தன் அப்பாவின் பிறந்தநாளுக்கு வந்த கோபி, ஆத்திரத்தில் ஈஸ்வரி செய்தது- விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கடந்த வாரம் ஜெனி கர்ப்பமாக இருப்பது வீட்டில் எல்லோருக்கும் தெரிந்து சந்தோஷப்பட்டு இருந்தார்கள். ஆனால், அமிர்தா குழந்தை பெற்றுக் கொள்ளாது குறித்து ஈஸ்வரி மோசமாக திட்டி இருந்தார். இதனால் அமிர்தா மனமுடைந்து எழில் இடம் சொல்ல, எழில் கோபப்பட்டு ஈஸ்வரியிடம் பேசி இருந்தார். பின் இருவருக்கும் இடையே சண்டை நடந்தது. ஒரு கட்டத்தில் பாக்யாவுக்கு கோபம் வந்து, நீ வீட்டை விட்டு வெளியே போ எழில் என்று சொல்ல, எல்லோருமே அதிர்ச்சியானார்கள்.
கடைசியில் எழில் வீட்டை விட்டு வெளியே போனார். இந்த விஷயத்தை எல்லாம் இனியா தன்னுடைய அப்பா கோபியிடம் சொல்லி அழுதார். பின் கோபி, எழில் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து சென்று இருந்தார். ஆனால் எழில் முகம் கொடுத்து கூட பேசவில்லை. பின், தாத்தாவின் 80 ஆவது நாள் பிறந்தநாளை கொண்டாட எல்லோருமே பேசிக் கொண்டிருந்தார்கள். ஈஸ்வரி, தாத்தாவின் பிறந்தநாளுக்கு வரவேண்டும் என்று கூப்பிட, அதற்கு எழில் வர மறுத்தார். உடனே கோபமாக ஈஸ்வரி, நீ வராதே என்று சொல்லி போனை வைத்து விட்டார்.
பாக்கியலட்சுமி சீரியல்:
மேலும், எழில் வராததை நினைத்து ஈஸ்வரி வருத்தப்பட்டு பேசிக்கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் அமிர்தா, நான் வரவில்லை. நீங்கள் போயிட்டு வாங்க என்று சொல்ல, நீ இல்லாத இடத்திற்கு நான் போக மாட்டேன் என்று எழில் அவருக்கு ஆறுதலாக பேசி இருந்தார். பின் ராமமூர்த்தியின் 80 ஆவது பிறந்தநாளை கொண்டாட எல்லோருமே கோவிலுக்கு போய் இருந்தார்கள். இதை வெளியில் இருந்து பார்த்த கோபி, எதற்கு கிளம்புகிறார்கள்? என்ன வீட்டில் விசேஷம்? என்று குழப்பத்தில் செழியனுக்கு கால் செய்தார். ஆனால், அவர் எடுக்கவே இல்லை.
சீரியல் கதை:
கோவிலில் தடபுடலாக தாத்தாவின் பிறந்த நாள் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றது. தாத்தாவின் பிறந்தநாளுக்கு உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் வந்து இருந்தார்கள். அப்போது எழில் வராததை குறித்து கேள்வி கேட்க, ஜெனிக்கு கோபம் வந்து பதிலடி கொடுத்தார். பின் தாத்தா- பாட்டி இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் போது எழில் வந்து நிற்கிறார். இதை பார்த்தவுடன் மொத்த குடும்பமே சந்தோஷப்படுகிறது.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில், கோயிலில் ராமமூர்த்தியின் 80-வது பிறந்தநாள் சிறப்பாக நடைபெற்று இருக்கிறது. அப்போது கோபி, செழியனுக்கு கால் பண்ணி பேசுகிறார். அதற்கு செழியன், எங்கள் தாத்தாவின் பிறந்த நாளை கொண்டாடுகிறோம் என்று சொல்லி போனை வைத்து விடுகிறார். உடனே இதை கோபி சொல்ல, ராதிகா கோபப்பட்டு உங்களுக்கே உங்க அப்பாவோட பிறந்தநாள் தெரியாது. ஆனால், அவருடைய முன்னாள் மருமகள் தெரிந்து கொண்டாடுகிறார்.
சீரியல் ட்ராக்:
இது உங்களுக்கு அசிங்கம் இல்லையா? என்று சொல்ல, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. கடைசியில் கோபி கோவிலுக்கு வருகிறார். கோபியை பார்த்தவுடன் மொத்த பேருமே அதிர்ச்சியாக ராமமூர்த்தி கோபப்பட்டு பேசுகிறார். அப்போது கோபி, நான் வருவேன். யார் கூப்பிடவில்லை என்றாலும் நான் வருவேன் என்று சொல்ல பழனிசாமி சமாதானம் செய்ய பார்க்கிறார். உடனே கோபி, கோபத்தில் பழனி சாமியிடம் சண்டைக்கு நிற்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.