ராதிகா-கோபியை பிரிக்க ஈஸ்வரி போட்ட திட்டம், பாக்கியா என்ன செய்ய போகிறார்? பாக்கியலட்சுமி

By subhashini · 24/12/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் ராதிகா-கோபி இடையே வாக்குவாதம் நடக்க, கோபிக்கு திடீரென்று நெஞ்சுவலி வந்தது. இதனால் எல்லோருமே பதறி போனார்கள். இனியா, உங்களால் தான் எங்க அப்பாவிற்கு இந்த நிலைமை. தயவு செய்து எங்க அப்பா வாழ்க்கையை விட்டு சென்று விடுங்கள். என்று பேச, கோபத்தில் பாக்கியா, இனியாவை அடித்து விட்டார். பின் வீட்டிற்கு வந்த கோபி, ராதிகாவிடம் எதுவும் பேசாமல் அமைதியாக ஓய்வெடுக்க போனார். ஈஸ்வரி, ராதிகாவை ரொம்ப மோசமாக திட்டி அனுப்பி இருந்தார்.

பின் வேகவேகமாக எல்லா துணிகளையும் பேக் செய்த ராதிகா, இங்கிருந்து கிளம்பலாம் என்று சொல்ல, அவருடைய அம்மா தடுத்தார் ஆனால், ராதிகா கேட்கவில்லை. கோபி வீட்டில் நடந்ததை சொல்லி வருத்தப்பட்டு பேசி இருந்தார் ராதிகா. அதற்கு அவர் அம்மா, தன் மகளின் வாழ்க்கை நினைத்து வேதனைப்பட்டார். பின் இனியா டான்ஸ் காம்பெடிஷன் நடந்தது. எல்லோருமே சந்தோஷமாக கல்லூரிக்கு போனார்கள். இனியாவுக்கு கோபி என்கரேஜ் செய்து அனுப்பி வைத்தார். பின் இனியா சூப்பராக நடனமாடி இருந்தார். அதை பார்த்து மொத்த குடும்பமே சந்தோஷமாக கைதட்டி ரசித்தது.

பாக்கியலட்சுமி:

இதையெல்லாம் டிவியில் ராதிகா பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால், அவர் அம்மா தேவை இல்லாமல் பாக்கியாவை பற்றி தவறாக பேசி இருந்தார். நேற்று எபிசோட்டில் இனியா கல்லூரியில் நடனப்போட்டி நன்றாக நடந்து முடிந்தது. அதில் முதல் ஃபைனலிஸ்டாக இனியா தேர்வாகியிருந்தார். அப்போது அவர் மேடையில் தன்னுடைய அம்மா, அப்பா இருவரையும் அழைத்துக் கொண்டு போய் பேசி இருந்தார். இதையெல்லாம் டிவியில் பார்த்த ராதிகா, வருத்தப்பட்டு கொண்டிருந்தார். பின் ராதிகா வீட்டிற்கு வந்த பாக்கியா, மயூவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி, பரிசு கொடுத்தார்.

நேற்று எபிசோட்:

அப்போது ராதிகா, இனியா கல்லூரி விழா மேடையில் நீங்கள் இருவரும் ஒன்றாக இருந்ததை பார்த்தேன் என்று சொல்ல, இனியாவின் அப்பாவாகவும், அம்மாவாகவும் தான் அங்கு இருந்தோம். மற்றபடி வேறு எதுவுமே இல்லை. எல்லாம் மாறும் நம்பிக்கையாக இருங்கள் என்று சொல்லிவிட்டு பாக்கியா கிளம்பினார். அதற்குப் பின் கோபி, எல்லோருக்குமே சாப்பாட்டை ஹோட்டலில் வாங்கிக் கொண்டு வந்து தந்தார். ஆனால், பாக்யா அதை வாங்கிக்கொள்ளவில்லை.

இன்றைய எபிசோட்:

பின் மயூ பர்த்டேவிற்கு கிளம்பிய கோபியை, ஈஸ்வரி- இனியா எல்லோருமே போகவிடாமல் தடுத்தார்கள். இதையெல்லாம் பார்த்து பாக்யாவிற்கு பயங்கர கோபம் வந்தது. இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மயூ கோபியை பார்த்து பேச வேண்டும் என்று ரொம்ப ஆசையாக அவர் வீட்டு வாசலில் இருக்கிறார். ஆனால், யாருமே வெளிவரவில்லை. அந்த சமயம் வந்த ராதிகா, வீட்டிற்கு போகலாம்என்று மயூவை அழைத்து வருகிறார். பின் மையூ நண்பர்கள் எல்லாம் பிறந்தநாள் விழாவிற்கு ராதிகா அழைக்கிறார் இன்னொரு பக்கம்
கோபி, மயூவிற்காக பரிசு வாங்குவதை பற்றி தன்னுடைய அம்மாவிடம் சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

உடனே அவர், நாம குலதெய்வ கோவிலுக்கு போகணும். அதெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று வேண்டுமென்று வீட்டில் எல்லோரிடமும் சொல்ல, கோபியால் எதுவும் பேச முடியவில்லை. அதற்கு பாக்யா, நான் வரவில்லை. நீங்கள் போங்கள். எனக்கு வேலை இருக்கிறது என்று சொன்னவுடன் ஈஸ்வரி விவாதம் செய்கிறார். ஆனால், பாக்கியா முடியாது என்று மறுத்து விட்டார். கடைசியில் செழியன், இனியா, ஈஸ்வரி,கோபி தான் கோயிலுக்கு போகிறார்கள். இன்னொரு பக்கம் கோபி வருவார் என்ற ஆசையில் ராதிகா, மையூ எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full