ராதிகாவை சந்தித்து ஈஸ்வரி சொன்ன வார்த்தை, கொந்தளித்த கோபி - விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

By subhashini · 17/6/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் கோபி, வீட்டில் சொல்லாத வந்ததை பற்றி விசாரித்தார். அதற்கு இனியா, நான் நிதீஷுக்கு போன் செய்தேன். அவர் எடுக்கவில்லை. இதை சொன்னால் நீங்கள் வருத்தப்படுவீர்கள் தான் நான் சொல்லவில்லை என்று சொன்னார். அதற்குப்பின் இனியாவை அழைத்துக் கொண்டு பாக்கியா, கோபி, ஈஸ்வரி மூவருமே சுதாகரின் வீட்டிற்கு சொன்னார்கள். அங்கு ஈஸ்வரி, கோபி இருவருமே இனியா செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்கிறார்கள். சுதாகர், அதெல்லாம் தேவையில்லை. இனிமேல் எங்கு சென்றாலும் சொல்லிட்டு போகட்டும் என்று சொன்னார். அப்போது நிதிஷின் அம்மா, உங்கள் இருவருடைய உறவு பற்றி எனக்கு புரியவே இல்லை.

விவாகரத்து ஆகியும் எப்படி இருவரும் ஒரே வீட்டில் இருக்கிறீர்கள் என்று கேட்டார். உடனே பாக்கியா, நாங்கள் தனி தனி வீட்டில் தான் இருக்கிறோம். எங்கள் இருவருக்கும் இடையே ஒன்றும் இல்லை. நீங்கள் தேவையில்லாத யோசிக்க வேண்டாம் என்று சொன்னார். அதற்குப்பின் இனியாவிடம் சுதாகர், ஏன் இப்படி செய்தாய்? என்று கேட்க, அதற்கு இனியா நடந்ததை சொன்னார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி, பாக்கியா- கோபி இருவரிடமே மீண்டும் திருமணம் செய்து கொள்வதை பற்றி பேசி இருந்தார். கோபி முடியாது என்று அங்கு இருந்து கிளம்பி வந்தார். பாக்கியா, முடிந்துபோன விஷயத்தை பேசாதீர்கள். உங்கள் மகனுக்கு நீங்கள் வேறு ஒரு கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்று சொன்னார்.

பாக்கியலட்சுமி:

நேற்று எபிசோட்டில் பாக்கியா தன்னுடைய கடையில் பாடுபவர்களுக்கு 30% டிஸ்கவுண்ட் என்று போஸ்டர் ஓட்டினார். இதைப்பற்றி தன் மகளிடம் சொல்லியும் சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி, கோபி- ராதிகாவை மீண்டும் சேர்த்து வைப்பதற்காக ராதிகாவிற்கு ஃபோன் செய்து பேசி இருந்தார். ராதிகா, நான் சென்னைக்கு தான் ஒரு வேலை விஷயமாக வந்திருக்கிறேன் என்று சொன்னார். உடனே ஈஸ்வரி, நான் சந்திக்கலாமா? உன்னிடம் பேச வேண்டும் என்றார். அதற்கு ராதிகாவும் ஒற்றுக்கொண்டார். இன்னொரு பக்கம் ஹோட்டலுக்கு வந்த கவுன்சிலர் போஸ்டரை பார்த்து நாங்கள் நன்றாக பாடுவோம் என்று அட்டகாசம் செய்து கொண்டிருந்தார்கள்.

நேற்று எபிசோட்:

பாக்கியா கோபப்படாமல் சூப்பராக இருக்கிறதுஎன்று சொல்லி சாப்பாடு போட்டு டிஸ்கவுண்ட் செய்து மீதி பணத்தை கொடுத்தார். கவுன்சிலரால் எதுவுமே பேச முடியவில்லை, அங்கிருந்து சென்று விட்டார்.
இன்னொரு பக்கம் நிதீஷ் போதைக்கு அடிமையாகி பைத்தியம் பிடித்தவன் போல் ரூமில் பேசிக் கொண்டிருந்தார். இனியாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. பின் நிதிஷின் அம்மா, சுதாகரிடம் பழையபடி அவன் அந்த பழக்கத்திற்கு சென்று விட்டான். பயமாக இருக்கிறது என்று புலம்ப, சுதாகர் ரூமிற்கு போனார். அப்போது இனியா, அவருக்கு குடிக்கும் பழக்கம் இருக்கிறதா? என்றெல்லாம் கேட்டார். சுதாகர், ஏதோ சொல்லி சமாளித்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி, ராதிகாவை ரெஸ்டாரண்டில் சந்தித்து பேசுகிறார். அப்போது ஈஸ்வரி, நீ தனியாக இருக்கிறாயா? நான் உன்னை தவறாக புரிந்து கொண்டேன். நீயும் கோபியும் சேர்ந்து வாழ விடாமல் தடுத்துவிட்டேன். கோபி தனியாக ரொம்ப கஷ்டப்படுகிறான். நீ மீண்டும் கோபியுடன் சேர்ந்து வாழுவாயா? என்று கேட்கிறார். இதைக் கேட்டவுடன் ராதிகாவிற்கு கோபம் வருகிறது. பின் ராதிகா, நான் என் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கிறேன்.

சீரியல் ட்ராக்:

இனி திருமணம் நான் செய்ய போவதில்லை. தயவு செய்து இதைப் பற்றி பேசாதீர்கள் என்று சொல்லி விடுவதால் ஈஸ்வரியால் எதுவுமே பேச முடியவில்லை அங்கிருந்து கிளம்பி விடுகிறார். அதற்கு பிறகு ராதிகா, கோபிக்கு போன் செய்து வரவைத்தார். பின் ஈஸ்வரி தன்னிடம் சொன்னதை எல்லாத்தையும் கோபியிடம் சொல்கிறார். உடனே கோபி, ராதிகாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு வீட்டிற்கு வருகிறார். அப்போது ஈஸ்வரிடம் கோபி, எதற்காக ராதிகாவை சந்தித்து பேசினீர்கள். நான் உங்களிடம் திருமணம் கேட்டேனா? நீங்கள் தேவையில்லாததை செய்யாதீர்கள் என்று ஈஸ்வரிடம் கோபப்படுகிறார். அந்த சமயம் பார்த்து பாக்கியா வந்து விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full