செழியன் செய்த வேலையால் கோபப்பட்ட ஜெனி, பாக்கியா சொன்னது- விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

By subhashini · 26/9/2024

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ராமமூர்த்தி நினைவில் இருந்து மொத்த குடும்பமும் கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி வருகிறது. கடந்த வாரம் ராமமூர்த்தியின் திருவுருவப்படத்தை திறக்கும் விழாவில் கோபி, தான் நல்ல அப்பா என்றும், ராமமூர்த்தியை பற்றி திட்டி மோசமாக பேச எல்லோருமே கோபப்பட்டார்கள். பின் எழில் சென்ற புது வீட்டிற்கு பாக்கியா தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி கொண்டு போய் இருந்தார். பின் கல்லூரிக்கு இனியாவை ஈஸ்வரி அழைத்துப் போனார்.

அதை பார்த்த கோபி தன்னோட அம்மாவிடம் எவ்வளவோ பேசி மன்னிப்பு கேட்டார். ஆனால், ஈஸ்வரி மனம் மாறாமல் அப்படியே இருந்தார். இதனால் கோபப்பட்டு கோபி, உங்களை ரொம்ப வெறுக்கிறேன் என்று சொன்னவுடன், நான் வெறுப்பதற்கு கூட உன்னை ஒரு ஆளாக நினைக்கவில்லை என்று சொல்லிவிட்டு ஈஸ்வரி கிளம்பி இருந்தார். வீட்டிற்கு வந்த கோபி, தன் அம்மா சொன்னதை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டு இதற்கெல்லாம் காரணம் பாக்கியா தான் என்று கோபப்பட்டார். பின் இனியா கல்லூரியில் நடந்த நடன போட்டியில் கலந்து கொண்டார். இந்த வாரம் பாக்கியா, சமையலுக்கு ஒரு ஆளை வேலைக்கு எடுக்கிறேன் என்றவுடன் ஈஸ்வரியும் ஒத்துக் கொண்டார்.

பாக்கியலட்சுமி சீரியல்:

மேலும், பாக்கியா கொடுத்த விளம்பரத்தை பார்த்து கோபி தன்னிடம் வேலை செய்யும் நபரை, பாக்யாவிடம் வேலை செய்ய அனுப்பி இருந்தார். இதை அவர் நண்பர் எதற்கு என்று கேட்க, பாக்கியாவை பழிவாங்க இதை செய்கிறேன் சென்று ஆக்ரோஷமாக கோபி பேசி இருந்தார். பின் அந்த நபர் பாக்கியாவின் ரெஸ்டாரண்டில் வேலைக்கு சேர்ந்தார். இதை அறிந்த கோபி ரொம்ப சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் இனியா கல்லூரியில் நடனம் போட்டி நடந்தது. அதில் இனியா நடனமாடி முடித்தார். நேற்று எபிசோட்டில், இனியா தன்னுடைய நடன போட்டிக்காக வீட்டில் பிராக்டீஸ் செய்து கொண்டிருந்தார். ஆனால், நடன போட்டியில் சேர்ந்து இருக்கும் விஷயத்தை இனியா வீட்டில் யாரிடமும் சொல்லவே இல்லை.

நேற்று எபிசோட்:

பாட்டு சத்தத்தை கேட்டு ஈஸ்வரி, ஜெனி இருவருமே என்ன? என்று கேட்க, ஏதோ சொல்லி இனியா சமாளித்தார். பின் பாக்யாவும், இனியா நடனம் ஆடுவதைப் பற்றி விசாரிக்க அவர் சமாளித்து விட்டார். இன்னொரு பக்கம் கோபி, நான் ராதிகாவிற்காக இனி குடிக்க மாட்டேன் என்று தன் நண்பனிடம் சந்தோசமாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது பாரில் தனியாக செழியன் குடித்துக் கொண்டிருப்பதை கோபி பார்த்துவிட்டு விசாரிக்க, ஆபீஸில் பிரச்சனை. சீனியர் நபர்களை எல்லாம் வேலை விட்டு தூக்கி விட்டார்கள் என்று செழியன் சொல்ல, கோபி ஆறுதல் சொல்லி அவரை வீட்டுக்கு கொண்டு வந்து விட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில், செழியன் வந்ததை பார்த்து பாக்கியா சாப்பாடு எடுத்து வைக்கிறார். ஆனால், அவர் வேணாம் என்று மறுத்து எதுவும் பேசாமல் தயங்கி நிற்கிறார். அப்போது பாக்கியாவிற்கு செழியன் குடித்த விஷயம் தெரிந்து கோபப்பட்டு அறிவுரை சொன்னார். ஆனால், அவர் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. அதற்குப்பின் செழியன் ரூமிற்கு போனார். ஜெனியும், செழியன் குடித்து இருப்பதை பார்த்து சண்டை போட்டு அமைதியாகி விடுகிறார். இன்னொரு பக்கம் ராதிகா வீட்டில் கோபி செழியனின் நிலைமை எடுத்து சொல்லும் போது ராதிகா அவரவர்கள் பிரச்சனையை பார்த்துக் கொள்வார்கள் என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

மறுநாள் ஈஸ்வரி, இனியாவை கல்லூரிக்கு அழைத்து செல்கிறார். இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் எதற்கு ஈஸ்வரி வெளியே போகணும் என்றெல்லாம் புரளி பேச, பாக்கியா அவர்களுக்கு பதிலடி கொடுத்துவிட்டு சென்று விடுகிறார். கடைசியில் செழியன் எழுந்து எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்கிறார். பின் பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்டு, ஆபீஸில் பிரச்சனை என்று சொன்னவுடன், இப்போ ப்ரச்சனை சரியாகி விட்டதா? என்று கோபமாக பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full