பாக்கியலட்சுமி சீரியலின் கிளைமாக்ஸ் காட்சி இது தானாம் - அதிருப்தியில் ரசிகர்கள்

By subhashini · 1/8/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இதனால் இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மேலும், இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள்.

இந்த தொடர், குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் குடும்ப பெண்களுக்கு முன் உதாரணமாகவும், எடுத்துக்காட்டாகவும் இருக்கிறது. பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை இந்த சீரியல் உணர்த்துகிறது. தற்போது சீரியலில் இனியா, செல்வியின் மகன் ஆகாஷை காதலிக்கிறார் என்று தெரிந்தவுடன் அவசர அவசரமாக சுதாகரின் மகன் நிதிஷுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள்.

பாக்கியலட்சுமி சீரியல்:

சுதாகர், பாக்கியா ரெஸ்டாரண்டை யாருக்குமே தெரியாமல் அபகரித்து விடுகிறார். இதனால் பாக்கியா மனம் உடைந்து, ஒரு சின்ன ஹோட்டல் ஆரம்பித்திருக்கிறார். பின் பாக்கியா ரெஸ்டாரண்டை ஹோட்டல் சுதாகர் தான் அபகரித்தார் என்ற விஷயம் இனியாவிற்கு தெரிந்து விடுகிறது. இருந்தாலுமே அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை. பின் இனியா, ஆகாஷை காதலித்தார் என்ற விஷயம் நிதிஷுக்கு தெரிந்ததிலிருந்து அவர் நடவடிக்கைகள் சரியே இல்லை. பின் நிதிஷ் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருக்கிறார். ஆனால், போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று தெரியாமல் இனியாவை திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள்.

சீரியல் கதை:

இனியாவிற்கு நிதிஷ் போதை பழக்கத்திற்கு அடிமையாகி கைதான விஷயம் தெரிந்து இரு வீட்டிலும் கலவரம் வெடிக்கிறது. பின் இனியா, நிதிஷ் உடன் சேர்ந்து வாழ வேண்டாம் என்று முடிவெடுத்து விவாகரத்து கேட்கிறார். இன்னொரு பக்கம் சுதாகர், பாக்கியா குடும்பத்தை பழிவாங்க தேவையில்லாத வேலைகள் எல்லாம் செய்கிறார். பின் சண்டையில் நிதிஷ் இறந்து விடுகிறார். இதனால் பழியை ஏற்றுக்கொண்டு கோபி சிறையில் இருக்கிறார். உண்மையை கண்டுபிடிக்க பாக்கியா குடும்பம் போராடுகிறது. அப்போது சுதாகர் குற்றவாளி என்பது தெரிகிறது.

கிளைமாக்ஸ் காட்சி:

இப்படி இருக்கும் நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் உடைய கிளைமாக்ஸ் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, பாக்கியலட்சுமி சீரியலின் இறுதி கட்ட படப்பிடிப்பு காட்சி தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் ஆகாஷ்- இனியாவிற்கு திருமணம் முடிந்தது போல கடைசி காட்சியை முடித்திருக்கிறார்கள். பாக்யாவின் மொத்த குடும்பமும் சந்தோஷமாக ஆகாஷ்-இனியா திருமணத்தை நடத்தி இருக்கிறார்கள். தற்போது இந்த புகைப்படத்தை ரசிகர்கள் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full