மீண்டும் கர்ப்பமான ஜெனி, அமிர்தாவை அசிங்கப்படுத்திய ஈஸ்வரி- விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கடந்த வாரம் இனியா, தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டிக்கு சென்று இருந்தது மிக பெரிய பிரச்சனை ஆகி இருந்தது. இறுதியில் ராதிகா தான் இனியாவை காப்பாற்றி இருந்தார். பின் இதை அறிந்த வீட்டில் உள்ள எல்லோருமே இனியாவை திட்டி இருந்தார்கள். பின் கல்லூரியில் பார்ட்டிக்கு சென்ற மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து வர வேண்டும் என்று நிர்வாகம் சொல்லி இருந்தது.
பின் பாக்யா மற்றும் ஈஸ்வரி கல்லூரி முதல்வரிடம் பேசி இனியாவின் பிரச்சனையை எப்படியோ முடித்து வைத்தார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் இனியா நடந்ததை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு புலம்பி அழுது இருந்தார். கடைசியில் அவர், இறந்து போக முடிவு எடுத்து கடிதம் எழுதி யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியே போக பார்த்தார். அதை பார்த்த பாக்கியா, கடிதத்தை படித்து அதிர்ச்சி ஆகி இனியாவை திட்டி அழுதார். இனிமேல் இந்த தவறு செய்ய மாட்டேன் என்று இனியாவும் சொன்னார். இந்த வாரம் எபிசோடில் கோபி, ராதிகா இடையே சண்டை நடந்தது.
பாக்கியலட்சுமி சீரியல்:
கோபத்தில் ராதிகா, எதற்கு தான் உங்களை திருமணம் செய்து கொண்டேனோ? என புலம்ப, உடனே கோபி, உன்னால் தான் என் வாழ்க்கை இப்படி ஆனது என சொல்ல, அதற்கு, விவாகரத்து கொடுத்து விட்டு நிம்மதியாக உன் குடும்பத்துடனே போய் சேருங்கள் என்று ராதிகா சொன்னார். பின், எழிலுக்கு சரியான வேலை இல்லை என்று ஈஸ்வரி திட்டி இருந்தார். கோபி வழக்கம் போல் தன்னுடைய நண்பருடன் பாரில் குடித்துக்கொண்டு வீட்டில் நடந்ததை எல்லாம் பேச அப்போது புது நபர் ஒருவர் என்ட்ரி கொடுத்தார்.
சீரியல் கதை:
அவரிடம் கோபி, பாக்கியா ரெஸ்டாரன்ட்டை கெடுக்க திட்டம் போடுகிறார். நேற்று எபிசோடில் எழிலுக்கு மீண்டும் சினிமா வாய்ப்பு தேடி சென்றிருந்தார். ஆனால், அங்கு அவரைப் பற்றி தெரிந்து கொண்டு வாய்ப்பு தர முடியாது என்று மறுத்து விடுகிறார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் செழியன், தனக்கு புதிய ஆர்டர் கிடைத்தது என்று சொல்லி சந்தோஷப்பட்டு தன்னுடைய சம்பளத்தையும் அம்மாவிடம் கொடுக்கிறார். அந்த சமயம் பார்த்து எழில் வீட்டுக்கு வந்தார்.
நேற்று எபிசோட்:
அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காததை தெரிந்த ஈஸ்வரி எழிலை பயங்கர மோசமாக திட்டி இருந்தார். எழில் எதுவும் பேசாமல் அழுது கொண்டே சென்று விட்டார். மேலும், எழில் பாட்டி சொன்னது நினைத்து மாடியில் கண்கலங்கி அழுது கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அமிர்தா மற்றும் பாக்கியா அவருக்கு ஆறுதலாக பேசி இருந்தார்கள். இன்னொரு பக்கம் கோபி, குடித்து விட்டு ராதிகா வீட்டில் கண்ணதாசன் பாடலை கேட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் ஜெனி கர்ப்பமாக இருப்பது வீட்டில் எல்லோருக்கும் தெரிந்து சந்தோஷப்படுகிறார்கள்.
இன்றைய எபிசோட்:
ஈஸ்வரி, ஜெனியை கட்டிப்பிடித்து வாழ்த்து சொல்லி சந்தோஷப்படுகிறார். வீட்டில் உள்ள எல்லோருமே ஜெனிக்கு வாழ்த்துக்களை சொல்கிறார்கள். பின் ஜெனி அப்பா, அம்மாவை வரவைத்து விஷயத்தை சொல்கிறார்கள். கடைசியில் அமிர்தாவை பார்த்து ஈஸ்வரி, நீ எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறாய்? உங்களுக்கு என்று ஒரு குழந்தை வேண்டாமா? என வழக்கம்போல் அவரை வம்பிழுத்து பேசுகிறார். ஆனால், இந்த முறை மோசமாக அமிர்தாவை திட்டி விடுகிறார். அமிர்தாவும் எதுவும் பேச முடியாமல் அழுது கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது