பாக்கியா செய்த வேலையால் கோபப்பட்ட ஈஸ்வரி, கோபி நிலைமை என்ன? பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் சூழ்ச்சியை அறிந்த பாக்கியா, கோபியிடம் பயங்கரமாக சண்டை போட்டார். உண்மை அறிந்த ராதிகா, எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார். அதற்கு பின் ராதிகா, கோபி செய்த வேலையால் கொந்தளித்து கோபப்பட்டார். இன்னொரு பக்கம் வீட்டில் எல்லோருக்கும் உண்மை தெரிந்தது. பின் பாக்கியா, போலீஸ் ஸ்டேஷனில் கோபி மீது கம்பளைண்ட் கொடுத்தார். பின் பட பூஜைக்கு பாக்கியா வராத காரணம் குறித்த உண்மையை செல்வி சொல்ல, எல்லோரும் ஷாக் ஆனார்கள்.
இந்த வாரம் போலீஸ் கோபி வீட்டிற்கு வந்தது. இதனால் ராதிகா, அவர் அம்மா ரொம்ப ஷாக் ஆகி இருந்தார்கள். பின் பாக்கியா, புகார் கொடுத்த விஷயத்தை சொல்ல கோபி கோபப்பட்டார். இருந்தாலும், கோபியை போலீஸ் கைது செய்தது. இதை பார்த்து ராதிகா எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தார். ராதிகா அம்மா மட்டும் தான் போலீஸிடம் வாக்குவாதம் செய்தார். இதை எல்லாம் பாக்யா வெளியே நின்று வேடிக்கை பார்த்தார். செழியன் மட்டும் போலீஸ் இடம் தன்னுடைய அப்பாவை விட சொல்லி கெஞ்சினார். ஆனால், அவர்கள் ஏற்றுக்கொள்ளவே இல்லை.
பாக்கியலட்சுமி:
அதற்கு பின் வீட்டில் எல்லோரும் பாக்கியாவிடம் வாக்குவாதம் செய்தார்கள். அந்த சமயம் வந்த எழில், அம்மா செய்தது சரிதான் என்று பேச, செழியன்- எழிலுக்கு இடையே சண்டை வந்தது. அப்போது எழில், அம்மாவை பட பூஜைக்கு வர விடாமல் கோபி தான் தடுத்தார் என்று நடந்த உண்மையை சொல்ல, செழியன்- இனியாவால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஈஸ்வரியுமே வாயடைத்துப் போனார். பின் பாக்கியா, நான் செய்தது சரி தான் என்று சொன்னார். நேற்று எபிசோட்டில் கோபத்தில் ஈஸ்வரி, நீ செய்தது தவறு பாக்கியா. எதுவாக இருந்தாலும் பேசி இருக்கலாம் என்று சொன்னவுடன் செழியனும் தன்னுடைய அப்பாவிற்கு ஆதரவாக பேசி இருந்தார்.
நேற்று எபிசோட்:
உடனே பாக்யா, நான் செய்ததில் எந்த ஒரு தப்புமே கிடையாது. 100 சதவீதம் சரிதான் என்று சொல்லிவிட்டு கிளம்பினார். ஈஸ்வரியால் எதுவுமே பேச முடியவில்லை. செழியன் தன்னுடைய அம்மாவை திட்டிவிட்டு சென்றார். இன்னொரு பக்கம் போலீஸ் ஸ்டேஷனில் கோபி, பாக்கியா பற்றி நிறைய குறை சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது செப் ஆனந்த் உண்மையை சொன்னதால் போலீஸ் கோபி மீது கோபப்பட்டது. அந்த சமயம் வந்த அவருடைய நண்பர் செந்தில், கோபி க்கு ஆறுதல் சொல்லி ஜாமினில் எடுப்பதற்கு வேலையை பார்க்கிறேன் என்று சொன்னார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாக்யா, நீ படத்தை கண்டிப்பாக எடுக்க வேண்டும். யாருக்காகவும் நிறுத்த வேண்டாம். என்னை தியேட்டரில் வந்து படம் பார்க்க கூடாது என்று யாராலும் சொல்ல முடியாது என்று அவருக்கு ஆறுதல் சொல்லி இருக்கிறார். பின் கோபி, ஜெயிலுக்கு போனதை நினைத்து செழியன்- ஈஸ்வரி- இனியா வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அப்போது பாக்கியா, சமைத்து வைத்து எல்லோரையும் சாப்பிட கூப்பிட்டார். ஆனால், அவர்கள் கேசை வாபஸ் வாங்கினால் தான் சாப்பிடுவேன் என்று பிடிவாசமாக இருக்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
பாக்கியா, கேசை வாபஸ் வாங்க முடியாது. நான் செய்தது சரிதான் என்று உறுதியாக இருக்கிறார். இதனால் எல்லோருமே பாக்கியாவை திட்டுகிறார்கள். ஆனால், அதை பற்றி பாக்கியா கவலைப்படவே இல்லை. இதை அடுத்து பிரஸ் வீட்டிற்கு வந்து பாக்கியாவை பேட்டி எடுத்து. அதில் நடந்த உண்மையை பாக்கியா சொல்ல, ஈஸ்வரி பயங்கரமாக கோபப்படுகிறார். இன்னொரு பக்கம் கோபி, பாக்யா செய்ததை நினைத்து ரொம்ப கோவப்படுகிறார். அந்த சமயம் வந்த செழியன், அவருக்கு ஆறுதல் சொன்னார். பின் செந்தில், ஜாமினுக்கு ஒரு வக்கீலை அழைத்துக் கொண்டு வருகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.