வாழ்க்கையில் முன்னேறனும், இனியாவும் படித்து அவளுக்கென சுயமாக நிற்க வேண்டும். இதற்காக தான் நான் போராடினேன். தினமும் அவளுக்கு நிறைய அறிவுரை சொல்லிக் கொண்டே இருந்தேன். ஆனால், அவள் எதற்காக இப்படி செய்தால் என புரியவில்லை என்று புலம்பி இருந்தார். மறுநாள் காலையில் இனியா வீட்டில் உள்ள எல்லோரிடமும் பேசி இருந்தார். ஆனால், யாருமே முகம் கொடுத்து பேசவில்லை. செழியன் மோசமாக இனியாவை திட்டி இருந்தார்.
நேற்று எபிசோட்:
இதனால் பாக்கியா கோபப்பட்ட பாக்கியா, செழியனை திட்டி இருந்தார். அதற்குப்பின் இனியா, பாக்யாவிடம் மன்னிப்பு கேட்டு பேசி இருந்தார். அப்போது பாக்கியா, நீ உன் வாழ்க்கையில் முன்னேறனும். அதில் மட்டும் கவனம் செலுத்து. வேறு எதையும் பற்றியும் யோசிக்காதே. நன்றாக படி என்று சொன்னவுடன் இனியா, நான் படித்து முன்னேறுவேன் என்று தன்னுடைய அம்மாவிற்கு சத்தியம் செய்தார். அதற்கு பின் பாக்கியா ரெஸ்டாரண்ட்க்கு கிளம்பி இருந்தார். உடனே ஈஸ்வரி, வீட்டில் என்ன நடக்கிறது, நீ என்ன செய்கிறாய்? இனிமேல் எங்கேயும் வேலைக்கு போகக்கூடாது. வீட்டில் தான் இருக்கணும் என்று ஆவேசமாக பாக்கியாவிடம் பேசி இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி ரொம்ப மோசமாக பாக்கியாவை வேலைக்கு செல்லக்கூடாது என்று திட்டி விடுகிறார். உடனே ஆவேசப்பட்ட பாக்கியா, எல்லாம் பேசி முடித்து விட்டீர்களா? எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். எல்லா பிரச்சனைக்குமே நான் மட்டும் பொறுப்பேற்க முடியாது. உங்கள் மகனும் தான் பொறுப்பு. எல்லாத்திற்கும் என்மீது குறை சொல்லாதீர்கள் என்று ஈஸ்வரி எதிர்த்து பேசிவிட்டு அங்கிருந்து செல்கிறார். இதைக் கேட்டு ஈஸ்வரி ஷாக் ஆகி கோபியிடம் புலம்புகிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் பாக்கியா ரெஸ்டாரண்ட் கிளம்பி போகிறார். அங்கு செல்வியை பார்க்கிறார். ஆனால், அவர் இல்லை. அதற்கு பின் செல்வி வீட்டிற்கு பாக்கியா செல்கிறார். அங்கு செல்வி, பாக்யாவிடம் மன்னிப்பு கேட்டு ரொம்பவே எமோஷனலாக கதறி அழுகிறார். பாக்கியா, ஆகாசிடம் உன் படிப்பில் கவனம் செலுத்து. அதுதான் உன்னுடைய வாழ்க்கைக்கு நல்லது. இனியாவிடமும் நான் அதை தான் சொல்லி இருக்கிறேன். இரண்டு பேருமே இனி பேசக்கூடாது, படிப்பில் கவனம் செலுத்துங்கள் என்று சத்தியம் வாங்கிக் கொள்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.