கோபிக்காக பாக்கியாவிடம் சண்டைக்குப் போன ஈஸ்வரி, ராதிகா சொன்ன வார்த்தை- பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் கோபி செய்த சூழ்ச்சியை அறிந்து பாக்கியா-ஈஸ்வரி ரொம்ப ஷாக் ஆனார்கள். பின் ராதிகா வீட்டிற்கு வந்த பாக்கியா, கோபியிடம் பயங்கரமாக சண்டை போட்டார். உண்மை அறிந்த ராதிகா, எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார். அதற்கு பின் ராதிகா, கோபி செய்த வேலையை பற்றி திட்ட, கோபி சமாளித்தார். ஆனால் ராதிகா, பயங்கரமாக கொந்தளித்து கோபப்பட்டார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி, கோபி செய்த வேலையை பற்றி எழில் இடம் சொல்ல, அவர் கோபப்பட்டு கோபியிடம் சண்டை போட்டு இருந்தார்.
அப்போது எழில், உங்கள் மூலமாக எனக்கு எந்த வேலையும் வேணாம் என்று சொல்லிவிட்டு வந்தார். இன்னொரு பக்கம் பாக்கியா, போலீஸ் ஸ்டேஷனில் கோபி மீது கம்பளைண்ட் கொடுத்தார். பின் வீட்டில் கோபியை பற்றி ஈஸ்வரி பேசிக் கொண்டிருந்தார். பாக்கியாவும் புகார் கொடுத்தது குறித்து சொல்ல செழியன் ஷாக்கானார். உடனே இனியா, பட பூஜைக்கு வராததை குறித்து கேள்வி கேட்க, ஆத்திரத்தில் செல்வி எல்லா உண்மையும் சொன்னார். இதனால் இனியா, செழியன், ஈஸ்வரியால் எதுவுமே பேச முடியவில்லை.
பாக்கியலட்சுமி:
இன்னொரு பக்கம் எழில் தன்னுடைய அப்பா செய்த வேலையை பற்றி அமிர்தாவிடம் சொல்லி ரொம்ப வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருந்தார். மறுநாள் காலையில் போலீஸ் கோபி வீட்டிற்கு வந்தது. இதனால் ராதிகா, அவர் அம்மா ரொம்ப ஷாக் ஆகி இருந்தார்கள். பின் பாக்கியா, புகார் கொடுத்த விஷயத்தை சொல்ல கோபி கோபப்பட்டார். நேற்று எபிசோடில் கோபியை போலீஸ் கைது செய்தது. இதை பார்த்து ராதிகா எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தார். ராதிகா அம்மா மட்டும் தான் போலீஸிடம் வாக்குவாதம் செய்தார். பின் கோபியை போலீஸ் ஜீப்பில் ஏற்றும் போது இதை பாக்யா வெளியே நின்று வேடிக்கை பார்த்தார்.
நேற்று எபிசோட்:
ஈஸ்வரியும் எதுவும் சொல்லாமல் அமைதியாக தான் இருந்தார். செழியன் மட்டும் போலீஸ் இடம் தன்னுடைய அப்பாவை விட சொல்லி கெஞ்சினார். ஆனால், அவர்கள் ஏற்றுக்கொள்ளவே இல்லை. பின் ராதிகாவின் அம்மா பாக்யாவிற்கு சாபம் விட்டார். அதற்கு பின் வீட்டில் பாக்கியா, இதற்கு காரணம் நான் தான் என்று சொன்ன உடன், இனியா-செழியன்- ஈஸ்வரி மூவருமே சண்டை போனார்கள். அந்த சமயம் வந்த எழில், அம்மா செய்தது சரிதான் என்று பேச, செழியன் எழிலுக்கும் சண்டை வந்தது.
இன்றைய எபிசோட்:
அப்போது எழில், அம்மாவை பட பூஜைக்கு வர விடாமல் அவர் தான் தடுத்தார் என்று நடந்த உண்மையை எல்லாம் செழியன்- இனியாவால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஈஸ்வரியுமே வாயடைத்துப் போனார். பின் பாக்கியா, நான் செய்தது சரி தான் என்று சொன்னார். இந்நிலையில் இன்று எபிசோட்டில் கோபத்தில் ஈஸ்வரி, நீ செய்தது தவறு பாக்கியா. எதற்காக கோபி மீது புகார் கொடுத்தாய்? எதுவாக இருந்தாலும் பேசி இருக்கலாம் என்று சொன்னவுடன் செழியனும் தன்னுடைய அப்பாவிற்கு ஆதரவாக பேசுகிறார். உடனே பாக்யா, நான் செய்ததில் எந்த ஒரு தப்புமே கிடையாது. 100 சதவீதம் சரிதான் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
சீரியல் ட்ராக்:
ஈஸ்வரியால் எதுவுமே பேச முடியவில்லை. செழியன் தன்னுடைய அம்மாவை திட்டிவிட்டு செல்கிறார். இன்னொரு பக்கம் போலீஸ் ஸ்டேஷனில் கோபி, பாக்கியா பற்றி நிறைய குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது செப் ஆனந்த் உண்மையை சொன்னதால் போலீஸ் கோபி மீது கோபப்பட்டது. அந்த சமயம் வந்த அவருடைய நண்பர் செந்தில், கோபியை திட்டி விட்டு ஜாமினில் எடுப்பதற்கு வேலையை பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். இன்னொரு பக்கம் வீட்டில் ராதிகா, கோபி செய்தது மிகப்பெரிய தவறு. நான் அவருக்காக சப்போர்ட் செய்ய மாட்டேன் என்று தன்னுடைய அம்மாவிடம் வாக்குவாதம் செய்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.