பாக்கியலட்சுமி கிளைமாக்ஸ் : பாக்கியா- கோபி சேர்ந்தார்களா? எதிர்பார்ப்பில் பாக்கியலட்சுமி

By subhashini · 8/8/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் ஆகாஷ், நான் கீழே உட்கார்ந்து சாப்பிடுகிறேன் என்கிறார். ஆனால், வீட்டில் உள்ள எல்லோருமே அதெல்லாம் வேண்டாம் நீ மேலே உட்கார்ந்து சாப்பிட சொல்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து செல்வி, தன்னுடைய பிள்ளைகளையும் தன்னையும் அவமானப்படுத்தியதை நினைத்து பார்த்து உள்ளுக்குள் வருத்தப்படுகிறார் அதற்குப்பின் ஈஸ்வரி, இனியா விஷயமாக செல்வியிடம் பேசட்டுமா? என்று பாக்கியா இடம் கேட்கிறார். அதற்கு பாக்கியா வேண்டாம் என்கிறார். அப்போது செல்வி, என் மகன் கலெக்டர் ஆகாசுக்கு உங்கள் பேத்தி இனியாவை திருமணம் செய்து தருவீர்களா? என்று கேட்கிறார்.

இரு வீட்டாருமே திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார்கள். அதற்குப்பின் இனியா-ஆகாஷ் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது. மண்டபத்தில் ஆகாஷ்- இனியா இருவருமே மனக்கோலத்தில் ஜோடியாக நிற்க, அதை பார்த்து பாக்கியா குடும்பமே சந்தோஷப்பட்டது. பின் இனியா திருமணத்திற்கு நிதிஷின் அம்மா வந்திருந்தார். அப்போது நிதிஷ் அம்மா, நான் வந்தால் பிரச்சனை ஆகாதா? என்று கேட்க, அதெல்லாம் ஒன்றும் இல்லை வாருங்கள் என்றார் பாக்கியா. பின் இனியாவை பார்த்து நிதிஷ் அம்மா கிப்ட் கொடுத்துவிட்டு இனியா நல்ல பெண். அவளை நன்றாக பார்த்துக் கொள் என்று சொன்னார்.

பாக்கியலட்சுமி:

நேற்று எபிசோட்டில் இனியா, ஆகாஷின் திருமணம் கோலாகலமாக ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று இருக்கிறது. பின் திருமணத்திற்காக ராதிகா, மையு வந்திருந்தார்கள். ராதிகாவை பார்த்து கோபி அன்பாக பேசி வரவேற்றார். அதற்குப்பின் இனியாவை பார்த்து ராதிகா வாழ்த்துக்கள் சொன்னார். பின் பாக்கியா குடும்பத்தில் உள்ள எல்லோரிடமே ராதிகா அன்பாக பேசி இருந்தார். அதற்குப்பின் இனியா- ஆகாஷ் திருமணம் சிறப்பாக நடக்கிறது. திருமணத்திற்கு பிறகு இனியா- ஆகாஷ் சாப்பாடு போது ஒருவர் ஒருவர் பாசமாக ஊற்றிக் கொள்வதை பார்த்து பாக்கியா, கோபி, ராதிகா எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள்.

நேற்று எபிசோட்:

அதற்குப்பின் எல்லோருமே பாக்கியா வீட்டிற்கு போய் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது இனியா -ஆகாஷ் கிளம்பினார்கள். உடனே அமிர்தா-எழில், செழியன்-ஜெனி ஆகியோர் தங்கள் வீட்டிற்கு கிளம்பினார்கள். இப்படி எல்லாருமே கிளம்புவதால் ஈஸ்வரிக்கு கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது என்று எல்லோரையும் அங்கேயே ஈஸ்வரி தங்க சொன்னார் . அதற்கு கோபி, எல்லோரும் அவர்கள் வேலையை பார்க்கட்டும். லீவ் கிடைத்தால் இங்கே வரட்டும். கவலைப்பட வேண்டாம் என்று தன்னுடைய அம்மாவிற்கு ஆறுதல் சொன்னார். பின் சந்தோஷமாக எல்லோரையும் வழி அனுப்பி வைத்தார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் ராதிகா, கிளம்புவதால் பாக்கியா சமைத்து கொடுத்தார். அப்போது ஈஸ்வரி, எல்லோரும் அவர்கள் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். என் மகன் தனியாக இருக்கிறான். இப்போதாவது நீங்கள் இரண்டு பேரும் சேருங்கள். ராதிகா உன் தோழிக்கு எடுத்து சொல் என்கிறார். அதற்கு ராதிகா, அது அவர்களுடைய முடிவு. என்னால் எதுவும் சொல்ல முடியாது என்கிறார். பின் பாக்கியா, இனிமேல் நாங்கள் சேர்ந்து வாழ்வது என்பது நடக்காத விஷயம். நாங்கள் நல்ல நண்பர்களாக இருப்போம். எங்களுடைய பிள்ளைகளுக்கு நாங்கள் பொறுப்பான அப்பா, அம்மாவாக இருப்போம் என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

பின் கோபி, எனக்காக இத்தனை நாட்கள் வாழ்ந்தேன். இனிமேல் நான் என்னுடைய பிள்ளைகளுக்காக வாழப் போகிறேன் என்று சொல்கிறார். இதனால் ஈஸ்வரி எதுவுமே பேச முடியவில்லை. அதற்கு பின் செல்வி வீட்டில் இனியா சந்தோசமாக இருக்கிறார். அப்போது செல்வி, நீ கலெக்டர் ஆனாலும் நான் வேலைக்கு சென்று கொண்டு தான் இருப்பேன். இனியாவை நல்லபடியாக பார்த்துக் கொள் என்கிறார். அதற்கு பின் கோபி, ராதிகா, செல்வ, பாக்கியலட்சுமி ஆகிய எல்லோருமே தனித்தனியாக தங்களுடைய வாழ்க்கையில் கடந்து வந்த பாதையை நினைத்து பார்த்து பெருமைப்படுகிறார்கள். சுபம் என்று இந்த சீரியலை முடிக்கிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full