ஆர்டரை முடிக்க மும்முரமாக வேலை செய்யும் பாக்கியா, கோபியின் திட்டம் பழிக்குமா? பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் கோபி, எழில் படத்தின் பூஜைக்கு பாக்கியா வரக்கூடாது என்று சொல்ல, தயாரிப்பாளர் ஒத்து கொண்டார். மேலும், பாக்கியா, ஸ்பெஷல் ஆஃபர் அறிமுகம் செய்தார். இதை எப்படியாவது சுதப்பி பாக்கியாவை மாட்டி விட வேண்டும் என்று கோபி- செப் ஆனந்த் மீண்டும் திட்டம் போட்டு இருந்தார்கள். இன்னொரு பக்கம் படத்தின் பூஜைக்காக எல்லோருமே வந்து விட்டார்கள். எழில் தன் அம்மாவிற்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது தயாரிப்பாளர், எல்லா டாக்குமென்டில் கையெழுத்து வாங்கி, இந்த பூஜைக்கு உங்களுடைய அம்மா வரக்கூடாது என்று சொல்ல, எழில் ரொம்பவே பதறினார்.
பின் அவர் வந்தால் பூஜை நடக்காது என்றார். அந்த சமயம் வந்த கோபி, உன்னுடைய அம்மா இங்கே வரக்கூடாது என்று மிரட்ட, எழிலுக்கு பயங்கர கோபம் வந்தது. என்னுடைய அம்மா வருவார் என்று எழில் சொல்லியுமே, தயாரிப்பாளர்-கோபி இருவருமே ஏற்றுக் கொள்ளவே இல்லை. பின் தனியாக சென்று எழில், தன்னுடைய அம்மாவை பற்றியும், அவர் சொன்ன வார்த்தைகளை பற்றியும் நினைத்து புலம்பி அழுதார். அப்போது பூஜைக்கு பாக்கியா வந்தார். உடனே எழில், நீ உள்ளே வர வேண்டாம். கிளம்பி போ என்று சொல்ல, பாக்கியாவுக்கு ஒண்ணுமே புரியவில்லை.
பாக்கியலட்சுமி சீரியல்:
பின் எழில், நீ உள்ளே வந்தால் பூஜை நடக்காது. படம் எடுக்க முடியாது என்று சொல்ல, சும்மா விளையாடாதே வா போலாம் என்று பாக்கியா சொன்னார். உடனே எழில், பாக்கியா கையைப் பிடித்து தயவு செய்து நான் வாழ்க்கையில் முன்னேறனும் என்று நினைத்தால் இந்த இடத்தை விட்டு போங்கள் என்று சொல்லி அழ, பாக்கியாவும் மனம் உடைந்து அழுது கொண்டு வெளியே போனார். பின் எழில், தன் படத்திற்கான டைட்டிலில் பாக்கியலட்சுமி என்று வைத்து இருந்தார்.
கடந்த வாரம் எபிசோட்:
அதை பார்த்த உடனே எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். ஆனால், கோபி ஷாக் ஆனார். அப்போது எழில், தன்னுடைய அம்மாவை பற்றி ரொம்ப பெருமையாகவும், சந்தோஷமாகவும் பேசி இருந்தார். இதையெல்லாம் வெளியில் நின்று கேட்ட பாக்யா ஆனந்தத்தில் அழுதார். கோபிக்கு முகமே இல்லை, பயங்கரமாக எழில் மீது கோபப்பட்டார். சந்தோஷத்தில் பாக்கியா அங்கிருந்து சென்றார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் எழில், நீங்கள் நினைத்ததை சாதித்து விட்டீர்கள். என்னுடைய அம்மாவை என் வாயாலேயே வெளியே போன்னு சொல்ல விட்டீர்கள் என்று புலம்பி அழுதார்.
இன்றைய எபிசோட்:
அத்தகு கோபி, எவ்வளவு பண்ணாலும் நீ உன்னுடைய அம்மாவை விட்டே தரவில்லை. அவள்தான் நல்லவள் என்று சொன்னாய் என்கிறார். பின் இருவருமே வாக்குவாதம் செய்கிறார்கள். இன்னொரு பின் வீட்டில் பாக்கியா, ஈஸ்வரிடம் புதிய ஆர்டரை பற்றி பேசுகிறார். ஆனால், எழில் பூஜையில் நடந்த விஷயத்தை ஈஸ்வரி கேட்க அவர் எதுவுமே சொல்லவில்லை. பின் தன்னுடைய மாமியாரை புதிய ஆர்டருக்கு வலுக்கட்டாயமாக ரெஸ்டாரண்ட்க்கு அழைத்து வருகிறார்.
சீரியல் ட்ராக்:
அங்கு விறுவிறுப்பாக வேலைகள் எல்லாமே நடந்து கொண்டிருக்கின்றது. இதை எப்படியாவது கெடுக்க வேண்டும் என்று செஃப் ஆனந்த் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அப்போது பாக்கியா, சமையல் அறையில் இருந்த எல்லோரையும் வெளியே அனுப்பி ஈஸ்வரி, ஆனந்த்தை உள்ளே அழைத்து சென்று கொஞ்ச நேரம் கழித்து வெளியே வருகிறார். அதற்குப்பின் ஈஸ்வரி, பூஜையை நடத்தி எல்லோருக்கு ஆர்டரை அனுப்ப பார்க்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.