மீண்டும் கோபிக்கு நெஞ்சுவலியா? ஈஸ்வரி சொன்ன வார்த்தையால் பாக்கியா எடுக்கும் முடிவு என்ன? பாக்கியலக்ஷ்மி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் தனக்கு கிடைத்த ஆர்டரை பற்றி பாக்கியா வீட்டில் சொல்ல, கோபி ஐடியா கொடுத்தார். இதை கேட்டு எல்லோருமே பாராட்ட, பாக்கியா மட்டும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். பின் பார்க்கில் கோபி, உனக்குள் நிறைய திறமைகள் இருக்கு. நான் உன்னை சரியாக புரிந்து இருந்தால் நம்ம ரெண்டு பேரும் பிரிந்து இருக்கவே மாட்டோம் என்று சொல்ல, பாக்கியா கோபப்பட்டு பேசி இருந்தார். இதை எல்லாம் கேட்டு ராதிகா மனம் உடைந்து அங்கிருந்து கிளம்பி விட்டார். அதன் பின் பாக்கியா வீட்டிற்கு வந்த ராதிகா, ஏன் அங்கு வரவில்லை என்று கேட்டார்.
அதற்கு கோபி, இங்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது. உடம்பு சரியானவுடன் நான் வந்து விடுகிறேன். என்னுடைய அம்மா, பிள்ளைகள் நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள் என்று தன்னுடைய குடும்பத்தை பற்றியே பேசி இருந்தார். இதனால் ராதிகாவிற்கு இன்னும் கோபம் அதிகமாகி வெளியில் வந்தார். அப்போது ஈஸ்வரி, நீ கோபியை விவாகரத்து செய்துவிடு. இனி உன்னுடன் அவன் வரமாட்டான் என்று சொல்ல, ராதிகா இன்னும் கோபப்பட்டு கிளம்பி விட்டார். பின் பாக்கியா, காபி கொடுத்துவிட்டு உங்களுடைய உடம்பு எப்படி இருக்கிறது என்று கேட்டு இருந்தார்.
பாக்கியலட்சுமி:
அதற்கு கோபி, உடம்பு நன்றாக இருக்கிறது என்று சொன்னார். உடனே பாக்கியா, எப்போது உங்க வீட்டுக்கு போகிறீர்கள்? உங்களால் ராதிகா ரொம்ப கஷ்டப்படுகிறார் என்று கேட்க, கோபியால் எதுவுமே பேச முடியவில்லை. நேற்று எபிசோட்டில் பாக்கியா, உங்களுக்கு ஒரு வாரம் டைம் கொடுக்கிறேன். தயவுசெய்து இந்த வீட்டை உங்களுடைய வீட்டிற்கு போங்கள் என்று சொன்னவுடன் கோபியின் முகமே மாறி விட்டது.
மறுநாள் காலையில் கோபி, பாக்கியாவை இம்ப்ரஸ் செய்வதற்காக காபி எல்லாம் கொண்டு வந்து கொடுத்து பேசி இருந்தார்.
நேற்று எபிசோட்:
பாக்கியா அதை கண்டுகொள்ளவில்லை. இருந்தும் விடாமல் கோபி பேசி கொண்டே இருந்ததால், கோபத்தில் பாக்யா, காய்கறிகளை வேகமாக கட் பண்ணி இருந்தார். இதை பார்த்தவுடன் கோபி அங்கிருந்து சென்று விட்டார். அதற்குப் பிறகு கோபி கொடுத்த காபியை வாஷ்பேஷனில் ஊத்தி விட்டு பாக்கியா வெளியே போனார். அந்த சமயம் பார்த்து மையூ அங்கு வர, இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். உடனே அங்கு வந்த ராதிகா, பாக்கியாவை பற்றி மோசமாக பேசி இருந்தார். வேதனையில் வீட்டுக்குள்ளே வந்த பாக்கியா, எல்லோரும் கலகலப்பாக பேசுவதை பார்த்துவிட்டு இன்னும் கோபப்பட்டார்.
இன்றைய எபிசோட்:
பின் கோபியிடம் பாக்கியா, உங்களால் எல்லோருடைய வாழ்க்கையும் நாசமாகிறது. வீட்டை விட்டு கிளம்புங்கள் என்றார். உடனே ஈஸ்வரி, கோபிக்காக சப்போர்ட் செய்து பேசி இருந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி, அவனுக்கு உடம்பு சரியாகட்டும். அப்புறம் பேசிக் கொள்ளலாம் என்று சொல்கிறார். பாக்கியா, அது எல்லாம் முடியாது. எனக்கு நிம்மதியே இல்லை. தயவுசெய்து இவரை வீட்டை விட்டு வெளியே போக சொல்லுங்கள் என்று கிளம்பி விடுகிறார். பின் கோபி, பாக்கியா சொல்வது சரி. நான் கிளம்புகிறேன் என்று சொல்லும் போது அவருக்கு நெஞ்சுவலி வந்தது போல கீழே உட்காருகிறார்.
சீரியல் ட்ராக்:
உடனே மருத்துவரை வரவைத்து பார்க்கிறார்கள். அவர், டென்ஷனால தான் அவருக்கு வலி ஏற்பட்டிருக்கிறது. கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று செல்கிறார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த பாக்கியாவிடம் ஈஸ்வரி, நீ போனதுக்கு பிறகு அவனுக்கு நெஞ்சு வலி வந்துவிட்டது. தயவுசெய்து என் மகன் உயிரை காப்பாற்று. அவனை வீட்டை விட்டு மட்டும் வெளியே அனுப்பாதே. என் மகன் மீது போட்ட கேஸை வாபஸ் வாங்கி விடு. நான் உன்னிடம் மடிப்பிச்சை கேட்டுக்கொள்கிறேன் என்று கதறி அழுகிறார். பாக்யா எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.