இனியாவால் மையூவை அசிங்கப்படுத்திய ஈஸ்வரி, கோபத்தில் ராதிகா - விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

By subhashini · 7/1/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் பாக்கியா சமைத்துக் கொண்டிருக்க, அங்கு வந்த ராதிகா, நானும் சமைத்துக் கொள்கிறேன் என்றவுடன் பாக்கியா எதுவுமே சொல்லவில்லை. பின் இருவருமே கலகலப்பாக பேசி சமைத்துக் கொண்டிருந்தார்கள். இதை பார்த்து ஈஸ்வரிக்கு பயங்கர கோபம் வந்தது. ஆனால், கோபி மட்டும் ரொம்ப சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் கோபி, பாக்யாவிடம் வாடகை பணத்தை கொடுத்தார். பின் எல்லோரும் வீட்டில் ஒன்றாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது ராதிகா வந்தவுடன் ஈஸ்வரி கோபப்பட்டார். ஆனால், ராதிகா-கோபியை உட்கார்ந்து சாப்பிட சொன்னார் பாக்கியா.

அப்போது ராதிகா சமையலை பார்த்தவுடன் எல்லோருமே ஷாக் ஆனார்கள். கோபியால் எதுவும் சொல்லமுடியவில்லை. உடனே ஈஸ்வரி, இதெல்லாம் ஒரு சாப்பாடா? உடம்பு முடியாதவனுக்கு இது தருவதா? என்று கேட்க, ராதிகாவுக்கு கோபம் அதிகமானது. மையூ, கோபியால் எதுவுமே பேச முடியவில்லை, வேறு வழியில்லாமல் சாப்பிட்டார்கள். பின் இனியா, ராதிகா வீட்டிற்கு வந்தது பற்றி தன்னுடைய அப்பாவிடம் பேச போக, அவர் தன்னுடைய உடல்நிலை பற்றி பேசிக்கொண்டிருப்பதால் எதுவும் பேசாமல் அமைதியாக வந்து விட்டார்.

பாக்கியலட்சுமி:

கடந்த வாரம் ஈஸ்வரி- கோபி இருவருமே பாக்கியலட்சுமி மாற்றத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.
நேற்று எபிசோட்டில் பாக்கியா, பொங்கல் ஆப்பர் போட்டு விடலாம் என்றார். அதற்கு ராதிகா, என்ன ஆப்பர் போடுகிறீர்கள்? என்று கேட்க, உடனே ஈஸ்வரி, ராதிகா சமையலை பற்றி வம்பு இழுத்தார். பின் ராதிகா- ஈஸ்வரி இடையே வாக்குவாதம் அதிகமானது. அப்போது ஈஸ்வரியை தனியாக அழைத்து சென்ற ராதிகா, என் விஷயத்தில் தலையிட்டால் அவ்வளவு தான் என்று மிரட்டி இருந்தார். ஈஸ்வரியால் எதுவும் பேச முடியவில்லை.

நேற்று எபிசோட்:

அதற்குப்பின் கோபி வந்தவுடன் பேச்சை மாற்றி அங்கிருந்து வந்தார் ராதிகா. பின் ரூமிற்கு வந்த ராதிகா, நம் விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று உங்கள் அம்மாவிடம் சொல்லுங்கள் என்றார். கோபியும் ஒத்து கொண்டார். அதற்குப்பின் ஈஸ்வரி, ராதிகா தன்னை மிரட்டியதை பற்றி பாக்கியாவிடம் சொன்னார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி, கோபியை வாக்கிங் போகலாம் என்று அழைக்கிறார். அப்போது ராதிகா, நான் அழைத்துப் போகிறேன் என்று சொன்னார். ஈஸ்வரி தடுத்துமே ராதிகா கேட்கவில்லை.

இன்றைய எபிசோட்:

பின் ராதிகா- கோபி இருவரும் வாக்கிங் போனார்கள். ஆனால், வேகமாக கோபியால் நடக்க முடியவில்லை. அவர் ஒரு இடத்தில் உட்கார்ந்து விடுகிறார். அப்போது அங்கு வந்த பாக்கியாவை பார்த்தவுடன் ராதிகா சேர்ந்து நடக்கிறார். பின் ஈஸ்வரி, பார்க்குக்கு வந்துவிடார். கோபி உட்கார்ந்து இருப்பதை பார்த்த ஈஸ்வரி, ராதிகாவை பற்றி கோல் மூட்டி கொண்டு இருக்கிறார். பின் வீட்டிற்கு வந்த கோபி, மையூவிற்கு பாடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதை பார்த்தவுடன் இனியாவுக்கு கோபம் வந்தது.

சீரியல் ட்ராக்:

உடனே அவர், தன்னுடைய அப்பாவிடம் கல்லூரியை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். ஆனால், கோபி மையூவுக்கு பாடம் சொல்லி கொடுக்கிறார். இதனால் ஈஸ்வரி-இனியாவுக்கு கோபம் வந்து கத்துகிறார்கள். ஆத்திரத்தில் ஈஸ்வரி, மையூவை மோசமாக பேசி விடுகிறார். இதை பார்த்தவுடன் ராதிகா, தன்னுடைய மகளை அழைத்துக் கொண்டு போய் பாடம் சொல்லித் தருகிறார். கோபியும் இப்படி எல்லாம் நடந்து கொள்ளாதீர்கள் என்று தன்னுடைய அம்மாவிற்கு அறிவுரை சொல்லிவிட்டு செல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full