கோபியை வீட்டை விட்டு வெளியே போக சொல்லும் பாக்கியா, தாண்டவம் ஆடும் ஈஸ்வரி - பாக்கியலட்சுமி

By subhashini · 28/2/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் பிறந்தநாள் விழா சிறப்பாக நடந்தது. விழாவிற்கு வந்த உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லி பரிசு கொடுத்து இருந்தார்கள் . பாக்யாவின் பிறந்தநாளுக்காக இனியா, அவருடன் வேலை செய்தவர்கள்
பேசும் வீடியோவை ரெடி பண்ணி பிறந்தநாள் பரிசாக கொடுத்திருந்தார். இதை பார்த்தவுடன் பாக்கியா ரொம்ப எமோஷனலாக அழுதுவிட்டார்.

அதற்குப்பின் ஈஸ்வரி, பிறந்தநாள் பரிசாக கோபி, பாக்கியாவிற்கு மீண்டும் திருமணம் செய்து வைக்க இருக்கிறேன். அதுதான் நான் அவருக்கு கொடுக்கும் பரிசு என்று சொன்னவுடன் பாக்கியா-கோபி இருவருமே அதிர்ச்சியாகி இருந்தார்கள். அதற்குப்பின் பாக்கியா, நீங்கள் எனக்கு கொடுத்த பரிசுக்கு நன்றி. ஆனால், நான் மீண்டும் அவரை திருமணம் செய்து கொள்வது என்பது நடக்காத ஒன்று. அந்த எண்ணத்தை விட்டு விடுங்கள். நான் என்னுடைய வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறேன் என்று சொன்னவுடன் ஈஸ்வரிக்கு பயங்கர கோபம் வந்தது.

பாக்கியலட்சுமி:

நேற்று எபிசோட்டில் ஈஸ்வரி, பாக்யா முன்பு போல் இல்லை. இரண்டு ரெஸ்டாரன்ட் திறந்த திமிரில் இருக்கிறாள். என்னை மதிப்பதே இல்லை என்று திட்டிக் கொண்டிருந்தார். அதற்கு கோபி, பாக்கியா தெளிவாக இருக்கிறார். இந்த கல்யாணத்தில் அவளுக்கு விருப்பமில்லை என்றால் விடுங்கள். எதற்காக தேவையில்லாமல் கட்டாயப்படுத்துகிறீர்கள் என்று சொன்னார். ஆனால் ஈஸ்வரி, உங்கள் இருவரையும் சேர்த்து வைப்பேன் என்று கோபமாக பேசி இருந்தார். அதற்குப்பின் கோபி, தான் பாக்கியாவிற்கு கொடுத்த கிப்ட்டை பார்த்தார்.

நேற்று எபிசோட்:

என்னுடைய கிப்டை வாங்கி பார்க்க கூட அவளுக்கு மனசில்லை என்று பழசை நினைத்து பார்த்து ரொம்ப பீல் பண்ணி இருந்தார். இன்னொரு பக்கம் இனியா- ஆகாஷ் பேசிக் கொண்டிருக்க, இதை பார்த்தவுடன் செல்விக்கு சந்தேகம் வந்தது. பின் அவர் அதைப்பற்றி ஆகாசிடம் விசாரித்தார். ஆனால், அவர் ஏதேதோ சொல்லி சமாளித்தார். பின் வீட்டுக்கு வந்த பாக்கியாவிடம் ரெஸ்டாரண்டில் நடந்ததை பற்றி ஈஸ்வரி கேட்டார். உடனே பாக்கியா, என் விருப்பம் இல்லாமல் நீங்கள் எப்படி சொல்லலாம். எனக்கு திருமணத்தில் விருப்பமில்லை. எனக்கு தான் அவமானமாக இருக்கிறது என்று சொல்ல, இருவருமே மாறி மாறி வாக்குவாதம் செய்தார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோபி, அம்மா சொன்னது தவறுதான். அம்மா பேசின வார்த்தைக்காக நான் உன்னிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உன்னுடைய விருப்பம் தெரியாமல் அவர் இப்படி பேசியிருக்கக் கூடாது. இனிமேல் இந்த வீட்டில் இந்த மாதிரி பேச்சு வராது என்று பேசுகிறார். இருந்தாலுமே ஈஸ்வரி கேட்காமல் பாக்யாவிடம் சண்டைக்கு போனார். பின் எப்படியோ கோபி சமாதானம் செய்து பாக்கியாவை அனுப்பி விடுகிறார். அதற்குப்பின் ஈஸ்வரியிடம் கோபி, நீங்கள் இந்த திருமணத்தை பற்றி பேசாதீர்கள் என்று தன்னுடைய அம்மாவிற்கு அறிவுரை செய்கிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் கோபி, பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்கிறார். உடனே பாக்கியா, இந்த வீட்டில் நீங்கள் உடம்பு சரியில்லாததால் தான் இருக்க அனுமதித்தேன். நீங்கள் எப்போது இந்த வீட்டை விட்டு போகிறீர்கள் என்று கேட்டவுடன் அவருக்கு பயங்கர ஷாக் ஆகிறது. அந்த சமயம் பார்த்து வந்த ஈஸ்வரி, என் மகனை எதற்கு வீட்டை விட்டு வெளியே அனுப்ப பார்க்கிறார் என்று வழக்கம்போல சண்டை போடுகிறார். உடனே கோபி, இரண்டு மாதத்திற்குள் நான் கிளம்பி விடுகிறேன் என்று சொல்கிறார். ஈஸ்வரி, நீ பேசுவது நியாயமா? என் இப்படியே சொல்லியிருந்தால் நானும் சென்று விடுவேன் என்கிறார். பாக்கியா, நீங்களும் தாராளமாக உன் மகனுடன் செல்லலாம் என்றவுடன் ஈஸ்வரிக்கு இன்னும் கோபம் அதிகமாகிறது. அதற்குப்பின் கோபி, செழியனை தனியாக வரவைத்து அழைத்து பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full