எழில்-செழியன் வரவால் சந்தோசப்படும் குடும்பம், கவலையில் பாக்கியா, அடுத்து என்ன? பாக்கியலட்சுமி

By subhashini · 4/3/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் பாக்கியா, நீங்கள் எப்போது இந்த வீட்டை விட்டு போகிறீர்கள் என்று கேட்டவுடன் ஈஸ்வரிக்கு பயங்கர கோபம் வந்து சண்டை போட்டார். அதற்கு கோபி, இரண்டு மாதத்திற்குள் நான் கிளம்பி விடுகிறேன் என்று சொன்னார். ஈஸ்வரி, நீ பேசுவது நியாயமா? என் இப்படியே சொல்லியிருந்தால் நானும் சென்று விடுவேன் என்றார். பாக்கியா, நீங்களும் தாராளமாக உன் மகனுடன் செல்லலாம் என்றவுடன் ஈஸ்வரிக்கு இன்னும் கோபம் அதிகமானது. அதற்குப்பின் கோபி, செழியனை தனியாக வரவைத்து அழைத்து பேசி இருந்தார்.

ஈஸ்வரி சாப்பிடாமல் கோபமாகவே இருந்தார். பாக்கியா, எவ்வளவு எடுத்துச் சொல்லியும் ஈஸ்வரி கேட்கவே இல்லை. பின் பாக்கியா ரெஸ்டாரன்ட் கிளம்பி வந்தார். இன்னொரு பக்கம் இனியா, ஆகாசுடன் போன் பேசிக் கொண்டிருந்தார். பாக்கியா போன் செய்துமே அதை பெரிதாக கண்டுகொள்ளாமல் ஆகாஷ் உடன் தொடர்ந்து இனியா போன் பேசிக்கொண்டு இருந்தார். பின் வீட்டிற்கு வந்த கோபி கோபி, தன் அம்மாவை சமாதானம் செய்து சாப்பிட வைத்தார். அந்த சமயம் பார்த்து பாக்கியா வந்தார்.

பாக்கியலட்சுமி:

பின் இனியாவிடம் போன் எடுக்காதது பற்றி பாக்கியா கேள்வி கேட்டார். ஆனால், இனியா ஏதேதோ சொல்ல, பாக்கியா கோபப்பட்டு திட்டி இருந்தார். அதற்குப்பின் பாக்கியா ரெஸ்டாரன்ட் கணக்கை பார்த்துக் கொண்டிருந்தார். உடனே கோபி, காபி போட்டு கொடுத்தார். ஆனால், பாக்கியா அதை பெரிதாக கண்டுகொள்ளாமல் தன்னுடைய வேலை செய்து கொண்டிருந்தார். இதை பார்த்து கோபிக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் ஈஸ்வரி, என் மகனை திருமணம் செய்வதில் உனக்கு என்ன பிரச்சனை? ஏன் இப்படி திமிர் பிடித்து ஆடுகிறாய் என்றெல்லாம் கேட்டார். அதற்கு பாக்கியா, உங்கள் மகனுக்கு வேண்டும் என்றால் மூன்றாவது திருமணம் செய்யுங்கள். என்னால் கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று பேசி இருந்தார். உடனே ஈஸ்வரி கோபத்தில் பாக்கியாவை திட்டிவிட்டு சென்றார். இன்னொரு பக்கம் கோபி, எழிலை வரவைத்து பேசி இருந்தார். அப்போது கோபி, வீட்டிற்கு வந்துவிடு. உன்னுடைய அம்மா நீங்கள் யாரும் இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டு இருந்தார்.

இன்றைய எபிசோட்:

நீங்கள் அவளுடன் இருந்தால் சந்தோஷமாக இருப்பாள் என்று சொன்னார். ஆனால், எழிலுக்கு விருப்பமே இல்லை. இருந்தாலும் கோபியின் கட்டாயத்தினால் சரி என்றார். இன்னொரு பக்கம் ரெஸ்டாரண்டில் இனியா தன்னுடைய அம்மாவிற்கு உதவி செய்து கொண்டிருக்க, அந்த சமயம் பார்த்து ஆகாஷ் வந்தார். இனியா- ஆகாஷ் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த செல்விக்கு பயங்கர கோபம் வந்தது. பின் ஆகாஷை அழைத்து, செல்வி கண்டித்தார். இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் எழில்- செழியன் இருவரும் வீட்டிற்கு வரப் போகிறார்கள் என்று கோபி சொன்னவுடன் ஈஸ்வரி ரொம்ப சந்தோஷப்படுகிறார். ஆனால், பாக்கியா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

பின் இதைப்பற்றி பாக்கியா, செல்வி இடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அவர், என் மகன்களை நான் என்னுடனே வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்க மாட்டேன். அவர்கள் விருப்பப்படி இருக்கட்டும். கோபிக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை என்று புலம்புகிறார். மறுநாள் காலையில் பாக்கியா, எல்லோரும் வீட்டிற்கு வருவதால் மும்முரமாக சமைத்துக் கொண்டிருக்கிறார். முதலில் செழியன்- ஜெனி இருவரும் வந்தார்கள். அவர்களை பார்த்தவுடன் கோபி- ஈஸ்வரி சந்தோஷப்பட்டார்கள். அதற்குப்பின் எழில்- அமிர்தா வருகிறார்கள். மொத்த குடும்பமே கலகலப்பாக இருக்கிறது. ஆனால், பாக்கியா எதுவும் பேசாமல் தன்னுடைய வேலையில் பிஸியாக இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full