பிரம்மாண்டமாக நடக்கும் ராமமூர்த்தியின் 80வது பிறந்தநாள், எழில் வருவாரா? விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கடந்த வாரம் எழிலுக்கு மீண்டும் சினிமா வாய்ப்பு கிடைக்காததை தெரிந்த ஈஸ்வரி, மோசமாக திட்டி இருந்தார். எழில், பாட்டி சொன்னது நினைத்து மாடியில் கண்கலங்கி இருந்தார். இதை பார்த்த அமிர்தா, பாக்கியா இருவரும் எழிலுக்கு ஆறுதல் சொல்லி இருந்தார்கள். அடுத்த நாள் ஜெனி கர்ப்பமாக இருப்பது வீட்டில் எல்லோருக்கும் தெரிந்து சந்தோஷப்பட்டு இருந்தார்கள். உடனே அமிர்தாவை பார்த்து ஈஸ்வரி, நீ எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறாய்? உங்களுக்கு என்று ஒரு குழந்தை வேண்டாமா? என இந்த முறை மோசமாக திட்டி இருந்தார்.
இதனால் அமிர்தா மனமுடைந்து எழில் இடம் சொல்லி இருந்தார். உடனே எழில், தன்னுடைய பாட்டி ஈஸ்வரியிடம் கோபப்பட்டு பேசி இருந்தார். பின் இருவருக்கும் இடையே சண்டை நடந்தது. ஒரு கட்டத்தில் ஈஸ்வரி, உன்னோட பெரியவன் சம்பாதிக்கிறான். இரண்டு குழந்தைக்கு அப்பா ஆகிவிட்டான். நீ என்ன செய்கிறாய்? நிலாவிற்கு மூணு வேளை சாப்பாடு உங்களால் போட முடியுமா? என்று கேட்டு இருந்தார்.
அப்போது பாக்யாவுக்கு கோபம் வந்து, நீ வீட்டை விட்டு வெளியே போ எழில் என்று சொன்னார். இதைக் கேட்டு எல்லோருமே அதிர்ச்சியானார்கள்.
பாக்கியலட்சுமி சீரியல்:
கடைசியில் எழில் வீட்டை விட்டுப் போவதை பார்த்து பாக்கியா மனம் உடைந்து எதுவும் பேசாமல் இருந்தார்.
அமிர்தா- எழில் வீட்டை விட்டு கிளம்புவதை பார்த்து எல்லோருமே கதறி அழுது, வேண்டாம் என்று தடுத்தார்கள். இருந்தும் எழில் தன் முடிவில் மாறவில்லை. எழில் ஹோட்டலில் தங்கி இருக்கிறார். இந்த விஷயத்தை எல்லாம் இனியா தன்னுடைய அப்பா கோபியிடம் சொல்லி அழ, அவர் அதிர்ச்சியாகி பாக்கியாவை திட்டி விட்டு, அமிர்தாவுக்கு போன் செய்து அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து சென்று இருந்தார். கடைசியில் எழில், நீங்கள் இங்கிருந்து கிளம்புங்கள் என்று சொன்னவுடன், கோபி பணத்தை கொடுக்க, எழில் வாங்க மறுக்கிறார்.
சீரியல் கதை:
இன்னொரு பக்கம் பாக்கியா, எழில் ரூமிற்கு போய் அங்கிருக்கும் பொருட்களை பார்த்து அழுதார். பின் அமிர்தாவுக்கு போன் செய்து பேசுகிறார். நேற்று எபிசோடில் கோபி, தன்னுடைய மகன், மருமகள் வீட்டை விட்டு வெளியே போனது குறித்து ராதிகாவிடம் சொல்ல, அவர் எதையுமே கண்டுகொள்ளாமல் சாப்பாடு கொண்டு வந்து வைத்தார். இதனால் கோபி-ராதிகா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது . மறுநாள் எழில்-செழியன் இருவரும் போனில் பேசிக் கொள்கிறார்கள். அந்த சமயம் பார்த்து வந்த கோபி, எழிலை பற்றி செழியனிடம் பேசி இருந்தார். பின் தான் அப்பாவாக போகும் விசயத்தை சொல்ல கோபி சந்தோசப்படுகிறார்.
இன்றைய எபிசோட்:
இன்னொரு பக்கம் வீட்டில் தாத்தாவின் 80 ஆவது நாள் பிறந்தநாளை கொண்டாட எல்லோருமே பேசிக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் இன்றைய எபிசோடில், ஈஸ்வரிடம் இந்த விஷயத்தை சொல்ல ஆரம்பத்தில் அவர் மறுத்தாலும் பிறகு சம்மதித்து விடுகிறார். இன்னொரு பக்கம் கோபி, செழியன் அப்பாவாகும் விஷயத்தை சொன்னவுடன் இருவருக்கும் மீண்டும் சண்டை வருகிறது. கடைசியில் அமிர்தா-எழில் இருவருமே வீட்டில் நடந்ததை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஈஸ்வரி, தாத்தாவின் 80வது பிறந்தநாளுக்கு வரவேண்டும் என்று கூப்பிட, அதற்கு எழில் வர மறுக்கிறார்.
https://www.youtube.com/watch?v=fMAGoxXnJqA
சீரியல் ப்ரோமோ:
உடனே கோபமாக ஈஸ்வரி, நீ வராதே என்று சொல்லி போனை வைத்து விடுகிறார். இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், ராமமூர்த்தியின் 80-வது பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடுகிறார்கள். பிறந்தநாளுக்கு வந்த அனைவரும் ஈஸ்வரி- ராமமூர்த்தியை வாழ்த்துகிறார்கள். ஆனால், எழில் வராததை குறித்து கேள்வி கேட்கிறார்கள். இதனால் மொத்த குடும்பமும் வருத்தப்படுகின்றது. அந்த சமயத்தில் எழில், அமிர்தா இருவருமே வருகிறார்கள். அதை பார்த்தவுடன் ஈஸ்வரி- ராமமூர்த்தி சந்தோஷப்படுகிறார்கள்.