புது ஹோட்டலை துவங்க நினைக்கும் பாக்கியா, திட்டி தீர்த்த ஈஸ்வரி, விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

By subhashini · 6/5/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் ரெஸ்டாரண்டுக்கு வந்த பழைய ஓனர் பாக்யாவிடம் செட்டில்மெண்ட் பணத்தை கொடுத்து விட்டு ரெஸ்டாரண்டை காலி செய்ய சொன்னார். அதற்கு பாக்கியா, இதை நீங்களாவே சொல்லி இருந்தால் எனக்கு கவலை இல்லை. சுதாகர் சொல்லி ரெஸ்டாரண்டை காலி செய்ய சொன்னது தான் கஷ்டமாக இருந்தது. இப்படி ஒரு நம்பிக்கை துரோகம் எனக்கு செய்ய வேண்டியது இல்லை என்று ரொம்ப பேச அவரால் எதுவுமே பேச முடியவில்லை. அதற்குப்பின் வங்கிக்கு சென்ற பாக்கியா ரெஸ்டாரன்ட் மீது இருக்கும் லோனை பற்றி விசாரித்தார். இன்னொரு பக்கம் வீட்டில் சுதாகர் எல்லோரிடமும் எதுவுமே நடக்காதது போல பேசிக் கொண்டிருந்தார். இதை பார்த்தவுடன் பாக்கியாவுக்கு கோபம் அதிகமானது.

அப்போது சுதாகர், ரெஸ்டாரண்டை பற்றி பேசி இருந்தார். உடனே பாக்கியா, உங்கள் மனதிற்கு கஷ்டம் இல்லை என்றால் ரெஸ்டாரன்ட்டுக்கு தேவையான பணத்தை நீங்கள் கொடுத்துவிடுங்கள். உங்களுக்கு குற்ற உணர்ச்சி வேணாம் என்று சொன்னவுடன் சுதாகரால் எதுவும் பேசவில்லை. வீட்டில் உள்ள எல்லோருமே பணமெல்லாம் வேண்டாம் என்று சொன்னார்கள். அதற்கு பாக்கியா, அவருடைய வழியிலேயே போய் பதிலடி கொடுத்தார். சுதாகரால் எதுவும் பேச முடியாமல் நாளை வந்து பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று அங்கிருந்து கிளம்பி விட்டார். பின் கோபி, எதற்காக பணத்தை கேட்டாய் என்று கேட்டவுடன் பாக்கியா, ரெஸ்டாரண்டுக்கு வாங்கிய லோன் அப்படியே இருக்கு. எப்படி கட்டுவது என்றவுடன் வீட்டில் யாராலும் பேச முடியவில்லை.

பாக்கியலட்சுமி:

பாக்கியா பணத்தைப் பற்றி டீலிங் பேசி இருந்தார். சுதாகர் 20 லட்சம் தான் தர முடியும் என்றார். அதற்கு பாக்கியா, முடியாது 60 லட்சம் தருணம் என்று கேட்கிறார். ஒரு வழியாக இருவருடைய பஞ்சாயத்து முடிந்து சுதாகர் நாற்பது லட்சம் தான் ஃபைனலாக கொடுக்க முடியும் என்று கொடுத்தார். இதனால் பாக்கியா, பணத்தை வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்றார். ஆனால், சுதாகருக்கு கோபம் இன்னும் அதிகமானது. பின் வீட்டிற்கு வந்த பாக்கியா, தன்னை நம்பி இருந்தவர்களுக்கு கொஞ்சம் பணத்தை பிரித்துக் கொடுத்தார். இதையெல்லாம் பார்த்து ஈஸ்வரிக்கு கோபம் இன்னும் அதிகமானது. ஆனால், கோபி தான் பாக்கியாவிற்கு சப்போர்ட் செய்தார்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் எழில்-செழியன் இருவருமே நீ நிம்மதியாக வீட்டில் இரு அம்மா. குடும்பத்தையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று தன்னுடைய அம்மாவிற்கு சப்போர்ட்டாக பேசி இருந்தார்கள். இதை எல்லாம் பார்த்து கோபி, ஈஸ்வரி சந்தோஷப்பட்டார்கள். அப்போது ஈஸ்வரி, நீ இனிமேல் எந்த ரெஸ்டாரண்டையும் நடத்த வேண்டாம். பிள்ளைகளோடு வீட்டில் சந்தோஷமாக நிம்மதியாக இரு என்று சொன்னார். ஆனால், பாக்கியா எதுவும் சொல்லவில்லை. பின் பாக்கியா வாக்கிங் செல்லும்போது எல்லோருமே ரெஸ்டாரண்ட் இழந்த விஷயம் பற்றி கேட்டார்கள்.

இன்றைய எபிசோட்:

அது பாக்கியாவிற்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அதற்குப்பின் பாக்கியா, செல்வியை வரவைத்து புது ரெஸ்டாரண்ட் ஆரம்பிக்க இடங்களை தேடி அலைந்து கொண்டிருந்தார். அப்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களை சொன்னார். அதில் ஒருவர், பாக்கியா விவாகரத்து ஆன விஷயத்தை பற்றி கேட்டார். இதனால் பாக்கியாவுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா, எந்த பிரச்சனை என்றாலும் நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை நம்பி கொடுங்கள் என்று கேட்கிறார். ஆனால், அந்த கடையின் ஒத்து கொள்ளவில்லை என்பதால் பாக்கியா அங்கு இருந்து கிளம்பி வந்து இருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் ஒரு சின்ன இடமாக இருக்கும் இடத்திற்கு சென்று ஹோட்டல் ஆரம்பிப்பதை பற்றி பேசுகிறார்.
செல்விக்கு அந்த இடம் பிடிக்கவே இல்லை. இருந்தாலும் பாக்கியா மனம் தராமல் அந்த இடத்தில் ஹோட்டல் ஆரம்பிப்பதை பற்றி அந்த ஓனரிடம் பேசி கன்பார்ம் செய்கிறார். அதற்குப்பின் வீட்டில் பாக்கியா, தான் புதிய ஹோட்டல் ஆரம்பிப்பதை பற்றி சொன்னவுடன் எல்லோருமே கோபப்படுகிறார்கள். எழில், செழியன் இருவருமே நாங்கள் குடும்பத்தை பார்த்து கொள்கிறோம் என்று பேசுகிறார். உடனே பாக்கியா, நீங்கள் எல்லோரும் பார்த்துக் கொள்வீர்கள் எனக்கு தெரியும். இருந்தாலும் நான் என் சொந்தக்காலில் நிற்க ஆசைப்படுகிறேன் என்று கூறுகிறார். உடனே ஈஸ்வரி, வழக்கம் போல பாக்கியாவை திட்டுகிறார். மறுநாள் காலையில் தன்னுடைய புது ஹோட்டலுக்காண அட்வான்ஸ் கொடுத்து அக்ரிமெண்டில் கையெழுத்து போடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full