கோபியை கைது செய்யும் போலீஸ், பாக்யாவிடம் கோபப்பட்ட ஈஸ்வரி, செழியன் - பாக்கியலட்சுமி

By subhashini · 18/11/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் கோபி செய்த சூழ்ச்சியால் எழில் படத்தின் பூஜைக்கு பாக்கியாவை வரவிடாமல் தடுத்து விட்டார். இதனால் பாக்கியாவும் மனம் உடைந்து அழுது கொண்டு வெளியே போனார். ஆனால், எழில் தன் படத்திற்கான டைட்டிலில் பாக்கியலட்சுமி என்று வைத்து இருந்தார். பின் பாக்கியா ரெஸ்டாரண்டில் புதிய ஆர்டருக்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்தது. அப்போது ஆனந்திற்கு கோபி போன் செய்ய, உண்மையை எல்லாம் பாக்கியா தெரிந்து கொண்டார். இதை கேட்டு எல்லோரும் ஷாக் ஆனார்கள்.

பின் ராதிகா வீட்டிற்கு வந்த பாக்கியா, கோபியிடம் பயங்கரமாக சண்டை போட்டார். அப்போது அவர், என்னுடைய ரெஸ்டாரண்டில் நீங்கள் செய்த வேலை எல்லாம் தெரியும். கெட்டுப் போன சிக்கனை வைத்து என்னை அழிக்க மக்களுடைய உயிரில் விளையாடுவதா? கேவலமா இல்லையா? என்று பேசி இருந்தார். உண்மை அறிந்த ராதிகா, எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார். பின் பாக்கியா, கோபியிடம் சவால் விட்டு வந்தார். அதற்கு பின் ராதிகா, கோபி செய்த வேலையை பற்றி திட்ட, கோபி சமாளித்தார். ஆனால் ராதிகா, பயங்கரமாக கொந்தளித்து கோபப்பட்டார்.

பாக்கியலட்சுமி:

இன்னொரு பக்கம் ஈஸ்வரி, கோபி செய்த வேலையை பற்றி எழில் இடம் சொன்னார். உடனே எழில் கோபப்பட்டு கோபியை சந்தித்து பேசி இருந்தார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது உங்கள் மூலமாக எனக்கு எந்த வேலையும் வேணாம் என்று எழில் சொல்லிவிட்டு வந்தார். இன்னொரு பக்கம் பாக்கியா, போலீஸ் ஸ்டேஷனில் கோபி மீது கம்பளைண்ட் கொடுத்தார். பின் கோபியை பற்றி வீட்டில் ஈஸ்வரி பேசிக் கொண்டிருந்தார். பாக்கியாவும் நடந்ததை சொல்ல செழியன் ஷாக்கானார். உடனே இனியா, பூஜைக்கு வராததை குறித்து பாக்யாவை குறை சொல்லியும் திட்டியும் பேசிக் கொண்டிருந்தார்.

கடந்த வாரம் எபிசோட்:

உடனே ஆத்திரத்தில் செல்வி, எழில் தான் வரக்கூடாது என்று சொன்னவுடன் எல்லோருமே வருத்தப்பட்டார்கள். பின் பாக்கியா நடந்த உண்மையை சொல்ல இனியா, செழியன், ஈஸ்வரியால் எதுவுமே பேச முடியவில்லை. இன்னொரு பக்கம் எழில் தன்னுடைய அப்பா செய்த வேலையை பற்றி அமிர்தாவிடம் சொல்லி ரொம்ப வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருந்தார். மறுநாள் காலையில் போலீஸ் கோபி வீட்டிற்கு வந்தது. இதனால் ராதிகா, அவர் அம்மா ரொம்ப ஷாக் ஆகி இருந்தார்கள். பின் பாக்கியா, புகார் கொடுத்த விஷயத்தை சொல்ல கோபி கோபப்பட்டார்.

இன்றைய எபிசோட்:

இன்றைய இன்றைய எபிசோடில் கோபியை போலீஸ் கைது செய்து வருகிறது. இதை பார்த்து ராதிகா எதுவுமே பேசாமல் அமைதியாக நிற்கிறார். ராதிகா அம்மா மட்டும் தான் போலீஸிடம் வாக்குவாதம் செய்கிறார். பின் கோபியை போலீஸ் ஜீப்பில் ஏற்றும் போது இதை பாக்யா வெளியே நின்று வேடிக்கை பார்க்கிறார். ஈஸ்வரியும் எதுவும் சொல்லாமல் அமைதியாக தான் இருந்தார். செழியன் மட்டும் போலீஸ் இடம் தன்னுடைய அப்பாவை விட சொல்லி கெஞ்சுகிறார். ஆனால், அவர்கள் ஏற்றுக்கொள்ளவே இல்லை.

சீரியல் ட்ராக்:

பின் ராதிகாவின் அம்மா பாக்யாவிற்கு சாபம் பெற்று இருக்கிறார். அதற்கு பின் வீட்டில் பாக்கியா, இதற்கு காரணம் நான் தான் என்று சொன்ன உடன், இனியா-செழியன்- ஈஸ்வரி மூவருமே பாக்கியாவிடம் சண்டை போடுகிறார்கள். அந்த சமயம் வந்த எழில், அம்மா செய்தது சரிதான் என்று பேச, நன்றி கெட்ட தனமாய் நடக்காதே. உனக்கு பட வாய்ப்பு வாங்கி தந்ததே அவர் என்று செழியன் சொன்னார். அதற்கு எழில், அம்மாவை பட பூஜைக்கு வர விடாமல் அவர் தடுத்தார் என்று சொன்னவுடன் எல்லோருமே ஷாக் ஆகி இருந்தார்கள். பின் நடந்த உண்மையை எல்லாம் எழில் சொல்ல செழியன்- இனியாவால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஈஸ்வரியுமே வாயடைத்துப் போனார். பின் பாக்கியா, நான் செய்தது சரி தான் என்று சொல்ல அனைவரும் அமைதியாகி இருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full