ஈஸ்வரிக்கு துணையாக நிற்கும் பாக்கியா, பண கஷ்டத்தில் தவிக்கும் எழில்- பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி ' சீரியலில் எழில் தன்னுடைய வாழ்க்கையை நினைத்து வருத்தப்பட பாக்யா அவருக்கு ஆறுதல் சொல்லி இருந்தார். பின், செழியனை நினைத்து ஜெனி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயம் வந்த செழியன் இடம் பாக்கியா, நீ எதற்கு இப்படி எல்லாம் செய்கிறாய்? என்று அறிவுரை சொல்லி புரிய வைத்தார். பின் வீட்டில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட இனியா, தன்னுடைய நடனப் போட்டியை பற்றி பேசி இருந்தார்.
பின் இனியாவின் நடனப் போட்டியை பார்ப்பதற்கு பாக்யா தன் மாமியாரை கிளம்ப சொன்னார். ஆனால், ஈஸ்வரி போட்டியை பார்க்க செல்ல மறுத்தார். ஆனால், பாக்கியா தன் மாமியாரை புது புடவை கட்ட சொல்லி வற்புறுத்த, ஈஸ்வரியும் மறுக்க முடியாமல் போட்டிக்கு செல்ல தயாராகி இருந்தார். அந்த சமயம் பார்த்து வந்த அமிர்தாவின் அம்மா , ஈஸ்வரியிடம் மற்றவர்களைப் போலவே கணவர் இறந்து ஒரு வருடம் கூட ஆகவில்லை அதற்குள் எங்கும் வெளியே போகக்கூடாது என்று அட்வைஸ் செய்தார்.
பாக்கியலட்சுமி சீரியல்:
பின் பாக்கியா, அமிர்தாவின் அம்மாவை திட்டி அனுப்பி விட்டார். இதையெல்லாம் கேட்டு வருத்தமடைந்த ஈஸ்வரி, போட்டிக்கு செல்ல மறுத்தார். இன்னொரு பக்கம் இனியா நடனப் போட்டியில் கலந்து கொண்டு நன்றாக ஆடி இருந்தார். அப்போது இனியா ஆடும் போது கோபி கீழே இருந்தே என்கரேஜ் செய்து கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்த்த எழில், கோபியை தனது அம்மாவிடம் திட்டுகிறார். கடைசியில், சென்னையிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஐந்து போட்டியாளர்களில், இனியாவும் செலக்ட் ஆகி இருக்கிறார்.
நேற்று எபிசோட்:
இதைக் கேட்டவுடன் அனைவரும் சந்தோஷப்பட்டு இனியாவை எல்லோரும் பாராட்டி இருந்தார்கள். இன்னொரு பக்கம் கோபி வைத்த நபர், பாக்யாவின் ஆர்டரை கெடுக்க திட்டம் போடுகிறார். பாக்கியா, நானே ஆர்டரை பார்த்துக் கொள்கிறேன் என்று என்று அவரை அனுப்பி விடுகிறார். பின் வீட்டில் பாக்கியா, தான் சமைக்கும் இடத்திற்கு ஈஸ்வரியை அழைக்கிறார். ஆனால், அவர் வர மறுத்தார். இருந்தும் பாக்கியா விடாமல் ஈஸ்வரியை கட்டாயப்படுத்துகிறார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தன்னுடைய புதிய ஆர்டர் சமைப்பதற்காக ஈஸ்வரியை, எப்படியோ போராடி பாக்யா அழைத்து வந்து விடுகிறார். ஆனால், அங்கு இருந்த சிலர், ஈஸ்வரி விளக்கேற்றுவதற்கு அவர் மனதை காயம்படும் அளவிற்கு பேசுகிறார்கள். இதைக் கேட்ட பாக்யா கோபப்பட்டு, என் அத்தையை யார் பேசினாலும் நான் சும்மா விட மாட்டேன். என் மாமியார் தான் எது இருந்தாலும் செய்ய வேண்டும் என்று அவர்கள் வாயை அடைத்து விட்டு ஈஸ்வரியை விளக்கேற்றி வைக்க சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
இந்த ஆர்டரை எப்படியாவது கெடுக்க வேண்டும் என்று புது நபர் சதி வேலைகள் செய்கிறார்.
இன்னொரு பக்கம் பணம் இல்லாததால் வீடு செலவிற்கு ரொம்பவே அமிர்தா- எழில் கஷ்டப்படுகிறார்கள். அந்த சமயம் வந்து அமிர்தாவின் அம்மா, வீட்டில் ஒரு பொருள் கூட இல்லை. உங்களிடம் பணம் இல்லையா? நான் வாங்கி தரட்டுமா? என்று கேட்க, அதெல்லாம் வேண்டாம் என்று அமிர்தா சமாளிக்கிறார். அப்போது எழில், எப்படியோ பணத்தை ரெடி பண்ணி வீட்டிற்கு தேவையான எல்லா பொருட்களையும் வாங்கி வந்து தருகிறார். உடனே அமிர்தா, நான் வேலைக்கு போகட்டுமா? என்று சொன்னவுடன் எந்த பிரச்சினையாக இருந்தாலும் நாம் சமாளித்துக் கொள்ளலாம் என்று அவருக்கு ஆறுதல் சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.