வீட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் ஈஸ்வரி, பாக்கியா எடுத்த அதிரடி முடிவு - விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

By subhashini · 20/5/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் வீட்டில் அமிர்தா, கிச்சனில் வேலை செய்து கொண்டிருந்தார். அங்கு வந்த ஈஸ்வரி, ஒவ்வொரு வேலைகளையும் குறை சொல்லிக் கொண்டிருந்தார். இதை பார்த்த எழில், எதுக்கெடுத்தாலுமே அமிர்தாவை எதற்கு குறை சொல்கிறீர்கள். இந்த வீட்டில் அதிக வேலை அமிர்தா தான் செய்தார். இந்த வீட்டில் ஜெனியும் இருக்கிறார். அவர் எந்த வேலையுமே செய்யவில்லை என்று சொன்னார். இதை வெளியில் இருந்த செழியன் கேட்டு வருத்தப்பட்டார். அந்த சமயம் பார்த்து வந்த பாக்கியா, எனக்கு யார் கையும் நம்பி வேலை செய்ய விருப்பமில்லை.

தேவையில்லாமல் பிரச்சினை செய்தாதீர்கள் என்று தன்னுடைய மாமியாரிடம் கோபமாக பேசி இருந்தார். அதற்கு பின் செழியன், நீ வேலை செய்யாததை பற்றி எழில் குறை சொல்கிறார் என்றார். இதை கேட்ட ஜெனி, னக்கும் இங்கு இருக்க பிடிக்கவில்லை. அம்மா வீட்டிலேயே இருக்கலாம் என்றார். அந்த சமயம் வந்த பாக்கியா, எனக்கு கடையில் நிறைய வேலை இருக்கிறது. நீ கொஞ்சம் அமிர்தாவிற்கு உதவி செய் என்று சொல்ல, ஜெனியும் எதுவும் பேச முடியாமல் சரி என்றார். பின் பாக்கியா ஹோட்டலுக்கு சாப்பிட கோபி வந்தார்.

பாக்கியலட்சுமி:

கோபி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது பாக்கியாவின் கஷ்டங்களை பற்றி ரொம்ப எமோஷனலாக பேசினார். பாக்கியாவும் அமைதியாக இருந்தார். அப்போது கோபி, உனக்கு ஏதாவது உதவி வேண்டும் என்றால் தயங்காமல் என்னிடம் கேள் என்றார். அதற்கு பாக்கியா, அத்தை தேவையில்லாமல் வீட்டில் பிரச்சனை செய்தார்கள். அதை மட்டும் கொஞ்சம் அவர்களிடம் எடுத்து சொல்லி புரிய வையுங்கள் என்றவுடன் கோபியும் சரி என்றார். அதற்கு பின் ஈஸ்வரி, கோபி இருவருமே இனியாவை பார்க்க அவருடைய மாமனார் வீட்டுக்கு சென்றிருந்தார்கள். அவர்களை பார்த்தவுடன் இனியா ரொம்ப சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் மூவரும் தனியாக பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஈஸ்வரி, பாக்கியா ரெஸ்டாரண்ட் விஷயமாக பேசி இருந்தார். அதற்கு இனியா, எனக்கு தெரியும் ரொம்ப கஷ்டமாக இருந்தது.

நேற்று எபிசோட்:

அம்மா எனக்காக எல்லாத்தையும் இழந்து விட்டார் என்று நினைத்தால் வருத்தமாக இருக்கிறது என்று எமோஷனலாக பேசி இருந்தார். அதற்கு ஈஸ்வரி அறிவுரை சொன்னார். அதற்கு பின் ஈஸ்வரி- கோபி இருவரும் காரில் பேசிக்கொண்டு வந்தார்கள். அப்போது ஈஸ்வரி வழக்கம்போல் பாக்கியாவையும் அவருடைய தொழிலையும் ரொம்ப மோசமாக திட்டி பேசிக் கொண்டிருந்தார். கடைசியில் ஹோட்டலில் செல்வியின் மகன் ஆகாஷ், வேலை கேட்க, பாக்கியாவும் சம்மதித்தார். பின் வேலை எல்லாம் முடித்துவிட்டு கிளம்பும் நேரத்தில் கவுன்சிலர் வந்தார். பாக்கியா, நீங்கள் சொல்வதை எல்லாம் இங்கு சமைக்க முடியாது. தேவையில்லாமல் பிரச்சனை செய்யாதீர்கள் என்று சொன்னார். உடனே கவுன்சிலர், இப்படியெல்லாம் பேசாதே, கடை நடத்த முடியாது என்று அங்கேயே உட்கார்ந்து விட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கவுன்சிலர் சொல்லும் ஆர்டரை பாக்கியா சமைத்துக் கொடுக்கிறார். பின் காசு கேட்டதற்கு அவர்கள் பாதி பணத்தை கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார்கள். ஆனால், பெரிதாக இந்த முறை தகராறு எதுவும் செய்யவில்லை. பின் வீட்டில் செழியன், ஜெனி வேலை செய்வதை பற்றி ஈஸ்வரிடம் பேசுகிறார். இதனால் ஈஸ்வரி, வழக்கம்போல் பாக்கியாவை தான் வறுத்து எடுத்துக் கொண்டிருக்கிறார். பின் வீட்டுக்கு வந்த பாக்கியாவிடம் வேலை செய்வதை பற்றி ஈஸ்வரி சொல்லி சண்டை போடுகிறார். பாக்கியா, இதற்கு நானே ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லிவிட்டு செல்கிறார். மறுநாள் காலையில் பாக்கியா வீட்டிற்கு புதிதாக வேலை செய்ய ஒரு ஆளை அழைத்து வருகிறார். அப்போது ஈஸ்வரி, நான் உன்னை வேலை செய்ய சொன்னால் நீ வேறு ஒருவரை அழைத்து வருகிறாயா என்று சண்டைக்கு போகிறார்.

சீரியல் ட்ராக்:

பின் பாக்கியா, எல்லா வேலைகளையும் இந்த பெண் பார்த்துக் கொள்வாள் என்று சொல்கிறார். உடனே ஈஸ்வரி, சம்பளத்தை யார் கொடுப்பார் என்று கேட்க, வீட்டு செலவுக்கு செழியன்- எழில் இருவருமே சேர்ந்து கொடுக்கட்டும் என்றவுடன் ஈஸ்வரியால் எதுவுமே பேச முடியவில்லை. அதற்குப்பின் பாக்கியா கிளம்பி ரெஸ்டாரன்ட் சென்று விடுகிறார். இன்னொரு பக்கம் இனியா, ரெஸ்டாரண்டை எப்ப ஆரம்பிக்க போகிறீர்கள்? என்று கேட்கிறார். சுதாகர், சீக்கிரத்திலேயே ஆரம்பித்து விடுவேன். என்னிடம் வேலை செய்பவர்களில் ஒருவர் அதை பார்த்துக்கொள்வார் என்கிறார். உடனே இனியா, நான் ரெஸ்டாரன்ட் மேனேஜ்மென்டை பார்த்துக்கொள்கிறேன் என்றவுடன் ஷாக் ஆகிறார். நிதிஷ், உனக்கு அதில் ஏதாவது அனுபவம் இருக்கிறதா? தேவையில்லாத விஷயத்தில் தலையிடாதே என்று அவரை திட்டுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full