வாய்ப்பு தேடி அலையும் எழில், வேலையை இழந்து தவிக்கும் செழியன், போராடும் பாக்கியா- விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி ' சீரியலில் கடந்த வாரம் கொட்டுப்போன சாப்பாட்டை கொடுத்ததாக பாக்கியா ரெஸ்டாரண்டில் கலவரம் வெடித்தது. அந்த புது செப் மட்டும் சந்தோஷத்தில் கோபிக்கு நடப்பதை அப்டேட் செய்து கொண்டிருந்தார். உடனே கோபி, பாக்யா ரெஸ்டாரண்ட்டுக்கு வெளியே நின்று ரசித்து பார்த்துக் கொண்டிருந்தார். சோசியல் மீடியா, பிரஸ், உணவுத்துறை அதிகாரிகள் எல்லோருமே பாக்யாவிடம் விவாதம் செய்து, ரெஸ்டாரண்டை சோதனை செய்தார்கள். மக்கள் எல்லோருமே ஆவேசமாக கொந்தளித்து கத்தி இருந்தார்கள்.
மேலும், செழியன்,எழில் இருவருமே எல்லோரையும் சமாதானம் செய்ய முயற்சி செய்தார்கள். ஆனால், யாரும் கேட்கவில்லை. இந்த வாரம் உணவுத்துறை அதிகாரிகள், சோதனையில் கெட்டுப்போன பொருட்களை வைத்து சமைத்தது தெரிய வந்தது. உங்கள் ரெஸ்டாரன்ட்டுக்கு 50,000 பைன் என்று கடைக்கு சீல் வைத்தார்கள். இதனால் எல்லோருமே அதிர்ச்சியாகி இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் கோபி, பாக்யாவின் ரெஸ்டாரண்டை குறித்து வரும் செய்தியை பார்த்து சந்தோஷப்பட்டு நடந்ததை ராதிகாவிடம் சொன்னார். ஆனால், ராதிகா அதை நம்பவில்லை.
பாக்கியலட்சுமி சீரியல்:
இன்னொரு பக்கம் பாக்யா, கடை கணக்கு பார்த்ததில் லட்சக்கணக்கில் நஷ்டம் அடைந்தது தெரிய வந்தது. பணத்தை எப்படியாவது ரெடி பண்ண வேண்டும் என்று பாக்கியா வருத்தப்பட்டு இரவு முழுவதும் தூங்காமல் நடந்ததை நினைத்துக் கொண்டு இருந்தார். மறுநாள் பாக்கியாவை பார்த்து கோபி, சந்தோஷத்தில் அவரை கிண்டல் கேலியும் ஆக பேசி இருந்தார். பாக்கியாவும் பதிலுக்கு கோபியிடம் சவால் விட்டு வந்தார். பின் வீட்டில் ஜெனியின் அம்மா, தங்களுடைய மகளை வீட்டிற்கு அழைத்து செல்வதாக சொன்னார்கள்.
நேற்று எபிசோட்:
ஆரம்பத்தில் பாக்யா தயங்கினாலும் ஜெனியை அழைத்து செல்ல ஒத்துக்கொண்டார். ஆனால், ஜெனி பிடிவாதமாக முடியாது என்று மறுத்து விட்டார். பின் ஜெனி அம்மா வேறு வழியில்லாமல் அமைதியாக சென்று விடுகிறார். பின் ரெஸ்டாரண்டை பார்த்து பாக்கியா ரொம்ப வருத்தப்பட, பழனிச்சாமி- எழில் எல்லோருமே அவருக்கு ஆறுதல் சொல்லி இருந்தார்கள். இன்னொரு பக்கம் ஜெனி, செழியனுக்கு போன் செய்து பணத்தை ரெடி பண்ணுவதை பற்றி பேசி கொண்டு இருந்தார்.
இன்றைய எபிசோட்:
அப்போது அவரின் உயர் அதிகாரி அவரை கூப்பிட்டு, உங்களுக்கு வேலை இல்லை. இத்தனை பேருக்கு எங்களால் வேலை கொடுக்க முடியாது என்று சொல்ல செழியன் அதிர்ச்சி அடைகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் செழியன் ரொம்பவே வருத்தப்பட்டு புலம்புகிறார். ஆனால், அவர் அதிகாரி ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்குப்பின் செழியன் வேதனையில் கோபியை பார்க்க வருகிறார். கோபி இடம் சொல்லி நடந்ததை சொல்லி ஒரு குழந்தையைப் போல அழுது புலம்புகிறார் செழியன்.
சீரியல் ட்ராக்:
பின் கோபியும் செழியனுக்கு ஆறுதல் சொல்லி சமாதானப்படுத்துகிறார். இன்னொரு பக்கம் செழியன் வீட்டுக்கு வராததை நினைத்து ஜெனி வருத்தப்பட்டு கொண்டிருக்க, செழியன் வந்தார். அவர் முகம் வாடி இருந்ததை பார்த்து பாக்கியா-ஜெனி இருவரும் காரணம் கேட்க, அவர் எதுவும் சொல்லவில்லை. இன்னொரு பக்கம் சினிமா வாய்ப்பை தேடி தயாரிப்பாளரை எழில் சந்திக்கிறார். ஆனால், அவர் வாய்ப்பு தர மறுக்கிறார். எழிலும் மன்னிப்பு கேட்டு கெஞ்சுகிறார். ஆனால், அவர் எதையுமே காதில் வாங்கவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது.