கோபி-பாக்கியாவை சேர்த்து வைக்க ஈஸ்வரி செய்யும் வேலை, எழில் என்ன செய்யப் போகிறார்? பாக்கியலட்சுமி

By subhashini · 22/2/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் எழில், எல்லோருக்கும் ஸ்வீட் கொடுத்து என்னுடைய படத்தின் வெற்றிக்காக தயாரிப்பாளர் புது பிளாட் கொடுத்து இருக்கிறார் என்று சொன்னார்.
இதை கேட்டவுடன் எல்லோரும் சந்தோஷப்பட்டார்கள். ஆனால், ஈஸ்வரி மட்டும் வருத்தப்பட்டார். அதன் பின் புது வீட்டுக்கு போக எழில் முடிவு செய்தார். ஆனால், ஈஸ்வரி தடுத்தார். உடனே பாக்கியா, என் பிள்ளைகள் எங்கிருந்தாலும் சந்தோஷமாக இருக்க வேண்டும். அவர்களை என் கைக்குள் அடக்கி வைக்க மாட்டேன் என்றெல்லாம் ஈஸ்வரியை எதிர்த்து பேசி இருந்தார்.

இன்னொரு பக்கம் இனியா, ஆகாஷ் உடன் போனில் பேசிக் கொண்டிருக்க, அதை பாக்கியா பார்த்து விட்டார். பாக்கியா, இனியாவிற்கு அறிவுரை செய்தார். இன்னொரு பக்கம் செல்வி, ஆகாஷ் இடம் போனில் மனசை அலைப்பாயாதே, படிப்பில் கவனம் செலுத்து என்று தன்னுடைய குடும்ப சூழ்நிலை எடுத்து சொல்லி புரிய வைத்தார். இந்த முறையும் இனியா தப்பித்து விட்டார். நேற்று எபிசோட்டில் ராதிகா- பாக்கியா இருவரும் போன் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது மையூ தான் வரைந்த புகைப்படங்களை எல்லாம் பாக்கியாவிற்கு காண்பித்து சந்தோஷப்பட்டார்.

பாக்கியலட்சுமி:

இன்னொரு பக்கம் ஈஸ்வரி, சோகமாக உட்கார்ந்து இருந்தார். அப்போது கோபி விசாரிக்க, எல்லோருமே தனித்தனியாக இருக்கிறோம், ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. எல்லோரும் ஒன்றாக இருந்தால் நன்றாக இருக்கும். உன்னுடைய வாழ்க்கை நினைத்தாலும் வேதனையாக இருக்கிறது என்று புலம்பி இருந்தார். கோபி, எதுவாக இருந்தாலும் நான் தனியாக சமாளித்துக் கொள்ள தயாராக இருக்கிறேன் என்றார். அதற்குப்பின் சொந்தக்காரர்கள் பத்திரிக்கை வைப்பதற்காக பாக்கியா வீட்டிற்கு வந்தார்கள். அப்போது பாக்கியா- கோபியை பற்றி விசாரிக்க, ஈஸ்வரி இருவரும் சேர்ந்துதான் வாழ்கிறார்கள் என்று பொய் சொல்லி விட்டார்.

நேற்று எபிசோட்:

அவர்கள் சென்ற பின்பு கோபத்தில் சண்டை போட்டார் பாக்கியா. அப்போது ஈஸ்வரி, இனியா திருமணமாகும் போது நீங்கள் இருவரும் சேர்ந்து இருந்தால் தானே நன்றாக இருக்கும் என்று சொன்னார். அதற்கு பாக்கியா, அது எல்லாம் முடியாது. உங்களுக்காக தான் அவர் இந்த வீட்டில் இருக்க அனுமதித்தேன். மற்றபடி எனக்கும் அவருக்கும் எந்த உறவும் கிடையாது. தப்பி தவறி கூட இனிமேல் நாங்கள் இருவரும் சேர்ந்து இருக்கிறோம் என்று சொல்லக்கூடாது என்று கடுமையாக பேசிவிட்டு சொன்னார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி, எல்லோரும் அவர்கள் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய எபிசோட்:

நீயும் பாக்கியாவும் தான் தனியாக இருக்கிறீர்கள். நீங்கள் மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொன்னவுடன் கோபி ஷாக் ஆகிறார். பின் அவர், இதற்கு பாக்கியா சம்மதிக்க மாட்டார் என்று சொல்கிறார். உடனே ஈஸ்வரி, பாக்கியவை சம்மதிக்க வைப்பது என்னுடைய பொறுப்பு. உனக்கு சம்மதமா என்று கேட்க, கோபி ஒத்துக் கொள்கிறார். பின் ஈஸ்வரி கோவிலுக்கு எழில்- செழியன் இருவரையும் வரவைக்கிறார். அப்போது அவர்களிடம் ஈஸ்வரி, கோபி- பாக்யா திருமணத்தை பற்றி சொன்னவுடன் இருவருமே ஷாக் ஆகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் ஈஸ்வரி, நிலைமையை எடுத்து சொல்லி புரிய வைக்கிறார். செழியன் சம்மதிக்கிறார். ஆனால், எழில், எனக்கு சம்மதம் இல்லை. என் அம்மா மறுமணம் செய்து கொள்ளட்டும். ஆனால், வேறு நபரை செய்து கொள்வதற்கு நானே துணையாக நிற்பேன். கோபியால் என் அம்மா நிறைய அவமானம் பட்டிருக்கிறார் என்று ஆவேசமாக பேசுகிறார். பின் ஈஸ்வரி, பாக்கியா சம்மதித்தால் உனக்கு இந்த திருமணத்திற்கு சம்மதமா? என்று கேட்கிறார். அதற்கு எழில், என் அம்மா சம்மதித்தால் நான் ஒத்துக்கொள்வேன். ஆனால், நான் அவர்கள் எடுக்கும் முடிவுக்கு தான் உறுதுணையாக இருப்பேன் என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full