வீட்டில் கலவரத்தை உருவாக்கும் ஈஸ்வரி, பாக்கியா சமாளிக்க போவது எப்படி? பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் ரெஸ்டாரண்டில் வியாபாரத்தை எல்லாம் முடித்துவிட்டு கடையை பாக்கியா மூட போனார். அங்கு வந்த கவுன்சிலர், நான்வெஜ் செய்ய சொல்லி குடித்துவிட்டு தகராறு செய்தார். பாக்கியா- செல்வி இருவருமே எடுத்து சொல்லியும் அவர் கேட்கவில்லை. வேறு வழியில்லாமல் அவர்கள் கேட்டதை செய்து கொடுத்தார்கள். கடையிலேயே உட்கார்ந்து குடித்தார்கள். அப்போது வந்து செல்வியின் மகன் ஆகாஷ், அவரிடம் கேள்வி கேட்கும் போது அவரையுமே எதிர்த்து பேசி சண்டை போட்டார்கள். என்ன சொல்வது என்றே புரியாமல் பாக்கியா அமைதியாக இருந்தார் பின் வேலை முடித்து வீட்டிற்கு பாக்கியா வந்தார். ஆனால், ஈஸ்வரி கதவை திறக்காமல் அமைதியாக இருந்தார்.
நேற்று எபிசோட்டில் பாக்கியா ரொம்ப நேரமாக கதவைத் தட்டியும் ஈஸ்வரி வேண்டுமென்றே திறக்காமல் அமைதியாக இருந்தார். பின் எழில், அம்மா வீட்டுக்கு வராதது பற்றி ஈஸ்வரிடம் கேட்டார். அவர் எனக்கு தெரியாது என்று சொல்லி இருந்தார். பின் ரொம்ப நேரம் கழித்து எழில் வெளியே வந்து பார்த்தால் பாக்கியா இருந்தார். பின் ஈஸ்வரி, லேட்டாக வந்ததால் பாக்கியாவிடம் சண்டை போட்டார். அப்போது ஈஸ்வரி, லேட்டாக வந்தால் கதவை திறக்க மாட்டேன். எந்த பொம்பளையாவது இப்படி செய்வார்களா? என்று ரொம்ப மோசமாக பேசி இருந்தார்.
பாக்கியலட்சுமி:
அவர் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் சென்று விட்டார். மறுநாள் காலையிலும் பாக்கியா நேரத்துடன் இருந்து வேலைக்கு சென்று விட்டார். இதனால் வீட்டில் ஈஸ்வரி, பெரிய பஞ்சாயத்தை செய்து கொண்டிருந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே எவ்வளவு எடுத்துச் சொல்லியுமே ஈஸ்வரி கேட்கவில்லை. ருத்ர தாண்டவம் ஆடி இருந்தார். இன்னொரு பக்கம் பாக்கியா, கவுன்சிலர் செய்த வேலையை கடையின் ஓனரிடம் சொன்னார். ஆனால், அவர் இதெல்லாம் நீங்கள்தான் பார்த்துக் கொள்ளணும். எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்னவுடன் பாக்கியா ஷாக் ஆனார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா, கவுன்சிலர் விஷயத்தில் நம்ம தான் ஏதாவது செய்யணும் பார்த்துக் கொள்ளலாம் என்று செல்வி இடம் சொல்கிறார். அப்போது இனியா ஹோட்டலுக்கு வருகிறார். அவரிடம் பாக்கியா, வீட்டில் எந்த பிரச்சனையும் இல்லை தானே என்று கேட்கிறார். அதற்கு இனியா, நீ பணம் ஏதாவது வாங்கினீர்களா? என்று கேட்கிறார். உடனே செல்வி, அவர்கள் ஒன்னும் பெரிதாக தரவில்லை என்று நடந்ததை சொல்ல வருகிறார். ஆனால், பாக்கியா தடுத்து நிறுத்தி நீ இந்த விஷயத்தை விடு. அம்மாவுக்காக ஏதாவது செய்யணும் என்று நினைத்தால் அந்த ரெஸ்டாரண்டை நீ எடுத்து நடத்து என்று சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் வீட்டில் அமிர்தா, கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அங்கு வந்த ஈஸ்வரி, ஒவ்வொரு வேலைகளையும் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த எழில், எதுக்கெடுத்தாலுமே அமிர்தாவை எதற்கு குறை சொல்கிறீர்கள். இந்த வீட்டில் அதிக வேலை அமிர்தா தான் செய்கிறார். இந்த வீட்டில் ஜெனியும் இருக்கிறார். அவர் எந்த வேலையுமே செய்யவில்லை என்று சொல்கிறார். இதை வெளியில் இருந்த செழியன் கேட்டு வருத்தப்படுகிறார். அந்த சமயம் பார்த்து வந்த பாக்கியா, எனக்கு யார் கையும் நம்பி வேலை செய்ய விருப்பமில்லை.
பாக்கியா-ஈஸ்வரி சண்டை:
தேவையில்லாமல் பிரச்சினை செய்தாதீர்கள் என்று தன்னுடைய மாமியாரிடம் கோபமாக பேசுகிறார். அதற்கு பின் செழியன், நீ வேலை செய்யாததை பற்றி எழில் குறை சொல்கிறார் என்கிறார். இதை கேட்ட ஜெனி, னக்கும் இங்கு இருக்க பிடிக்கவில்லை. அம்மா வீட்டிலேயே இருக்கலாம் என்கிறார். அந்த சமயம் வந்த பாக்கியா, எனக்கு கடையில் நிறைய வேலை இருக்கிறது. நீ கொஞ்சம் அமிர்தாவிற்கு உதவி செய் என்று சொல்கிறார். ஜெனியும் எதுவும் பேச முடியாமல் சரி என்கிறார். பின் பாக்கியா ஹோட்டலுக்கு சாப்பிட கோபி வருகிறார். அப்போது பாக்கியா, கோபிக்கு சாப்பாடு போடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.