பழிவாங்கும் வன்மத்தோடு இருக்கும் கோபி, பிரச்சனையை தீர்த்தாரா பாக்கியா? பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் கடந்த வாரம் கெட்டுப்போன சாப்பாட்டை ஈஸ்வரி ரெஸ்டாரண்டில் கொடுத்ததாக சொல்லி கலவரம் வெடித்தது. அதனால், உணவுத்துறை அதிகாரிகள் ரெஸ்டாரண்டுக்கு சீல் வைத்து இருந்தார்கள். இதனால் எல்லாருமே அதிர்ச்சியாகி இருந்தார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் கோபி, பாக்கியாவின் ரெஸ்டாரண்டை குறித்து ராதிகாவிடம் சொல்ல, அவர் அதை நம்பவில்லை. பின் பாக்கியாவை பார்த்து கோபி, சந்தோஷத்தில் கிண்டலும் கேலியும் செய்திருந்தார்.
பின் ஆபிசில் செழியனுக்கு வேலை போய் விட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த செழியன் அழுது புலம்ப, கோபியும் ஆறுதல் சொல்லி சமாதானப்படுத்தி இருந்தார். இன்னொரு பக்கம் சினிமா வாய்ப்பை தேடி தயாரிப்பாளரை எழில் சந்தித்தார். ஆனால், அவர் வாய்ப்பு தர மறுத்து விட்டார். இந்த வாரம் பாக்கியா, வீட்டில் இருக்கும் நகைகளை எல்லாம் அடகு வைத்து பணத்தை கொடுத்து விட வேண்டும் என்று நினைத்தார். அப்போது ஹோட்டலில் வேலை செய்த பெண்கள் பாக்கியாவிடம் வந்து தங்கள் வேலையை நினைத்து கஷ்டப்பட்டு பேச, பாக்யா அவர்களுக்கு ஆறுதல் கூறி மீண்டும் நாம் ஹோட்டலை திறப்போம் என்று நம்பிக்கை கொடுத்து அனுப்பி இருந்தார்.
பாக்கியலட்சுமி:
எல்லா நகைகளையும் அடமானம் வைக்க இருப்பதாக ஈஸ்வரியிடம் பாக்கியலட்சுமி சொன்னார். உடனே ஈஸ்வரி, தன்னிடம் இருக்கும் நகைகள், தாலியையும் கொடுத்தார். இதனால் பாக்கியா கோபப்பட்டு, என்னிடம் இருக்கும் தாலிக்கு அர்த்தமே கிடையாது. இதை வைத்தால் கூட ஒரு நியாயம் இருக்கிறது என்று சொல்ல, ஈஸ்வரி மனம் உடைந்து அழுதார். அந்த சமயம் பார்த்து வந்த பழனிச்சாமி, பண உதவி செய்வதாக கேட்க, பாக்யா வாங்க மறுத்து விட்டார். பின் தன்னுடைய நகைகள் எல்லாம் எடுத்து பாக்யா பேங்க் சென்று அடகு வைத்தார். அப்போது வந்த எழில், தன்னால் எந்த உதவியும் செய்ய முடியவில்லை என்று வருத்தப்பட்டு புலம்பி இருந்தார்.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் பாக்கியா, பேங்கில் நகை வைத்து பணம் வாங்கி விட்டார். அதற்கு பிறகு தனக்கு தெரிந்தவர் மூலம் வட்டிக்கு பணம் கேட்டு பாக்யா ரெடி பண்ணார். அதோடு பாக்யாவிற்கு மாத்தி மாத்தி போன் செய்து பணத்தை கேட்டு டார்ச்சர் செய்து இருக்கிறார்கள். பாக்கியாவும் தன்னிடம் இருக்கும் பணத்தை அனுப்ப சொன்னார். பின் ரெஸ்டாரண்டில் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்திருப்பதை அறிந்த பாக்யா,எல்லோரையும் சமாதானப்படுத்துகிறார். ஆனால், அவர்கள் யாருமே கேட்கவில்லை.
இன்றைய எபிசோட்:
கடைசியில் போலீஸ் வந்து பாக்கியாவுக்கு வார்னிங் கொடுக்கிறார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் இன்னும் ஒரு மணி நேரத்தில் பணம் செட்டில் செய்ய வேண்டும் என்று போலீஸ் சொல்கிறார்கள். அப்போது பாக்கியா சொன்ன இடத்திலிருந்து பணம் வந்து விடுகிறது. ஒரு வழியாக எல்லோருக்குமே பணத்தை செட்டில்மெண்ட் செய்து விடுகிறார். இதை அறிந்த கோபி கோபப்பட்டு பாக்கியாவை அழிக்க இன்னும் திட்டம் போடுகிறார்.
சீரியல் ட்ராக்:
அப்போது வந்த செழியன், வேலை பற்றி கோபியிடம் கேட்கிறார். அதற்கு அவர் பொய்யான வாக்குறுதி கொடுத்து அனுப்புகிறார். இதை அறிந்த கோபி நண்பர், எதற்கு உன் மகனை ஏமாற்றுகிறாய்? என்று கேட்டதற்கு பாக்யாவை ஒழிக்க வேண்டும். அதற்காகத்தான் இதெல்லாம் செய்கிறேன் என்று மீண்டும் வன்மத்தை கொட்டுகிறார். இன்னொரு பக்கம் வீட்டில் பெரும் புயலே வீசி ஓய்ந்துவிட்டது என்பது போல பாக்யா, ஈஸ்வரிடம் கொஞ்சம் ஆறுதலாக பேசிக் கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.