சமையலில் பாக்கியாவிடம் சவால் விட்ட கவுன்சிலர், சந்தோஷத்தில் கோபி - விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் சுதாகரின் வீட்டிற்கு கோபி, பாக்கியா இருவரும் போனார்கள். அப்போது கோபி, இனியா- ஆகாஷ் காதலித்த விஷயத்தை பற்றி பேச, நிதிஷ் பயங்கரமாக கோபப்பட்டார். உடனே பாக்கியா, என் ரெஸ்டாரன்ட் விஷயத்தில் அமைதியாக இருந்தேன். அதனால் என் மகளின் வாழ்க்கையில் அமைதியாக இருக்க மாட்டேன் என்று சொன்னார். நிதிஷ், உங்கள் மகள் இன்னமும் ஆகாஷ் உடன் தொடர்பில் தான் இருக்கிறார் என்று இனியாவை பற்றி தவறாக பேசி இருந்தார். இதனால் கோபப்பட்ட பாக்கியா, சுதாகரிடம் கடுமையாக பேசி இருந்தார். உடனே கோபி, பாக்கியாவை அமைதியாகி விட்டு எதுவாக இருந்தாலும் நாம் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று சொன்னார்.
நேற்று எபிசோட்டில் வீட்டிற்கு வந்த பாக்கியா, கோபியிடம் இனியாவின் வாழ்க்கையை நினைத்து புலம்பிக் கொண்டிருந்தார். இதை பார்த்த ஈஸ்வரி, என்னானது? எதற்காக இருவரும் சண்டை போடுகிறீர்கள் என்று கேட்டார். ஆனால், கோபி உண்மையை சொல்லாமல் ஏதோ சொல்லி சமாளித்து விட்டார். இன்னொரு பக்கம் சுதாகரின் வீட்டில் எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது இனியாவிடம் சுதாகர், நீ ஆசைப்பட்ட வேலைக்கு போ.எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னார். இனியாவும் ரொம்ப சந்தோஷப்பட்டார். ஆனால், நிதிசுக்கும் அவருடைய அம்மாவிற்கும் அதில் துளி கூட விருப்பமே இல்லை.
பாக்கியலட்சுமி:
பின் இதைப் பற்றி இனியா தன்னுடைய அம்மாவிடம் போன் பண்ணி சொன்னார். பாக்கியா ரொம்ப சந்தோஷப்பட்டார். அடுத்த நாள் காலையில் இனியா வேலைக்காக தயாராகி சென்றார். அப்போது
நிதிஷின் அம்மா, எதற்காக இப்படி எல்லாம் செய்கிறீர்கள்? இனியா செய்த தவறை மொத்தமாக குடும்பமே மறைத்திருக்கிறது என்று சொன்னார். உடனே சுதாகர், நாம் மட்டும் நிதிஷ் பற்றி எல்லா உண்மையும் சொல்லி விட்டோமா? இப்பதான் அவன் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து வெளியே வந்தார். நம்முடைய பெயர் கெட்டுப் போய்விட்டது. நாம் இனியாவிற்கு பிடித்த சின்ன சின்ன விஷயத்தை செய்தால் எந்த பிரச்சனையும் வராது.
நேற்று எபிசோட்:
நாம் கோபப்பட்டால் இனியாவை அவருடைய வீட்டிற்கு அழைத்து சென்று விடுவார்கள். எல்லாம் எனக்கு தெரியும். நீங்கள் அமைதியாக இருங்கள் என்று சொன்னார். இன்னொரு பக்கம் பாக்கியாவின் ஹோட்டலுக்கு கவுன்சிலர் மீண்டும் வந்து வம்பிழுத்துக் கொண்டிருந்தார். அப்போது பாக்கியாவுடைய கஸ்டமர் ஒருவர், தன்னுடைய அம்மா சமைத்த சமையலை செய்து கொடுக்க சொன்னார். பாக்கியாவும் அதை சமைத்துக் கொடுக்க, அதை சாப்பிட்ட அந்த கஷ்டமர் ரொம்பவே அழுதார். இதை பார்த்து கவுன்சிலரும் எதுவும் சொல்லாமல் தான் சாப்பிட்ட சாப்பாட்டிற்கு காசை கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றார். பின் இனியா தன்னுடைய அம்மாவை பார்க்க வீட்டிற்கு வந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா, இனியாவிற்கு பார்த்து பார்த்து சாப்பாடு பரிமாறிக் கொண்டிருக்கிறார். கோபி தன்னுடைய மகளிடம் ரொம்ப சந்தோசமாக பேசிக் கொண்டிருக்கிறார்.
கோபி, பாக்கியா, இனியா மூவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்து ஈஸ்வரி ரொம்ப சந்தோஷப்படுகிறார். பின் பாக்யாவிடம் ஈஸ்வரி, நீ கோபியை மீண்டும் கல்யாணம் செய்து கொள். இரண்டு பேரும் சந்தோஷமாக இருங்கள். என்னுடைய ஆசையே அதுதான் என்று பேசுகிறார். அதற்கு பாக்கியா, ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். அதற்கு பின் பாக்கியா ஹோட்டலுக்கு வந்த கவுன்சிலர், எனக்கு பிடித்த சாப்பாட்டை சமைத்துக் கொடுங்கள் என்று பாக்கியாவிடம் சொல்கிறார். பாக்கியாவுமே எதுவும் பேசாமல் கவுன்சிலர் சொன்ன சமையலை சமைத்துக் கொடுக்கிறார்.
சீரியல் ட்ராக்:
கவுன்சிலரும் சாப்பிட்டுவிட்டு எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். அப்போது பாக்கியா, நீங்கள் தினமும் வந்து சாப்பிடுங்கள். எந்த பிரச்சினையும் செய்ய வேண்டாம். தேவையில்லாமல் சண்டை வேண்டாம் என்று சொல்கிறார். ஆனால், கவுன்சிலர் அதைப் பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் அமைதியாகவே இருக்கிறார். அதற்குப்பின் பாக்கியாவின் ஓட்டலுக்கு வருபவர்கள் தங்களுக்கு பிடித்த உணவை கேட்பதால் அவர் மனம் கோளாமல் சமைத்து தருகிறார். எல்லோருமே சாப்பிட்டுவிட்டு பாராட்டுகிறார்கள். இதை அறிந்த இனியா, தன்னுடைய அப்பாவிடம் இதைப் பற்றி சொல்கிறார். அவரும் பாக்கியாவிடம் தனக்கு பிடித்த சமையலை சொல்கிறார். பாக்கியாவுமே அதை சமைத்துக் கொண்டு வந்து தருகிறார். அதை சாப்பிட்டு பார்த்து கோபி ரொம்பவே புகழ்ந்து பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.