கவுன்சிலரை தாறுமாறாக தாக்கிய செழியன், பாக்கியா நிலைமை என்ன? விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் கோபி, உனக்கு ஏதாவது உதவி வேண்டும் என்றால் தயங்காமல் என்னிடம் கேள் என்றார். அதற்கு பாக்கியா, அத்தை தேவையில்லாமல் வீட்டில் பிரச்சனை செய்தார்கள். அதை மட்டும் கொஞ்சம் அவர்களிடம் எடுத்து சொல்லி புரிய வையுங்கள் என்றவுடன் கோபியும் சரி என்றார். அதற்கு பின் ஈஸ்வரி, கோபி இருவருமே இனியாவை பார்க்க அவருடைய மாமனார் வீட்டுக்கு சென்றிருந்தார்கள். அவர்களை பார்த்தவுடன் இனியா ரொம்ப சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் மூவரும் தனியாக பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஈஸ்வரி, பாக்கியா ரெஸ்டாரண்ட் விஷயமாக பேசி இருந்தார். அதற்கு இனியா, எனக்கு தெரியும் ரொம்ப கஷ்டமாக இருந்தது.
அம்மா எனக்காக எல்லாத்தையும் இழந்து விட்டார் என்று நினைத்தால் வருத்தமாக இருக்கிறது என்று எமோஷனலாக பேசி இருந்தார். அதற்கு ஈஸ்வரி அறிவுரை சொன்னார். அதற்கு பின் ஈஸ்வரி- கோபி இருவரும் காரில் பேசிக்கொண்டு வந்தார்கள். அப்போது ஈஸ்வரி வழக்கம்போல் பாக்கியாவையும் அவருடைய தொழிலையும் ரொம்ப மோசமாக திட்டி பேசிக் கொண்டிருந்தார். கடைசியில் ஹோட்டலில் செல்வியின் மகன் ஆகாஷ், வேலை கேட்க, பாக்கியாவும் சம்மதித்தார். பின் வேலை எல்லாம் முடித்துவிட்டு கிளம்பும் நேரத்தில் கவுன்சிலர் வந்தார். பாக்கியா, நீங்கள் சொல்வதை எல்லாம் இங்கு சமைக்க முடியாது. தேவையில்லாமல் பிரச்சனை செய்யாதீர்கள் என்று சொன்னார். உடனே கவுன்சிலர், இப்படியெல்லாம் பேசாதே, கடை நடத்த முடியாது என்று அங்கேயே உட்கார்ந்து விட்டார்.
பாக்கியலட்சுமி:
நேற்று எபிசோட்டில் கவுன்சிலர் சொல்லும் ஆர்டரை பாக்கியா சமைத்துக் கொடுத்தார். ஆனால், பெரிதாக இந்த முறை தகராறு எதுவும் செய்யவில்லை. பின் வீட்டில் செழியன், ஜெனி வேலை செய்வதை பற்றி பேச, வழக்கம்போல் பாக்கியாவை தான் ஈஸ்வரி வறுத்து எடுத்துக் கொண்டிருந்தார். பின் வீட்டுக்கு வந்த பாக்கியாவிடம் வீட்டு வேலை செய்வதை பற்றி ஈஸ்வரி சொல்லி சண்டை போட்டார். பாக்கியா, இதற்கு நானே ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்றார். மறுநாள் காலையில் பாக்கியா, வீட்டிற்கு புதிதாக வேலை செய்ய ஒரு ஆளை அழைத்து வந்தார். அப்போது ஈஸ்வரி, நான் உன்னை வேலை செய்ய சொன்னால் நீ வேறு ஒருவரை அழைத்து வருகிறாயா என்று சண்டைக்கு போனார்.
நேற்று எபிசோட்:
பின் பாக்கியா, எல்லா வேலைகளையும் இந்த பெண் பார்த்துக் கொள்வாள் என்று சொன்னார். உடனே ஈஸ்வரி, சம்பளத்தை யார் கொடுப்பார் என்று கேட்க, வீட்டு செலவுக்கு செழியன்- எழில் இருவருமே சேர்ந்து கொடுக்கட்டும் என்றவுடன் ஈஸ்வரியால் எதுவுமே பேச முடியவில்லை. அதற்குப்பின் பாக்கியா கிளம்பி ரெஸ்டாரன்ட் சென்று விட்டார். இன்னொரு பக்கம் இனியா, ரெஸ்டாரண்டை எப்ப ஆரம்பிக்க போகிறீர்கள்? என்று கேட்டார். சுதாகர், சீக்கிரத்திலேயே ஆரம்பித்து விடுவேன். என்னிடம் வேலை செய்பவர்களில் ஒருவர் அதை பார்த்துக்கொள்வார் என்றார். உடனே இனியா, நான் ரெஸ்டாரன்ட் மேனேஜ்மென்டை பார்த்துக்கொள்கிறேன் என்றவுடன் ஷாக் ஆனார். நிதிஷ், உனக்கு அதில் ஏதாவது அனுபவம் இருக்கிறதா? தேவையில்லாத விஷயத்தில் தலையிடாதே என்று அவரை திட்டி இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் இனியா, என் அம்மா எதுவும் ரெஸ்டாரண்டை பற்றி பேசவில்லை. வீட்டில் சும்மா இருப்பதால் எனக்கு போர் அடிக்கிறது. அதனால் ரெஸ்டாரண்டை எடுத்து நடத்தலாம் என்று கேட்டேன் என்கிறார். சுதாகர், அதெல்லாம் தேவையில்லை. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்கிறார். இருந்தாலுமே, இனியா ரிப்போர்ட்டர் வேலைக்கு போவதாக சொல்கிறார். இதனால் கோபத்தில் நிதிஷ், இனியாவை திட்டி உள்ளே போக சொல்கிறார். இன்னொரு பக்கம் ஹோட்டலுக்கு செழியன் வந்திருப்பதை பார்த்து பாக்கியா ரொம்ப சந்தோஷப்படுகிறார். பின் பாக்கியா வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் வந்த கவுன்சிலர், வழக்கம் போல் சாப்பாடு ஆர்டர் கொடுக்கிறார். அப்போது கவுன்சிலரின் கூட்டாளி ஒருவர், எதற்காக இந்த ஓட்டலுக்கு தினமும் வரணும்? வேறு எங்காவது போகலாம் என்று கேட்கிறார். உடனே அந்த கவுன்சிலர், இங்குதான் அழகான ஆன்ட்டி இருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
அவர் கணவரை விவாகரத்து செய்து விட்டாலும் அழகாக இருக்கிறார் என்று பாக்கியாவை பற்றி ரொம்ப மோசமாக
பேசுகிறார். இதை எல்லாத்தையும் கேட்ட செழியன் கோபப்பட்டு கவுன்சிலரை தாறுமாறாக போட்டு அடிக்கிறார். பாக்கியாவிற்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. இருவரையும் விலக்கி வைக்கிறார்.
அதற்கு பின் வீட்டிற்கு வந்த செழியன், ஹோட்டலில் நடந்ததை பற்றி சொல்கிறார். அதை கேட்டு எழிலும் சண்டைக்கு போகப் பார்க்கிறார். இதையெல்லாம் பார்த்து ஈஸ்வரி, உன்னால் தான் வீட்டில் நிம்மதி இல்லாமல் போய்விட்டது. தயவுசெய்து அந்த ஓட்டலை இழுத்து மூடி என்று பாக்கியாவை வறுத்து எடுத்துக் கொண்டிருக்கிறார். மறுநாள் காலையில் பாக்கியா ஹோட்டல் திறக்கப் போகிறார். அப்போது அந்த கடையின் ஓனர், கவுன்சிலர் பிரச்சனை செய்வார் என்று கடை திறக்க வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார். இதனால் பாக்கியாவுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது