பிறந்தநாள் கொண்டாட ஆசைப்படும் பாக்கியா, கேலி செய்த ஈஸ்வரி - விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் ஈஸ்வரி, சோகமாக உட்கார்ந்து இருந்தார். அப்போது கோபி விசாரிக்க, எல்லோருமே தனித்தனியாக இருக்கிறோம், ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. எல்லோரும் ஒன்றாக இருந்தால் நன்றாக இருக்கும். உன்னுடைய வாழ்க்கை நினைத்தாலும் வேதனையாக இருக்கிறது என்று புலம்பி இருந்தார். கோபி, எதுவாக இருந்தாலும் நான் தனியாக சமாளித்துக் கொள்ள தயாராக இருக்கிறேன் என்றார். அதற்குப்பின் சொந்தக்காரர்கள் பத்திரிக்கை வைப்பதற்காக பாக்கியா வீட்டிற்கு வந்தார்கள்.
அப்போது பாக்கியா- கோபியை பற்றி விசாரிக்க, ஈஸ்வரி இருவரும் சேர்ந்துதான் வாழ்கிறார்கள் என்று பொய் சொல்லி விட்டார். அவர்கள் சென்ற பின்பு கோபத்தில் சண்டை போட்டார் பாக்கியா. அப்போது ஈஸ்வரி, இனியா திருமணமாகும் போது நீங்கள் இருவரும் சேர்ந்து இருந்தால் தானே நன்றாக இருக்கும் என்று சொன்னார். அதற்கு பாக்கியா, அது எல்லாம் முடியாது. உங்களுக்காக தான் அவர் இந்த வீட்டில் இருக்க அனுமதித்தேன். மற்றபடி எனக்கும் அவருக்கும் எந்த உறவும் கிடையாது என்று கடுமையாக பேசிவிட்டு சொன்னார். ஈஸ்வரி, எல்லோரும் அவர்கள் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
பாக்கியலட்சுமி:
நீயும் பாக்கியாவும் தான் தனியாக இருக்கிறீர்கள். நீங்கள் மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொன்னவுடன் கோபி ஷாக் ஆனார். பின் அவர், இதற்கு பாக்கியா சம்மதிக்க மாட்டார் என்று சொன்னார். உடனே ஈஸ்வரி, பாக்கியாவை சம்மதிக்க வைப்பது என்னுடைய பொறுப்பு. உனக்கு சம்மதமா என்று கேட்க, கோபி எதுவும் சொல்லவில்லை. பின் ஈஸ்வரி கோவிலுக்கு எழில்- செழியன் இருவரையும் வரவைத்தார். அப்போது அவர்களிடம் ஈஸ்வரி, கோபி- பாக்யா திருமணத்தை பற்றி சொன்னவுடன் இருவருமே ஷாக் ஆனார்கள்.
கடந்த வாரம் எபிசோட்:
அதற்குப்பின் ஈஸ்வரி, நிலைமையை எடுத்து சொல்லி புரிய வைக்க, செழியன் சம்மதித்தார். ஆனால், எழில், எனக்கு சம்மதம் இல்லை. என் அம்மா மறுமணம் செய்து கொள்ளட்டும். ஆனால், வேறு நபரை செய்து கொள்வதற்கு நானே துணையாக நிற்பேன். கோபியால் என் அம்மா நிறைய அவமானம் பட்டிருக்கிறார் என்று ஆவேசமாக பேசி இருந்தார். பின் ஈஸ்வரி, பாக்கியா சம்மதித்தால் உனக்கு இந்த திருமணத்திற்கு சம்மதமா? என்று கேட்க, எழில், ஒத்துக்கொண்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா, ரெஸ்டாரண்டில் ரொம்ப பிசியாக வேலை செய்து கொண்டிருக்கிறார். அப்போது பேங்கில் இருந்து பாக்கியாவை பார்க்க சில நபர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களிடம் பாக்கியா, புது அக்கவுண்ட் ஓபன் பண்ணுவதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது செல்வி, இன்னும் சில தினங்களில் உங்கள் பிறந்தநாள் வருகிறது என்று சொன்னவுடன் பாக்கியா ரொம்ப சந்தோஷப்படுகிறார். ஒரு காலத்தில் தன்னுடைய பிறந்த நாளை யாருக்குமே தெரியவில்லை.
சீரியல் ட்ராக்:
இந்த முறை தன்னுடைய பிறந்தநாளை பிரமாதமாக கொண்டாட வேண்டும் என்று பாக்கியா முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்கிறார். இதை பார்த்து செல்வி சந்தோஷப்படுகிறார். பின் இதைப் பற்றி இனியா, தன்னுடைய அப்பா கோபி, ஈஸ்வரியிடம் சொல்கிறார். இதனால் ஈஸ்வரிக்கு பயங்கர கோபம் வருகிறது. பின் அவர், பிறந்தநாள் கொண்டாட பாக்கியா குழந்தையா? என்றெல்லாம் பேசுகிறார். அப்போது வந்த பாக்கியா தான் வாங்கிய புது புடவையை ஈஸ்வரியிடம் கொடுக்கிறார். ஆனால், அவர் எதிலும் விருப்பம் இல்லாத போல் பேசுகிறார். ஆனால், கோபி பாக்யாவிற்கு சப்போர்ட் செய்து பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.