கோபியை நினைத்து வருந்தும் ராதிகா, கோபத்தில் கொந்தளித்த ஈஸ்வரி - விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

By subhashini · 30/11/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் இனியா, உங்கள் வீடியோ பார்த்து எல்லோருமே கிண்டல் செய்தார்கள். உங்கள் இருவர் சண்டையில் எங்களுடைய வாழ்க்கை தான் பாதிக்கப்படுகிறது. நீங்கள் ஏன் அம்மாவை பழிவாங்க இப்படி எல்லாம் செய்தீர்கள்? என்று ரொம்ப எமோஷனலாக அழுது பேசி இருந்தார். இதையெல்லாம் கேட்டு கோபி மனம் உடைந்து விட்டார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த கோபியிடம் ராதிகா சண்டை போட்டார். இதனால் கோபி வீட்டை விட்டு வெளியே போனார்.

பின் காரில் வந்து கொண்டிருக்கும் போது கோபிக்கு நெஞ்சுவலி வந்தது. அவர் நெஞ்சை பிடித்துக் கொண்டு ராதிகாவிற்கு போன் செய்தார். ஆனால், அவர் எடுக்கவில்லை. பின் வேறு வழியில்லாமல் பாக்கியாவுக்கு போன் செய்து கோபி நடந்ததை சொல்ல, பாக்யாவும் நேரில் சென்று கோபி நிலைமை அறிந்து ஹாஸ்பிடலில் கொண்டு போய் சேர்த்தார். பின் இந்த விஷயத்தை எழிலிடம் சொல்ல, அவருமே ஹாஸ்பிடலுக்கு வந்து விட்டார்.

பாக்கியலட்சுமி:

மேலும், ராதிகாவிற்கு தகவலை சொல்ல பாக்கியா போன் செய்தார். ஆனால், அவருடைய போன் ரீச் ஆகவில்லை. கோபியின் உடல்நிலை சீரியசாக இருப்பதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார் மருத்துவர். பின் உண்மை அறிந்த ஈஸ்வரி, செழியன், இனியா எல்லோருமே ஹாஸ்பிடலுக்கு வந்தார்கள். இந்த விஷயத்தை எப்படியாவது ராதிகாவிடம் சொல்ல வேண்டும் என்றார் பாக்கியா. ஆனால், ஈஸ்வரி கோபப்பட்டு திட்டி இருந்தார்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோடில் ஹாஸ்பிடலில் கோபிக்கு மும்முரமாக சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார்கள். என்ன நடக்குமோ? என்ற பயத்தில் ஈஸ்வரி புலம்பி அழுது இருந்தார். இன்னொரு பக்கம் வீட்டில் ராதிகா, கோபி வராததை நினைத்து புலம்பி கொண்டிருந்தார். பின் ராதிகா, கோபிக்கு போன் செய்தார். அதை பார்த்தவுடன் ஈஸ்வரி ஃபோனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். இன்னொரு பக்கம் கோபிக்கு சிகிச்சை நல்லபடியாக அறுவை சிகிச்சை முடிந்தது.

இன்றைய எபிசோட்:

இந்த தகவலை அறிந்து அமிர்தா, ஜெனி எல்லோருமே ஹாஸ்பிடலுக்கு போனார்கள். ஒரு கட்டத்தில் பாக்யா வீட்டிற்கு சென்றார் ராதிகா. ஆனால், அங்கு யாருமே இல்லை. இந்நிலையில் இன்றைய எபிசோட்டில், ஹாஸ்பிடல் எல்லோருமே கோபியை பார்ப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பாக்கியா, வீட்டிற்கு சென்று ஓய்வெடுத்து விட்டு வாருங்கள் என்று ஈஸ்வரியை அழைத்துக் கொண்டு வருகிறார். இன்னொரு பக்கம் ராதிகா கோபியை தேடி அலைந்து கொண்டிருக்கிறார், ஆனால், அவர் எங்குமே கிடைக்கவில்லை.

சீரியல் ட்ராக்:

வீட்டிலும் ஈஸ்வரி, கோபியை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருக்கிறார். இது எல்லாம் பார்த்து செல்விக்கு பயங்கர கடுப்பாகிறது. அதற்கு பின் ஹாஸ்பிடலுக்கு வந்த பாக்கியா, ராதிகாவிற்கு ஃபோன் செய்து வரவைத்து நடந்ததை சொல்கிறார். அதைக் கேட்டவுடன் ராதிகா அதிர்ச்சி ஆகிறார். பின் கோபியை பார்க்க உள்ளே போனார். ஆனால், அங்கு ஈஸ்வரி பயங்கரமாக ராதிகாவிடம் சண்டை போடுகிறார். உடனே எழில், பாக்கியா இருவருமே தடுத்து விடுகிறார்கள். கோபியை நினைத்து ராதிகா ரொம்ப கவலைப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full