பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈஸ்வரி சொன்ன வார்த்தையால் கொதித்து எழுந்த பாக்கியா - பாக்கியலட்சுமி

By subhashini · 23/2/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் இனியா, ஆகாஷ் உடன் போனில் பேசிக் கொண்டிருக்க, அதை பாக்கியா பார்த்து விட்டார். பாக்கியா, இனியாவிற்கு அறிவுரை செய்தார். இன்னொரு பக்கம் செல்வி, ஆகாஷ் இடம் போனில் மனசை அலைப்பாயாதே, படிப்பில் கவனம் செலுத்து என்று தன்னுடைய குடும்ப சூழ்நிலை எடுத்து சொல்லி புரிய வைத்தார். இந்த முறையும் இனியா தப்பித்து விட்டார். நேற்று எபிசோட்டில் ராதிகா- பாக்கியா இருவரும் போன் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது மையூ தான் வரைந்த புகைப்படங்களை எல்லாம் பாக்கியாவிற்கு காண்பித்து சந்தோஷப்பட்டார்.

இன்னொரு பக்கம் ஈஸ்வரி, சோகமாக உட்கார்ந்து இருந்தார். அப்போது கோபி விசாரிக்க, எல்லோருமே தனித்தனியாக இருக்கிறோம், ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. எல்லோரும் ஒன்றாக இருந்தால் நன்றாக இருக்கும். உன்னுடைய வாழ்க்கை நினைத்தாலும் வேதனையாக இருக்கிறது என்று புலம்பி இருந்தார். கோபி, எதுவாக இருந்தாலும் நான் தனியாக சமாளித்துக் கொள்ள தயாராக இருக்கிறேன் என்றார். அதற்குப்பின் சொந்தக்காரர்கள் பத்திரிக்கை வைப்பதற்காக பாக்கியா வீட்டிற்கு வந்தார்கள். அப்போது பாக்கியா- கோபியை பற்றி விசாரிக்க, ஈஸ்வரி இருவரும் சேர்ந்துதான் வாழ்கிறார்கள் என்று பொய் சொல்லி விட்டார்.

பாக்கியலட்சுமி:

அவர்கள் சென்ற பின்பு கோபத்தில் சண்டை போட்டார் பாக்கியா. அப்போது ஈஸ்வரி, இனியா திருமணமாகும் போது நீங்கள் இருவரும் சேர்ந்து இருந்தால் தானே நன்றாக இருக்கும் என்று சொன்னார். அதற்கு பாக்கியா, அது எல்லாம் முடியாது. உங்களுக்காக தான் அவர் இந்த வீட்டில் இருக்க அனுமதித்தேன். மற்றபடி எனக்கும் அவருக்கும் எந்த உறவும் கிடையாது. தப்பி தவறி கூட இனிமேல் நாங்கள் இருவரும் சேர்ந்து இருக்கிறோம் என்று சொல்லக்கூடாது என்று கடுமையாக பேசிவிட்டு சொன்னார். நேற்று எபிசோட்டில் ஈஸ்வரி, எல்லோரும் அவர்கள் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

நேற்று எபிசோட்:

நீயும் பாக்கியாவும் தான் தனியாக இருக்கிறீர்கள். நீங்கள் மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொன்னவுடன் கோபி ஷாக் ஆனார். பின் அவர், இதற்கு பாக்கியா சம்மதிக்க மாட்டார் என்று சொன்னார். உடனே ஈஸ்வரி, பாக்கியாவை சம்மதிக்க வைப்பது என்னுடைய பொறுப்பு. உனக்கு சம்மதமா என்று கேட்க, கோபி எதுவும் சொல்லவில்லை. பின் ஈஸ்வரி கோவிலுக்கு எழில்- செழியன் இருவரையும் வரவைத்தார். அப்போது அவர்களிடம் ஈஸ்வரி, கோபி- பாக்யா திருமணத்தை பற்றி சொன்னவுடன் இருவருமே ஷாக் ஆனார்கள்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் ஈஸ்வரி, நிலைமையை எடுத்து சொல்லி புரிய வைக்க, செழியன் சம்மதித்தார். ஆனால், எழில், எனக்கு சம்மதம் இல்லை. என் அம்மா மறுமணம் செய்து கொள்ளட்டும். ஆனால், வேறு நபரை செய்து கொள்வதற்கு நானே துணையாக நிற்பேன். கோபியால் என் அம்மா நிறைய அவமானம் பட்டிருக்கிறார் என்று ஆவேசமாக பேசி இருந்தார். பின் ஈஸ்வரி, பாக்கியா சம்மதித்தால் உனக்கு இந்த திருமணத்திற்கு சம்மதமா? என்று கேட்க, எழில், ஒத்துக்கொள்கிறார்.

https://www.youtube.com/watch?v=vxd_qkV6Ayk

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பாக்கியாவின் பிறந்தநாளை மொத்த குடும்பமே சந்தோஷமாக கொண்டாடுகிறது. அப்போது ஈஸ்வரி, இந்த பிறந்தநாள் நாளில் ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லப்போகிறேன். கோபி, பாக்கியா இருவரும் மீண்டும் திருமணம் செய்யப் போகிறார்கள் என்று சொன்னவுடன் எல்லோருமே ஷாக் ஆகிறார்கள். உடனே பாக்கியா, நீங்க என்னதான் சொன்னாலும் நான் உங்கள் பையனுடன் சேர்ந்து வாழப்போவதில்லை. சில விஷயங்கள் முடிந்தது தான் என்று பேசுகிறார். அதற்குப்பின் கோபி, எல்லோர் முன்னாடியும் அம்மா இப்படி கேட்டிருக்கக் கூடாது. அவர் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று சொல்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full