கோபியை நினைத்து மனமுடைந்து அழும் ராதிகா, ஆறுதல் சொல்லும் பாக்கியா- விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

By subhashini · 4/12/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் கோபிக்கு நெஞ்சுவலி வந்ததால் ஹாஸ்பிடலில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதை அறிந்த ஈஸ்வரி, செழியன், இனியா எல்லோருமே வருத்தப்பட்டு அழுது புலம்பி இருந்தார்கள். இன்னொரு பக்கம் ராதிகா, கோபி வீட்டிற்கு வராததை நினைத்து புலம்பி தேடி கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் பாக்யா, ராதிகாவிற்கு போன் செய்து உண்மையை சொன்னார். அதைக் கேட்டவுடன் ராதிகா அதிர்ச்சியாகி ஹாஸ்பிடலுக்கு வந்தார். ஆனால், அங்கு கோபியை பார்க்க ஈஸ்வரி விடவில்லை.

உடனே எழில், பாக்கியா இருவருமே ஈஸ்வரியை சமாதானம் செய்தும் கேட்கவில்லை. இருந்தாலும், ஹாஸ்பிடலில் இருந்த ராதிகாவை ரொம்ப தகாத வார்த்தையால் ஈஸ்வரி திட்டி இருந்தார். பாக்யா- எழில் தடுத்துமே ஈஸ்வரி கேட்கவே இல்லை. எவ்வளவு திட்டியும் ராதிகா அந்த இடத்திலேயே இருந்தார். அப்போது ஈஸ்வரி, உன்னால் தான் என் மகன் சாகப் போகிறான் என்று சொன்னவுடன் மனம் உடைந்து ராதிகா வெளியே வந்து விட்டார்.

பாக்கியலட்சுமி:

பின் பாக்யா, உங்களுக்கு தகவலை சொல்ல எவ்வளவோ முயற்சி செய்தும் போன் ரீச் ஆகவில்லை. யாரும் போன் எடுக்கவில்லை என்று தான் அவர் எனக்கு போன் செய்தார் என்று நடந்ததை சொன்னார். அதற்கு ராதிகா, நீங்கள் எல்லாம் ஒன்றாகி விட்டீர்கள். ஒரு குடும்பமாகி விட்டீர்கள் என்று வருத்தப்பட்டு அங்கிருந்து கிளம்பினார். பாக்யாவின் சூழ்நிலையை ராதிகா கூட புரிந்து கொள்ளவில்லை. நேற்று எபிசோட்டில் ஈஸ்வரி சொன்ன வார்த்தையால் ரொம்பவே மனமுடைந்த ராதிகா மழையில் ஹாஸ்பிடலில் நடந்ததை நினைத்துக் கொண்டே போனார்.

நேற்று எபிசோட்:

இன்னொரு பக்கம் பாக்கியா, ராதிகாவின் நிலைமையை நினைத்து வருத்தப்பட்டார். பின் வீட்டிற்கு வந்த ராதிகா, கோபிக்கு ஹார்ட் அட்டாக் வந்து இருக்கு. என்னை யாருமே அவரை பார்க்க விடவில்லை என்றெல்லாம் சொல்லி புலம்பி அழுதார். அதற்கு அவருடைய அம்மா ஆறுதல் சொல்லி இருந்தார். பின் கோபி கண் விழித்து இருந்தார். உடனே ஈஸ்வரி, இனியா, செழியன் மூவருமே அவரை பார்த்து பேசி இருந்தார்கள். பின் ஹாஸ்பிடலுக்கு மீண்டும் வந்த ராதிகாவை வழக்கம்போல் ஈஸ்வரி பயங்கரமாக திட்டி இருந்தார். பாக்கியா, எவ்வளவு சொல்லியுமே ஈஸ்வரி கேட்கவே இல்லை.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் இனியா,செழியன் இருவருமே ஈஸ்வரிக்கு சப்போர்ட் செய்கிறார்கள். பின் எழில் தன்னுடைய பாட்டியை அங்கிருந்து அழைத்துக் கொண்டு வருகிறார். அப்போது ராதிகா உள்ளே சென்று கோபியை பார்த்தார். ஆனால், கோபி கண்ணிற்கு ராதிகா, பாக்யா போல் தெரிந்தால் ரொம்ப நன்றி என்று சொல்கிறார். இதனால் ராதிகா ரொம்பவே வருத்தப்படுகிறார். பின் வெளியில் வந்த ராதிகா, உங்களுடைய பெயரை தான் சொல்கிறார் என்று சொல்ல, பாக்கியா ஷாக் ஆகிறார். பின் இருவருமே உட்கார்ந்து பேசுகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

அப்போது ராதிகா, நான் கோபியை திருமணமே செய்து இருக்க கூடாது. எங்களுக்குள் நிறைய சண்டை வருகிறது என்று ரொம்ப எமோஷனலாக பாக்கியா தோள் மீது சாய்ந்து அழுது பேசுகிறார். உடனே பாக்யா அவருக்கு ஆறுதல் சொல்லி அனுப்புகிறார். அதன் பின் வீட்டில் பாக்கியா, ஜெனி பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது ஹாஸ்பிடல் இருந்து வந்து ஈஸ்வரி, நீ ஏன் அங்கு இல்லை? நீதான் கோபியை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார். அதற்கு பாக்கியா, அது என்னுடைய வேலை இல்லை. ராதிகா தான் அவருடைய மனைவி என்று சொன்னவுடன் ஈஸ்வரி பயங்கரமாக கோபப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full